மலர்கள் மலர்ந்தால்
இயற்கை அழகாகும்
மலர்கள் உதிர்ந்தால்
மண்ணை அழகாக்கும்
இலைகள் துளிர்த்தால்
நம்பிக்கை வசமாகும்
இலைகள் விழுந்தால்
சருகாகி உரமாகும்
காய்கள் காய்த்தால்
தன் மதிப்பை உயர்த்தும்
காய்கள் கனிந்தால்
சுவை தரும் கனிகளாகும்
கிளைகள் படர்ந்தால்
விருட்சமாக உருமாறும்
கிளை முறிந்தால்
சமையலுக்கு விறகாகும்
ஆயுள் வரை பறவைகளுக்கு
அடைக்கலம் தரும்
பட்டுப் போனாலும்
சுள்ளிகள் கூடாகும்
விதையின் வாரிசும்
மரமே
விதையின் தாயும்
மரமே
மரம் என்பது
ஒரு மரமல்ல
வனம்.
எழுதியவர்
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.