மானங்காத்த மங்கையர் (Maanangkaaththa Mangaiyar) – வாண்டு மாமா (Vandu Mama)
ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ் இலக்கியத்தில் நன்கு அறியப்பட்ட குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமாவின் 100 வது பிறந்த நாள் என்பதால், எங்கள் பள்ளி நூலகத்தில் நூலகத்திற்குச் சென்று ஏதாவது அவர் எழுதிய புத்தகம் கிடைக்குமா என்று பார்த்தேன். அப்போது எங்களுக்கு பள்ளியில் ஒரு சில அரிய புத்தகங்கள் , (அதிசய வீணை, மானம் காத்த மங்கையர்) கிடைத்தன. அவை வாண்டுமாமா புத்தக பட்டியலிலேயே இல்லை.
நான், “மானம் காத்த மங்கையர்” புத்தகத்தை வாசித்தேன். இந்த புத்தகத்தில் மொத்தம் 12 கட்டுரைகள் கதை வடிவில் உள்ளன. நாடாண்ட மங்கை, அழகு விளைந்த ஆபத்து, தியாக திலகம், தெய்வமான திருமகள், சாந்தல குமாரி, அகமது நகரின் அதிசய மங்கை, மேவார் மாணிக்கம், நாயக்க மரபின் நாயகி, மராட்டிய மாதரசி, மதுரை நாயகி, விஷமுண்ட வடிவழகி, மானங்காத்த மங்கை ஆகியவை அவை.
இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்திருந்த கதை, மதுரை நாயகி என்ற தலைப்பில் உள்ள கதை. இது ஒரு பெண்ணின் வீரத்தையும் மானத்தை காக்கும் வலிமையும் புத்திக் கூர்மையும், ஒரு நாட்டின் ஆளுமை திறன் கொண்ட ஒரு பெண்ணின் கதை. இது மதுரை மீனாட்சி தேவியின் கதை.
“மானங்காத்த மங்கையர்” – மதுரை நாயகி கதைச் சுருக்கம்:
மதுரை முழுவதும் நெருப்பின் கரும்புகையும், பீரங்கி சத்தமும், மக்களின் அழுகுரலும் சத்தமும் கேட்ட ராணி மீனாட்சி மணமடைந்து தன் அந்தரங்க அறைக்குள் சென்று தெரிந்து கொண்டிருந்த தூண்டாவிளக்கு தன் முந்தானையை விளக்கில் காட்டி தன்னையே எரித்துக் கொண்டாள்.
அதன் பின் பாண்டிய நாட்டின் (ராணி மீனாட்சியின் பேரன்) விஜயரங்க சொக்கநாதன் பொறுப்பை ஏற்றான். அவன் தன் பாட்டியைப் போல ஆட்சி செய்யவில்லை. அவனைப் பற்றிப் போற்றும் விதமாகக் கூற வேண்டும் என்றால் அவன் கோவில் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் காஜனவில் இருந்த செல்வங்கள் எல்லாம் கோவில்களுக்காகவே செலவழித்தான். அவன் மனைவி மீனாட்சி தேவி அவர்களால் முடிந்த ராணிப் பதவியில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்தார்.
விஜயரங்க சொக்கநாதனின் ஆட்சி 25 ஆண்டுகளில் முடிவடைந்தது. அவர் இறந்துவிட்டார். அதன் பின் அவர்களின் மனைவி ராணி மீனாட்சி தேவி பொறுப்பை ஏற்று ஆட்சி செய்தார். கம்பீரமானவர். ஆளுமை திறன் படைத்தவர். இவர்களுக்கு வாரிசு இல்லை. ஆகவே ராணி மீனாட்சி தேவி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளில் இருந்து பங்காரு திருமலை என்றவரின் மகனைத் தத்தெடுத்துக் கொண்டாள். விஜய குமாரன் தான் ராணி மீனாட்சி தேவியின் அன்பு மகன். ராணி மீனாட்சி தேவி விஜயகுமாரனுக்கு இளவரசர் பட்டம் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பங்காரு திருமலைக்குத் தன் மகனின் சார்பாக தானே ஆட்சி செய்ய வேண்டும் என்ற பேராசை உருவாயிற்று. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக சில உறவுகள் இருந்தன. அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், அமைச்சன் தளவாய் வேங்கடாச்சாரியார்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ராணி மீனாட்சியைத் தவிர்க்க, ராணி மீனாட்சி தேவியைக் கொல்ல, சிறையில் அடைக்க பல முயற்சிகள் செய்தனர். ஆனால் மந்திர சக்தி உடையது போல, இவர்கள் செய்யும் அனைத்துச் சதித் திட்டங்கள் ராணிக்கு முன்கூட்டியே தெரிய, தப்பித்து விடுவார்.
அதனால் இருவரும் ஆற்காடு நவாப்பிடம் சென்று உதவி கேட்டார்கள். அதுவும் அவர்கள் ஒரு பெண் ஆட்சி செய்வதை இழிவாகப் பேசினார்கள். ஆற்காட்டில் நவாபீன் மகனும் மருமகனும் இருந்தார்கள். (சப்தர் அலி,சந்தா சாகிப்) அவர்கள் இருவரும் சரி என்று கூறி, ஏதோ ஒரு உள் நோக்கத்துடன் சிரித்தார்கள்.
திருமலையும் தேவாச்சாரியாரும், “நீங்கள் ஆட்சியை எங்களுக்குக் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு வரியை இரண்டு மடங்கு அதிகமாகவே தருகிறோம்” என்றார்கள். ஒற்றர்கள் மூலம் ராணி மீனாட்சி தேவிக்குச் செய்தி வந்தது
ராணிக்கு சப்தர் அலியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. எனக்கு எப்போதும் தரும் கப்பம் (வரி) யைவிட இரண்டு மடங்கு அதிகமாக கட்ட வேண்டும் இல்லை என்றால் ஆட்சி வேறு ஒருவருக்கு கைமாறும் என்று வந்தது. இதைக் கேட்ட ராணி அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ராணியும் சரி என்று பதில் அனுப்பினார். மறுநாள் ராணிக்கு மனதில் ஏதோ சரியாகத் தென்படவில்லை. ஆகையால் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றார். நவாப் அரசரின் படை அருகாமையில் வருவதாகச் செய்தி வந்தது. ராணி போர் எதுவும் இல்லாமல் இருப்பதற்காக மதுரையை அலங்கரித்து நவாபை வரவேற்பதற்காக இருந்தார். அதற்கு முன்பாகவே பங்காரு திருமலை, ஆற்காட்டின் படைக்காகச் காத்திருந்தார். ஆற்காட்டில் இருந்து வந்த படைகள் மதுரைக்கு வெளியே கூடாரம் அமைத்து இருந்தனர். ராணி மீனாட்சி தேவி சென்று நவாப் இளவரசர்களை அரண்மனைக்கு வருமாறு அழைத்தார். பாண்டிய வழக்கப்படி, வரும் விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.
அதன் பின் ராணி மீனாட்சி தேவியிடம் இருவரும் பேசி ஆயிற்று. ராணி மீனாட்சி தேவி கூறினார்: “நான் லிக்கிதத்தில் (கடிதத்தில்) எழுதியபடி, ஒரு கோடி வெள்ளி தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நிபந்தனை என்றதும் சப்தர் அலி நிமிர்ந்து உட்கார்ந்து புருவத்தை சுருக்கினார்: நிபந்தனை. “ம்.ம்.ம்……என்றார்.
“நான் என் நாட்டை சிறப்பாகத் தான் ஆட்சி செய்து வருகிறேன். இது பிடிக்காத சிலர், என் ஆட்சியை கவிழ்ப்பதற்காகச் சதி திட்டங்கள் தீட்டி வருகிறார்கள். அதற்கு நீங்கள் துணை போகமாட்டீர்கள் என்று, எனக்கு உங்கள் திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்து கொடுங்கள்” என்றாள்.
அவர்களும் சரி என்று கூறிவிட்டு அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு, சப்தர் அலி சந்தா சாகிப் இடம்போய் அருகில் கூப்பிட்டு ஏதோ கூறினார். பிறகு சந்தா சாகிப் எழுந்து கூடாரத்திற்கு சென்றார். ராணியின் முகம் மாறிற்று.
உடனே சப்தர் அலி கூறினர்: “ராணி அவர்களே, நீங்கள் நினைக்கு படி ஒன்றும் இல்லை. அவர் சென்று எங்கள் திருக்குர்ஆனை கூடாரத்திலிருந்து எடுத்து வரப் போகிறார். இதோ குர்ஆன் வந்துவிட்டது” என்றார். அதன் மீது ஒரு பட்டுத் துணி போட்டு இருந்தது.
ராணிக்கு சந்தேகம் அதிகம் ஆயிற்று. “உங்கள் திருக்குர்ஆனை நாங்களும் பார்க்க விரும்புகிறோம். அந்தப் பட்டுத் துணியை விலக்குகிறீர்களா? என்று கேட்டார் ராணி. அதற்கு சப்தர் அலி, “இது எங்கள் புனித திருக்குரான். இது மற்ற மதத்தினர் பார்க்க இயலாது” என்றார்.
ராணிக்குச் சந்தேகம் அதிகமாயிற்று. பின்னர் ராணி, “அந்தப் புனித திருக்குர்ஆனை என் கையில் தாருங்கள். நான் வைத்துக் கொள்கிறேன். நீங்கள் அதில் சத்தியம் செய்யுங்கள்” என்றார். அவர்கள் யோசித்து, இதற்கும் இல்லை என்று கூறினால், சந்தேகம் வந்துவிடும். என்று அதை ராணியிடம் கொடுத்தார்கள். அதை அவர்கள் சத்தியம் செய்வதற்கு முன்பு நமாஸ் செய்தார்கள். அந்த சிறிது வினாடிகளில் அவர்கள் கண் மூடிய நொடியில் ராணி மீனாட்சி தேவி அந்தப் பட்டு துணியை விலக்கிக் தனது விரல்களை விட்டு பார்த்தாள். அதில் குர்ஆன் அல்ல, இரண்டு செங்கற்கள் தான் இருந்தன. ராணியும் எதுவும் பேசாமல் சத்தியம் வாங்கிக் கொண்டு விட்டார்கள் மறுநாள் ….கூடாரத்திற்கு பல்லாக்குத் தூக்கி வரும் மாதிரி ஒரு பெட்டி முழுவதும் ராணி செங்கல் தூள்களை அனுப்பி இருந்தார். அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. “எப்படி உங்கள் புனித குர்ஆனை நான் தொட்ட போது. இரண்டு செங்கற்களாக ஆனதோ, அதேபோல நீங்கள் தொட்ட போது அந்த ஒரு கோடி வெள்ளியும் செங்கல் தூள்களாக மாறிப்போனது.
இதைக் கண்ட சப்தர் அலி கோபத்துடன் தனது பாதிப்படையை திருச்சியில் வைத்துவிட்டு, மீதிப் படையுடன் மதுரை நோக்கி போர் புரிய போனார். பாதியிலேயே நவாப் அலியிடமிருந்து திரும்புமாறு செய்தி வந்தது. அதனால் சப்தர் அலி மீனாட்சி தேவியிடம் சென்று ஆட்சியை திருமலையிடம் கொடுத்துவிடு என்று கூறிவிட்டு சென்றார். அனைவரும் மீனாட்சி தேவி போரில் வெற்றி பெற்றதாக கூறினார்கள்.
மீனாட்சி தேவி புலிப் பதுங்குவது பாய்வதற்கு தான் என்று புரிந்து கொண்டார். பிறகு மீனாட்சி தேவி நம் நாட்டிற்கிடையே வந்த பிரச்சனை இதற்கு அந்நிய நாட்டு அன்னியர்கள் நுழைகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு…பங்காரு திருமலைக்கு ஒரு கடிதம் அனுப்பினார் . அதில் சமாதானம் பேசச் சொல்லி கூறி இருந்தார். இதைச் சப்தர் அலிக்கு ஒற்றர் மூலம் செய்தி கிடைத்துவிட்டது.
அதனால் சப்தர் அலி படையோடு போர் புரிய மதுரைக்கு வந்தார். அப்போது விஜயகுமாரன் அரண்மனையின் சுரங்கப்பாதை வழியாக வெளியேறினான். மதுரையில் பாதி இடங்களைச் சப்தர் அலியின் படை நொறுக்கியது. இதனைக் கண்ட ராணி மீனாட்சி தேவி, மனம் உடைந்து தனது அறைக்குச் சென்று விளக்கில் தனது முந்தானை வைத்துவிட்டு படுக்கை அறையில் உறங்குவது போல படுத்து இருந்தார். தீப்பிடித்துக் கொண்டது. சப்தர் அலி அறையின் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தபோது, மீனாட்சி தேவி முழுவதுமாக எரிந்துவிட, கை மட்டும் தெரிந்தது. அதைக் கண்டு சப்தர் அலி வருத்தப்பட்டு மன்னிப்புக் கூறி அழுதார். (சப்தர் அலி கதவைத் திறந்து மீனாட்சி தேவியைச் சிறை பிடித்து திருச்சியில் மூன்று வருட காலம் வைத்து இருந்ததாகவும், பின்னர் மீனாட்சி இறந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது).
“ஆனால், அவள் தீ எரிந்தால் என்பதே உண்மை” என்கிறார் வாண்டு மாமா கூறுகிறார்.
நூல் குறிப்பு:
மானங்காத்த மங்கையர்.
வாண்டு மாமா,
முதல் பதிப்பு : நவம்பர் 1964,
விலை : 3
அருணோதயம், சென்னை
நூல் அறிமுகம் எழுதியவர்:
தவவர்ஷினி .கா.
ஒன்பதாம் வகுப்பு
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

