பெண்மையை உணர மறந்த மானுடா…
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப் பார்க்கிறாய்!
இனப்போரினாலும் அம்மணப்படுத்தி மகிழ்கிறாய்
அரசியல் காழ்புணர்ச்சியில் பெண்ணுடலை அவமானப்படுத்துகிறாய்
சாதி வெறியில் மழலைகளைச் சிதைத்து விட்டுச் சிரிக்கிறாய்..
மதஇறை தான் தூண்டியதா உன்னை…
அல்லது மறைநூல் கொண்டு வழிநடத்தியதா உனது சிந்தையை…
பெண்ணைத் தெய்வமாக்கிப் பல்லக்குத் தூக்குகிறாய்
பெண்ணுடலை அம்மணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்கிறாய்
ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து
வந்த பண்பு
ஏன் அற்றுப் போனது?
உனைத் தடுக்க அந்தத் தாய் முனையவில்லையா?
உன் வன்மத்திற்குத் தான் வடிகால் ஒன்றும் இல்லவே இல்லையா?
பெண் என்பவள் மென்மையானவள் தான்
அவள் மிரண்டால் இவ்வையகமே பிளந்து கொள்ளும்
நினைவில் கொள்!
சிறப்பான கருத்துகள்..
தாய் தடுக்கவில்லையா?
என்ற கேள்வி அருமை..