நூல்: எஸ்தர் – சிறுகதை
ஆசிரியர். : வண்ணநிலவன்
அமேசான் மின்னூல்
பக்கங்கள் 23

“எஸ்தர்” மிகவும் அருமையான ஒரு சிறுகதை. “எஸ்தர் சித்தி” என்ற பெண்மணியின் வலிமையை மிகவும் அழகாக எழுத்தாளர் இந்த கதையின் முழுவதும் பயணிக்க வைத்துள்ளார். இந்த குடும்பத்தின் எல்லோரையும் வளர்த்த பாட்டி, எஸ்தர் சித்தி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறைகளின் கடந்து செல்லும் இந்த சிறுகதை மனதை வருடும் ஒரு கதை.

நான் இதற்க்கு முன்பு, வண்ணநிலவனின் “கடல் புரத்தில்” என்ற கதையினை வாசித்திருக்கேன். கதையின் கதாபாத்திரங்கள் மிக வலிமையாக வாழ்ந்திருப்பார்கள். அது போல 23 பக்கங்களில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மையும் உணர வைப்பதால் இந்த “எஸ்தர்” சிறுகதையிலும் கதாபாத்திரங்கள் வலிமையையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு சிறுகதைக்குள், ஒரு பெரிய குடும்பத்தின் மூன்று தலைமுறையின் வாழ்க்கையும், அழகாக செழிப்பாக இருந்த ஒரு கிராமம் காலத்தின் விளைவாக வறண்ட போன பூமியானதால் மொத்த குடும்பங்களும் பிழைப்பை தேடி வெளி ஊருக்குச் சென்றதால் இந்த கிராமத்தில் எஞ்சிய ஐந்தாறு குடும்பம் மட்டுமே.
“எஸ்தர் சித்தி” எவ்வளவு வலிமையுடன் இந்த குடும்பத்தைச் சுமக்கிறாள். பிள்ளைகள் மருமகள்கள் என எல்லா உறவுகளையும் நேர்த்தியாகச் சுமந்து செல்கிறாள்.
எஸ்தர் குடும்பமும் ஊரை விட்டுப் போகத் தீர்மானம் போட்டுவிட்டனர் அதற்காக எஸ்தர் கொஞ்சம் பணமும் சேர்த்துவைத்திருந்தார் ஆனால் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுவிட்ட போக நினைத்தார்கள். ஆனால் பாட்டியின் திடீர் மரணம்.

இன்னமும் “எஸ்தர் சித்திக்கு, மட்டும் எல்லோரையும் வளர்த்த பாட்டியின் வாழ்வின் இறுதியில் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..”

மனநிறைவுடன் ஒரு நல்ல சிறுகதையினை வாசித்த அனுபவம் … மனதில் நீங்காத “எஸதர் சித்தியின்”
கதாபாத்திரம்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்.



One thought on “நூல் அறிமுகம்: எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் *எஸ்தர் சிறுகதை* – தேவேந்திரன் ராமையன்”
  1. இருட்டை தொட்டு காவியமாக்கும் வண்ண நிலவனின் அற்புத சிறுகதை “எஸ்தர்”. இளம் தலைமுறை வாசக பரப்பை தீண்டி பரவசமாக்கும் விரிந்த தளத்தில் இக்கதை செயல்பட தங்கள் பார்வை பகிர்வு உதவும். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *