படைப்பின் பரிணாமம்
பெண்ணுக்கு வழங்கிய
வரமா? சாபமா?
உடல்.
மழலையாக மலர்ந்து
கன்னம் தொடுபவரின்
தொடுதலில் சலனமெனில்
வரமா? சாபமா?
உடல்.
பால் வளர தேக்கிய மார்புகள்
பார்வைகள் வளர செய்வது
வரமா? சாபமா?
உடல்.
மாராப்பு விலகும் நேரம்
சட்டென சரி செய்யும் விரல்கள்
வரமா? சாபமா?
உடல்.
இடை தடித்தோ! மெலிந்தோ
பிள்ளை பெற அமைந்தனை
இடைவிடாமல் இடித்துரைப்பது
வரமா? சாபமா?
உடல்.
உதிர போக்கில் துவைந்து
உடல் எல்லாம் சலிந்து
உழன்று தவிக்கிறதே
வரமா? சாபமா?
உடல்
உரித்து போட்ட கோழியாய்
வெறித்து பார்க்கும் கண்கள்
வரமா? சாபமா?
உடல்
நிர்பயா முதல் சைபியா வரை
நீண்டு வரும் வன்முறை
வரமா? சாபமா?
உடல்
வறுத்தெடுக்கும் பார்வைகளில்
நாள்தோறும் வன்புணர்வு
வரமா? சாபமா?
உடல்
காலை மாலை என
நேரக் கட்டுபாட்டில்!
வரமா? சாபமா?
உடல்
உயிர் தங்கும் தசைகளை
உற்றுப் பார்க்கும் மனவியல்
வரமா? சாபமா?
உடல்
தசை தின்னிகள் வல்லூறாய்
திசை எங்கும் இருக்க
வரமா? சாபமா?
உடல்
காலத்தை கடந்த போதும்
காட்சி பொருளாக
காண்போர் கண்களில்
காலமெல்லாம் உறுத்தலாய்
வரமா? சாபமா?
உடல்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Nice kavidai
Really inspiring
மகிழ்ச்சி சகோ