மொழிபெயர்ப்பு கவிதை: *அடையாள நாள்* – தெலுங்கில் : வரவரராவ் | தமிழில் : வசந்ததீபன்அடையாள நாள்
______________________________

என்ன அரசு
இதை ஒப்புக் கொள்ளுமா?
கிளர்ச்சி நடந்தால்
நாடோடியும் பொருளற்றவனும்
தைரியசாலி ஆவார்களா ?

நாயகன் உயர்குலத்தவனாக இருக்க வேண்டும்.

காட்டுமிராண்டித்தனம் ஒன்றாக
ஆகிப் போகும் ,
காரை , மரக்கட்டை மற்றும் கல் ஒன்றிணைந்து
பிராணிகள் அல்லது பறவைகளின்
தங்குமிடத்தை
உருவாக்கத்தத் தொடங்கும் ;
என்ன இது ஏதாவது கதையை உருவாக்குமா ?

வரலாற்றின் அஸ்திவாரம் இருக்க வேண்டும் .

என்ன நீ மலையின் மேல் ஒரு தீபம் ஏற்றுவாயா ?
மிக ஏழையான
துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட கோண்டுக்காக ?

தீபங்கள் பெரிய மனிதர்களுக்காக எரிந்து கொண்டிருக்கின்றன.(2)

சந்தேகமின்றி ,
என்னிடமிருந்து
அவர்களின் இருப்பிடங்களைப் பற்றி
விசாரித்தாலும்
நான் என்ன சொல்ல முடியும் ?
நகரங்களை உருவாக்கி
அவர்கள் காட்டின் கர்ப்பப்பைக்குப் போனார்கள் _
என்னிடமிருந்து எண்ணுவதற்கு சொல்லப்பட்டது என்றால்
அவர்கள் 60 இருந்தார்கள் அல்லது 13
நான் சிதாரின் பக்கம் மட்டும் சைகை செய்ய முடியும்
இழப்பீட்டு பட்டியலுடன் அகம்பவாமாய் நீ
இருக்கின்ற போது.

யார் அவர்களின் ரத்தக்குழாயை வெட்டி மற்றும் அவர்களுக்கு பெயரிட்டார்
அந்தக் காட்டில் பிறந்தார்கள்
பிறகு கைவிட்டுப்போனார்களா ?
ஒருவேளை அவர்கள் உன்னை முதல் முறை சந்தித்தார்கள்
ஜனத்தொகையின் புள்ளிவிபரங்கள்
மற்றும் வாக்காளரின் பட்டியலில் ;
ஒருவேளை அவர்கள் ஆதிலாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம்
அல்லது இன்று நினைவூட்டி சொல்லப்பட்டது
இவர்களின் பட்டாப்பத்திரம்
பெற முடியவில்லை

அங்கே ,
மரங்களும் கோட்டைகளும்
வாதிகளும் சிகரங்களும்
பறவையும் பச்சோந்தியும்
நீரும் நெருப்பும்
மனிதனும் மிருகமும்
தண்ணீரும் நெருப்பும்
காடு சுத்தமாகி முளைத்துப் போனது
முற்றிய தானியங்கள் ,
பிராணிகள் அல்லது பறவைகளின்
தங்குமிடங்களும்
இருட்டும் வெளிச்சமும் ,
அவை எல்லாம் நிற்க ஒரே பெயராக இருக்கின்றன :

காடு
காடு அம்மாவாகவும் மற்றும் தானாக குழந்தையாகவும்
இருக்கிறது
காட்டின் மடியில் வாழ்ந்தார்கள்
ஆதிவாசிகள்
மற்றும் அவர்களின் தோற்றத்தில் கணங்கள் வாழ்ந்தன
காட்டின் பயத்திலிருந்து ,
நீ தான்
அவர்களது அடையாளமிட்டாய்
பயம் பரவியது.

போடெங் காட் மற்றும் பிப்பல்தாரயில்
இந்திராவெல்லி மற்றும் பாபேஷேரியில்
மற்றும் ஸத்நாலாவில்
மூங்கிலின் சிம்புகளைச் சுற்றி நடந்தது
அவர்களின் வாழ்க்கை
நீ அழித்துவிட்டாய்

தகரடப்பா மற்றும் தோட்டா
சுரங்கத்தின் ரத்தம் மற்றும்
கந்தக வாயுவுடன்
பூமியின் வெடிப்புகளில்
நீ அவர்களின் ஞானஸ்தானத்தின் விழாவைக் கொண்டாடினாய்
ஆக மொத்தம் இவ்வளவு மட்டும் இருக்கிறது
இப்போது நீ அவர்களை எப்போதும் ஒழித்துக் கட்ட முடியாது.(3)

துணிச்சல் மேலெழும்புகின்றன
அவர்கள் வரலாற்றைத் தான்
உற்பத்தி செய்கிறார்கள்
என்ன யாராவது அந்த தேதியைச் சொல்ல முடிகிறதா
ஆதிவாசி பிறந்து இருந்த பொழுதை ?
எப்போது என்று நீ ஆண்டு _ ஆண்டாக
நடப்பு கணக்கிற்காக
20 ஏப்ரலின் தேதி பதிவு செய்து வைத்து இருக்கிறாய்
ஆனால் இந்த முறை
வரலாற்றின் திடுக்கிடலில் தடுமாறி
19 மார்ச்சை நீ தான்
அரசனுடைய சிறையின்
இருண்ட அறையுள் நுழைத்து விட்டாய்.(4)

என்னுடைய இருதயத்திலிருந்து பிணக்கு
காட்டுப் பூக்களின் மேலிருந்து வருகிறது காற்று
இப்போது பர்வதங்களின்
உச்சியின் மேல்
அலையடிக்கிறது
ஆகாயம் காட்டை ஒரு பார்வையில் மாற்றியது
இவை எல்லாவற்றை விட தன்னறிவின்றி,
கோதாவரி தன்னுடைய பள்ளத்தாக்கில்
மந்தமாகிப் பாய்ந்து போகிறது.(5)

நேற்று முன் தினத்தின் மக்கள் ஒருவேளை
நேற்று வாழாமல் போய் இருந்தார்கள்;
நேற்றின் வழக்குகள் இன்று மறைந்து முடிந்து போயிருக்கலாம்
இருந்தும் , இந்த்ராவெல்லி நேற்று முன் தினமும் இருந்தது ,
நேற்றும் மற்றும் இன்றும்.

இந்த்ராவெல்லி ஒருவேளை
நில உடைமை இல்லாமல் இருந்தது
கழிந்த காலத்து மக்களின்
நேற்றைய நினைவுகளின் மேல் அதிகாரம் உறைய முடிவதில்லை;
ஆனால் அதன் மேல் அவர்களுடைய கட்டளை நிகழ்வதில்லை
அவர்கள் இன்று அதை அழித்தார்கள்.

இனத்தின் மாமிசம் மற்றும் ரத்தத்திலிருந்து வளர்ந்த
காட்டினுடைய கட்டளை தான் நிகழும் ,
ஆதி வாழ்வில் ஊறவைக்கப்பட்ட
ஆன்மா தான் இருக்கும் ;
தியாகிகளின் முத்தம் தான் வாழும் ;

கங்கை வாழ்வின் நீரோட்டமாக இருக்கும்
தடியும் வாளும் அதை காக்கும்
எல்லாக் காடுகளையும் தீர்த்த பிறகும்

அதில் ஒளிந்திருந்த நெருப்பு இருக்கிறது

ஆனால் இந்த்ராவெல்லி
அது
இப்போது நகரமாக
உருவாக்கப்பட்டது
கிளர்ச்சியின் விளைவாக ஆகி இருக்கும்
நேற்றைய நினைவு
நினைவூட்டலின் சங்கேதமாக இருக்கிறது

இது அவர்களுக்கான மைல் கல்லாக இருக்கிறது
அவர்கள் அதை அழித்தார்கள்
இந்த்ராவெல்லி வாழும்
போராடுகிற மக்களின்
சிகரத்தின் அடையாளமாகி.

தெலுங்கில் : வரவரராவ்
ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் : உஜ்ஜ்வல் பட்டாச்சார்யா
தமிழில் : வசந்ததீபன்வரவரராவ்
______________

பிறப்பு : ‌3, நவம்பர் 1940
பிறந்த இடம் : சின்ன பெண்டியாலா , வாராங்கல் ஜில்லா , தெலுங்கானா மாநிலம்.
தொழில் : செயற்பாட்டாளர் , கவிஞர் , பத்திரிக்கையாளர் , எழுத்தாளர் , இலக்கிய விமர்சகர் மற்றும் பொதுமேடைப் பேச்சாளர்.
மொழி : தெலுங்கு மொழி