மறுபடியும் – வசந்ததீபன்

Vasanthadeepan Marupadiyum Poetry in Tamil Language. Book Day And Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam.
Image Courtesy: INDIA’S OTHER MEDIA BOOMமறுபடியும்..
__________

விலக்கப்பட்ட கனி
வீதியில் கிடக்கிறது
சீந்த யாருமில்லை
அதிகாரம் செய்கிறார்கள் அம்பானி அதானி
அடிமையாய் கிடக்கிறோம் நாங்கள்
ஆட்சி நடக்கிறதாம் ஜனநாயக ஆட்சி
வெளிச்சத்தை நோக்கியே பயணம்
இருளுக்குள் உழன்றது போதும்
ஒளியில் திளைத்து குதூகலிப்போம்
நீதி செத்த தேசம்
நீயும் நானும் வாழும் தேசம்
நீசர்கள் கோலோச்சும் தேசம்
விடுதலையை தேடுகிறேன்
விடுதலை கற்பாறைக்குள் இருக்கிறது
விடுதலையை விடுவிக்க
நீங்களும் வாருங்கள்
அலைகள் தொடாத கரைகள் இல்லை
கரைகள் இல்லாத நதிகள் இல்லை
நதிகள் சுமக்காத நுரைகள் இல்லை
தேநீர்க் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன
எல்லோரும் வேடிக்கை பார்க்கின்றனர்
ஆறிப்போகின்றன
கொதித்த காலங்கள்
திணைகள் திரிந்து போயின
தீராத துக்கங்களுடன் நிலங்கள்
புழுங்கியபடி ஜனங்கள் அலைகிறார்கள்
மரநிழலில் ஆடுகள் கிறங்கிக்கிடக்கின்றன
வெளிர் வானத்தில் சூரியன் தகதகக்கிறான்
மேய்ப்பவன் யாரையோ சபித்தபடி புலம்புகிறான்.

நன்றி.
தோழமையுடன்,
வசந்த தீபன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.