Vasanthadheepan Poems வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

வசந்ததீபனின் குறுங்கவிதைகள்




வெள்ளாவிப் பானைகளில்
முட்டுத்துணி
குழந்தைப்பீத்துணி உட்பட
தூய்மையாக்க
வேகுகிறான் மாடன்.

🦀
கைக்கருப்புக்கு அரிசிப்பொரி படையல்
தலைச்சன் குழந்தைக் கரு பூசு மை
என ஊரைப் பயமுறுத்தி
ரத்தம் கக்கிச் செத்தான் மந்திரவாதி.

🦀
குடித்தான் குடித்தான்
குடித்தான் குடித்தான்
அவன் அவனையே
குடித்து முடிந்தான்.

🦀
காதல் பூவா ?
பூக்கிறது உதிர்கிறது
உதிர்கிறது பூக்கிறது
கண்ணிமைக்கும் நேரத்தில்.

🦀
வெயில் ஏந்தி
வாழ்க்கையின் சுவற்றில்
ஒளிப்படங்கள் காட்டும்
கண்ணாடியாய் மனைவி.

🦀
பூக்கள் மட்டுமல்ல
கனிகளும்
தானியங்களும்
தானே வசந்தம்.

🦀
கனவு வராக்கூடாதெனப் பிரார்த்திக்கிறேன்
அழுகைச் சத்தம் கேட்கிறது
மனசு பரிதாபப்பட கனவு சிரிக்கிறது.

🦀
ஆண்டாளையோ
அக்கமா தேவியையோ
ஒளவையையோ எந்த பெண்ணையோ
இழிவு படுத்தும் எவரும்
ஈனர்கள் தான்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *