வசந்தா கவிதை…!

பூக்கள் மட்டுமா சிரிக்கும்?
***************************************
எங்க வீட்டு ரோசாப்பூ
ஏழு ஊரு மணக்குது
எதுத்த வீட்டு செம்பருத்தி
எட்டி எட்டிப் பாக்குது
பக்கத்துவீட்டு மல்லிகைப்பூ
பக்குவமாய் சிரிக்குது
அடுத்த வீட்டு முல்லைப் பூ
அழகழகா மலருது
குளத்தில் மலர்ந்த தாமரைப்பூ
குவிச்சுக் கையைக் காட்டுது
அன்றலர்ந்த அல்லிப்பூ
அழகு முகத்தை காட்டுது
இயற்கை எல்லாம் சிரிக்கும்போது
மனிதன்  சிரிப்பை மறந்ததேன்?
                                   –வசந்தா