மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல்.
ஆம் ஆப்பிரிக்க மண்ணில் தன் தந்தை வெட்டிய மரங்களின் அடிப்பாகத்தில் இருக்கும் மரத்துகள்களை சேகரிக்க தன் தந்தை இடும் கட்டளையை நிறைவேற்ற குழந்தை ‘அக்கானின்’ சிந்தனையில் மரத்துகள்களிலிருந்து புத்தகத்தின் வாசனை எப்படி வந்தது என்பது தான் கதையின் திருப்பம்.
குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வானத்தையே வில்லாக வளைப்பார்கள் என்பது பொய் அல்ல நிஜம்.
வகுப்பறையில் ஆசிரியரின் கற்பித்தல் யுக்திகளில் கட்டுண்ட மாணவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையை வடிக்கும் சிந்தனையாளர்கள். அது பல நேரம் வகுப்பறைக்கு வெளியேயும் வாய்க்கப் பெறும் நமது தொல்லியல் ஆசான் #ஆர்பாலகிருஷ்ணன் அவர்கள் போன்று. ஆம் அவர் இந்திய ஆட்சிப்பணியை சிறப்பாக ஆற்றியமைக்கு காரணம் காமராசர் அவர்கள். அதை நியூஸ் 7 ஊடகத்தில் அவருடைய பேட்டியில் கண்டோம். அதுபோல் குழந்தைகளின் தடத்தை மாற்றியமைப்பதில் முன்னத்தி ஏர்களே காரணம். இங்கே குழந்தை அக்கானுக்கு புத்தக வாசனையைக் கொடுத்தது கைரேடியோ. ஆம் வானொலியே தான். அது எப்படி அக்கானுக்கு வாசிப்பு வாசனையை அதுவும் வாசிக்காத புத்தகத்தின் வாசனையைக் கொடுத்தது என்பதை 16 பக்க இந்நூலில் குழந்தைகளும், குழந்தைகளுக்காக பெரியோர்களும் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன் தோழர்களே!
சிறிய நூலே என்றாலும் மிகப்பெரிய கருப்பொருளை வழங்கிய தோழர் #கொமாகோஇளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!
நூலின் தகவல்கள்:
நூல்: வாசிக்காத புத்தகத்தின் வாசனை
ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ
விலை: ₹.25
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
அறிமுகம் எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

