வாசிப்பை நேசிப்போம் – ச. சுப்பாராவ் | மதிப்புரை சரவணன் மாணிக்கவாசகம்

வாசிப்பை நேசிப்போம் – ச. சுப்பாராவ் | மதிப்புரை சரவணன் மாணிக்கவாசகம்

ஆசிரியர் குறிப்பு:

இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் பணிபுரிபவர். சிறுகதையாளர். மொழிபெயர்ப்பாளர். பெரும்பாலும் இடதுசாரி நூல்களை மொழிபெயர்த்தவர். இருபத்தைந்து நூல்களுக்கும் மேல் மொழிபெயர்த்தவர் இவர். இது மிகச்சிறிய கட்டுரை நூல்.

வாசிப்பை நேசிப்போம்:

சுப்பாராவின் Blog/முகநூல் பக்கத்தைத் தொடர்ந்து படிப்பவர்கள் அவரது வாசிப்பு எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றி அவர் சொல்வதை அறிந்திருப்பார்கள். ஆரம்பித்து நடந்த பாதை அநேகமாக ஒன்றே, நாம் போய்சேருமிடம் தான் வேறுவேறாகிப் போகிறது.

மேலைநாடுகளில் வாசிப்புப் பழக்கம் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலானவர் பெண்கள். தனிமையை, மனச்சிதைவை புத்தகங்கள் மூலம் கடந்திருக்கிறேன் என என்னிடம் நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். இங்கே Mood out அதனால் படிக்கவில்லை என்பது சகஜம்.

ஓலையிலிருந்து அச்சுப்பிரதிக்கு Transition
இங்கே சற்று சிரமமாய் இருந்திருக்கும் போலிருக்கிறது.

நேரமில்லை உங்களைப்போல் ஹாயாக இல்லை என்பது வாசிக்காமல் இருப்பதற்குச் சொல்லும் முதல் காரணம்.

புத்தகத்தையும், தாம்பத்யத்தையும் தூக்கம் வருவதற்கு உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.

புரியவில்லை என்பதும் ஒரு காரணமாகிறது. ஆரம்பநிலை எழுத்தாளர்களைப் படித்துப்பின் நவீன இலக்கியங்களைப் படிக்கவேண்டும்.

வேகமான வாசிப்பு என்பது பயிற்சி. அதுவே கூட படிக்கும் புத்தகங்களுக்குத் தக்க மாறுபடும். James Hadley Chaseம் Ulyssesம் ஒரே வேகத்தில் யாராலும் படிக்க முடியாது.

ஆங்கில வாசிப்பு என்பது ஆரம்ப பிரமிப்பைக் கடந்து விட்டால் பின் ஒன்றுமில்லை. ஆரம்ப வாசகர்கள் R K Narayan, Ruskin Bond, Wode House, Sydney Sheldon போன்றோரைப் படிக்கலாம். நல்லவன், அப்பாவி பின் குற்றம் செய்பவனாய் மாறுவது Chase கதைகளில்.
என்னால் தமிழை விட ஆங்கிலத்தில் தான் வேகமாகப் படிக்க முடிகிறது.

கடைசி பாராவை வாசிப்பை வாழ்க்கையின் ஒரு அங்கமாக வைத்திருப்பவர் மட்டுமே முழுதும் புரிந்து கொள்ள முடியும். வாசிப்பவர்களால் அதைப்படியுங்கள் இதைப் படியுங்கள் என்று சொல்லாமல் இருக்கவே முடியாது.

வாசிப்பை நேசிப்போமில் சாம்பார் தோசை என்று உதாரணம் சொல்லி எப்படியாவது வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களையும் வளையத்திற்குள் கொண்டுவர இவர் தவிக்கும் தவிப்பு புரிகிறது. சுப்பாராவ் அடிப்படையில் பரவலாக வாசிப்பவர். நான் அனுப்பிய இரண்டு ஆங்கில மின்நூல்களை மூன்று தினங்களுக்குள் படித்துப் பதிவுமிட்டவர். வாசிப்பு ஒரு போதை, கனவுலகத்தின் பாதை, நிஜவாழ்வின் கோரப்பிடியிலிருந்து தப்பிச் செல்லும் உபாயம், ஒருவர் பலவாழ்க்கை வாழும் மாயாஜாலம்……… தொடர்ந்து வாசியுங்கள். மகிழ்வைத் தருவது அனைத்தும் நல்ல வாசிப்பே. அடுத்தவரின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். வாசிப்பை நேசிப்போம்.

பிரதிக்கு :

பாரதி புத்தகாலயம் 044-24332424
முதல்பதிப்பு june 2013
விலை ரூ 15.

புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/vaasippai-nesippom-771/

– சரவணன் மாணிக்கவாசகம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *