“வயிறும் உண(ர்)வும்” – இப்புத்தகம் மக்கள் படிக்க வேண்டிய மிக மிக அவசியமான புத்தகம் மனிதனின் முதலும் கடைசியுமான தேவை ஆரோக்கியம் அந்த ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள காப்பாற்றிக்கொள்ள மிக அவசியமான விடயங்களை உள் அடக்கிய நூல் என சொல்லலாம் மிக தெளிவான விளக்கங்கள் ஒரு மனிதன் உழைப்பது சம்பாதிப்பது “ஒரு சாண் வயித்துக்காக” என்ற கருத்து உண்மையானது ஆனால் இன்று நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதையே மறந்து சாப்பிடக்கூட நேரமில்லாமல் பசிக்கும் போது சாப்பிடாமல் பசி அடங்கிய பிறகு உண்கிறோம் அதனால் உண்ட உணவு கழிவாக மாறுகிறது இதனால் உடலில் தொந்தரவுகள் உருவாக நாமே காரணம் ஆகிறோம்.
இதனால் நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளை (நோய்களை) எவ்வாறு நாமே வயிற்றை கையாள்வதன் மூலம் சரிசெய்ய முடியும் என்பதை விளக்கும் அருமையான நூல் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய எல்லோர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இது என்பதால் இந்நூலை அறிமுகம் செய்கிறேன்.
பசி எடுத்து சாப்பிட வேண்டும், தாகம் எடுத்தால் நீர் அருந்த வேண்டும் அது எந்த நேரமாக இருக்கலாம், உடலுக்கு ஓய்வு தரவேண்டிய அவசியத்தையும், இரவு உறக்கம் மிக முக்கியமான அரோக்கியத்தேவை என்பதையும் விளக்குவதோடு பசி எடுத்தால் எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிட வேண்டும், தண்ணீர் குடிப்பது பற்றிய மக்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு பதில் அளித்து இன்னும் உணவு சம்பந்தமாகவும், ‘வயிறு தான் நோய்களின் பிறப்பிடம்’ எனவும் வயிற்றை எப்படி கையால்வது என்பது பற்றியும் விளக்குகிறது இந்நூல்.
இப்போது அனைத்து மக்களும் கேட்க்கும் கேள்வி என் வயிற்றை எப்படி குறைப்பது “என் உடலை எப்படி குறைப்பது ” சாப்பிட்டதும் வயிறு வலிக்குதே என்ன செய்வது, விரும்பியதை சாப்பிட முடியவில்லையே என்ன செய்வது, தூக்கம் வரவில்லையே என்ன செய்வது போன்ற கேள்விகள் மக்கள் மனதில் அதிகம் அதிகம் உள்ளது அந்த அத்தனை கேள்விகளுக்கும் இந்நூலில் பதில் அளித்துள்ளார்கள்
இதை படித்தால் போதும் அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
வயிறு பற்றி நாம் அறிந்ததும் அறியாததுமான நிறைய தகவல்களை கூறியுள்ளார். குறட்டை ஏன் வருகிறது அதை எப்படி சரிசெய்வது, வாயு தொந்ததரவுகள் எதனால் ஏற்படுகிறது அதை சரி செய்ய என்ன செய்யலாம், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற நாம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கம் அளித்துள்ளார் திரு உமர் பாரூக் அவர்கள்.
சமைத்த உணவு நல்லதா?
சமைக்காத உணவு நல்லதா?
உடலுக்கு சத்துக்கள் எப்போது எப்படி கிடைக்கும்? நமக்கு பிடித்த உணவுகள் இரசாயன உணவாக இருந்தால் என்ன செய்வது? இப்போது உள்ள உணவுகளில் இரசாயனங்கள் கலந்து தானே வருகிறது அதை எப்படி உண்பது? நோய் வருமுன் காப்பது எப்படி?
நாம் சாப்பிட்ட உணவு உடலில் என்னவாக மாறுகிறது என்றும், காய்கறிகள் பழங்களில் தெளிக்கப்பட்ட
இரசாயனங்களை எவ்வாறு நீக்குவது என்றும், குழந்தைக்கு எத்தனை வயதுவரைப் பால் கொடுக்கலாம், குழந்தையின் பசியை உணர்வது எப்படி? குழந்தைக்கு என்ன வகையான திண்பண்டங்கள் கொடுக்கலாம், மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றியும் இன்னும் பல நமக்கு தேவைப்படும் தோன்றும் கேள்விகள் அனைத்திற்கும் இந்த நூலில் விளக்கமாக பதில் கூறியுள்ளார் அக்கு ஹீலர் திரு உமர் பாரூக் அவர்கள்.
பேலியோ டயட், வீகன் டயட் பற்றியும் கர்பிணிகள் என்ன சாப்பிடலாம், குழந்தை பிறந்த பிறகு என்ன சாப்பிடலாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் விரதத்தின் வகைகளையும் அதை எவ்வாறு கடைபிடிப்பது என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறது இந்நூல். நாம் ஆரோக்கியமாக வாழ இந்நூல் ஒன்று போதும்.
மக்கள் கேட்கும் கேள்விகளை எழுத்தாளர் தோழர் திரு இவள் பாரதி அவர்கள் கேட்க கேட்க எழுத்தாளர் அக்கு ஹீலர் திரு உமர் பாரூக் அவர்கள் பதில் அளித்ததை தெளிவாக எழுதியுள்ளார் எழுத்தாளர் இவள் பாரதி அவர்கள்.
இந்நூல் படிக்க வியப்பாக இன்னும் படிக்கும் ஆர்வத்தை ஊட்டும் விதமாகவும் நமக்கு தெரியாத பல விடயங்களை தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது இந்நூல் இந்நூலை எழுதிய எழுத்தாளர் இவள் பாரதி அவர்களுக்கும் பல கேள்விகளுக்கு விடையும் விளக்கமும் அளித்த எழுத்தாளர் அக்கு ஹீலர் திரு உமர் பாரூக் அவர்களுக்கும் நன்றி கூறி நூல் அறிமுகத்தை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்😊🙏.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “வயிறும் உண(ர்)வும்” |
| ஆசிரியர்: | அக்கு ஹீலர் உமர் பாரூக் நேர்காணல் | இவள் பாரதி |
| வெளியீடு: | நம் பதிப்பகம் சாலிகிராமம், சென்னை-93. 9566110745 |
| விலை: | ₹.199 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அ. ஷம்ஷாத் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

