வாழ்வியல் போற்றுதும் – நூல் அறிமுகம்
இந்த புத்தகத்தில் மொத்தம் 26 கதைகள் அடங்கியுள்ளன. கதைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கருத்துள்ள கதைகள்.
இப்பொழுது உள்ள குழந்தைகள் பெரும்பாலும் முகத்தை பார்த்து கூட பேச முடியாத அளவிற்கு மொபைல் போனிலும் தொலைக்காட்சிகளிலும் மூழ்கி போய் இருக்கின்றன. அவர்களிடம் ஏதேனும் ஒரு தகவலை பரிமாறக் கூட மொபைல் போன்களும் வாட்ஸ்அப் செயலிகளும் தான் தேவை படுகின்றன. முடிந்த வரை குழந்தைகளுக்கு நம் உறவுகளை வீடியோ அழைப்புகள் மூலம் அறிமுகம் படுத்தாமல் முகம் பார்த்து பேசி பழகி அறிமுகப்படுத்தவோம்.
கூடி மகிழ்ந்து கொண்டாடுவோம் என்ற கதை மிகவும் நகைச்சுவையாக இருந்தது. பேராசை கொண்ட ஒருவன் மந்திர குதிரையை தன் குருவிடமிருந்து பெறுகிறான். அந்த குதிரை நன்றி கடவுளே என்று சொன்னால் வேகமாக ஓடும். ஆஹா கடவுளே என்று சொன்னால் நின்று விடும். பேராசை கொண்ட மனிதனும் குதிரையை வேகமாக ஓட்டிக்கொண்டே வருவான் திடீரென்று குதிரையை நிறுத்துவதற்கான மந்திரத்தை மறந்து விடுவான். குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டே இருக்கும் பொழுது மீண்டும் அந்த மந்திரம் அவன் நினைவுக்கு வர நன்றி கடவுளே என சொல்கிறான் மீண்டும் அந்த குதிரை பறந்து செல்கிறது. எந்த ஒரு நேரத்திலும் நாம் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். மகிழ்ச்சி அதிகமா இருக்க இருக்கும் பொழுதும் அல்லது துன்பம் நமக்கு வரும் பொழுதும் ஒரே மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இருந்தது இந்த கதை.
சாக்ரடீஸ் அவர்களின் கதையில் கூறியிருக்கும் கருத்துக்களும் சிறப்பாக இருந்தது. ஞானி ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரது மனைவி அவர்களைப் பார்த்து அவருக்குத்தான் வேறு வேலை இல்லாமல் நியாயம் தர்மம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் உங்களுக்கும் வேறு வேலை இல்லையா என்று கடிந்து கொண்டு பேசுகிறார். ஆனால் அவர்கள் யாரும் அவரை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கின்றனர். கோபம் தாங்காத அந்த பெண்மணி குடம் நிறைய தண்ணீரை கொண்டு வந்து அந்த ஞானியின் தலையில் காட்டுகிறார். அதற்கு அந்த ஞானி கூறுகிறார் நண்பர்களே இதற்கு முன்பு இடி இடித்தது அல்லவா இப்பொழுது மழை பெய்து விட்டது என்று நகைச்சுவையோடு கூறுகிறார். வாழ்க்கை சுமூகமாக செல்வதற்கு யாரேனும் ஒருவர் பொறுமையோடு இருந்து தான் ஆக வேண்டி உள்ளது.
உலகை அழகாகும் ரகசியம் என்ற கதையில் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பு இரவும் பகலமாக பாதுகாத்து வந்து கொண்டே இருந்தனர். இரவு தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த கண்டுபிடிப்பை மாடியில் கொண்டு வைக்க சொல்கிறார். இந்த உதவியாளர் பொறுப்புடன் எடுத்துச் சென்றும் வைக்கும் பொழுது கண்டுபிடிப்பு உடைந்து விட்டது. தாமஸ் ஆல்வா எடிசன் அவரை கடிந்து கொள்ளாமல் உடன் வேலை செய்த அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு நாளை நேரத்தோடு அனைவரும் வந்து விடுங்கள். என்று கூறி அனுப்புகின்றார். மறுநாள் காலை உடைந்த அந்த பொருளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வைத்து வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சியை முடிக்கிறார். அங்கே இருக்கும் அனைவரும் தாமஸ் ஆல்வா எடிசனை நோக்கி கேட்கின்றனர் நேற்றிரவு இந்த பொருள் உடைந்து விட்டது இதற்குள் எப்படி செய்தீர்கள் என்று. அதற்கு அவர் கூறுகிறார் கோபப்படுவதால் உடைந்த இந்த பொருள் வருவதாக இருந்திருந்தால் நான் அதிகமாகவேகோபப்பட்டு இருந்திருப்பேன். உடைந்த அந்த பொருளை மீண்டும் வடிவமைத்து விடும் ஆற்றல் என்னிடம் உள்ளது எனவே தான் உங்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு விரைவாக இதை செய்து முடித்தேன் என்று பதில் அளித்தார். கோபப்படுவதால் இந்த உலகில் எதையும் மாற்றி விட முடியாது. அன்பால் மட்டுமே உலகை ஆள முடியும். அன்பால் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் மேலும் அதிகமாக அன்பை காட்டுவதை தவிர கோபத்தையோ வன்மத்தையோ யாரிடமும் நாம் காட்டக்கூடாது.
கதைகளை கூறும் பொழுது அதில் உள்ள கருத்துக்கள் மதங்களை சார்ந்தும் அதில் கூறப்படும் கருத்துக்களை சார்ந்ததும் வந்திருக்கின்றன. அதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. புத்தர் நபிகள் ஜென் போன்றவற்றில் உள்ள தத்துவங்களை கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
நூலின் தகவல்கள் :
புத்தகம் : வாழ்வியல் போற்றுதும்
ஆசிரியர் : முனைவர் என் மாதவன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
பக்கங்கள் : 88
விலை : 90/-
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/vazhviyal-potruthum/
நூல் அறிமுகம் எழுதியவர் :
நளினி மூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.