வெ.மாதவன் அதிகன் (Ve.Madhavan Athigan) எழுமின் அன்பே (Ezhumin anbe)

 

காதல் கவிதைகளும், அரசியல் கவிதைகளும் தொகுப்பு முழுவதும் விரவி இருக்கிறது.
சாதாரண மக்களின் கண்களுக்குத் தெரியாத பல்வேறு நுண்மையான விஷயங்கள் கவிஞருக்குத் தெரிகிறது.

அருமையான அட்டைப் படம். சிறந்த வடிவமைப்பு.

கவிஞர் கரிகாலன் அவர்களின் பின்னட்டைக் குறிப்பு சிறப்பு. மாதவனுக்கு எல்லாம் அதிசயமாகத் தெரிகிறது என்கிறார்.

கவிஞரின் என்னுரையில், எட்டு ஆண்டுகள் கழித்து இந்த இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது என்கிறார்.

எனக்குப் பிடித்த காதல் கவிதைகள்:

தியா கவிதையில் வெண்புடவை அருவியில் தான் ஒரு சிட்டுக்குருவி என அழகான வரிகள்.
உங்களை எப்படி காதலிப்பது கவிதை மிகவும் வசதியான, வெள்ளந்தியான பெண்ணை , சராசரியான கவிஞனின் பார்வையில் சொல்கிறது.

நெஞ்சம் மறப்பதில்லை கவிதை, தேவிகாவின் தனது காதலை காலத்தில் பயணம் செய்கிறது.
பிரிவென்பது கவிதை, அத்தனை ஊடல்களுக்குப்பிறகு, காதலன் முத்தமிட காதலி இறுக அணைத்துக் கொள்வது என வாசகனை காதலிக்கத் தூண்டுகிறது.

ரிது என்பவள் கவிதையில் இரண்டாம் குறுங்கவிதை மிகச் சிறப்பு:

திருமலைராஜன் நதியை
கையால் அணையிட்டு
குளமென்று சொல்லிச்
சிரித்தவள்

காதல் என்பது கவிதையில், அற்புதமாக முடிக்கிறார்:

காதலென்பது
அன்பு நிறை நீர்பெருகும் கருவளைய கண்களன்றி வேறென்ன என் தெய்வமே

குடி கவிதை, காதலின் ஏற்றத் தாழ்வுகளை சொல்கிறது.

ரிது கவிதையில் சில மிகச் சிறந்த வரிகள்:

ரிது
நீ பிறப்பறியா பேரின்ப வீட்டின்
பெரும் பொருள்
நான்
நிரம்பா யாசகப் பேழை

எனக்குப் பிடித்த நுண்ணரசியல் கவிதைகள்:

காளியெனப்படுபவள் கவிதை விவசாயிகள் பற்றிய சிறப்பான ஒன்று.
எறும்பு கவிதை சாமான்யனைப் பற்றிப் பேசுகிறது.
குறையொன்றுமில்லை கவிதை எப்படி என் கனவிற்குள் என்னைப் புதைக்க முடியும் என்று எதிர்க்குரல் எழுப்புகிறது.

நிறை கவிதை எளியவர்களுக்கும் வாழ்வுண்டு அவர்களுடன் விழுந்து சரிந்திட எப்போதும் துணையிருக்கிறதென நம்பிக்கை அளிக்கிறது.
பேருந்து நிலையங்கள் கவிதை எளியவர்களுக்கு வாழ்வளிக்கும் தாயுள்ளம் என்கிறது.

எக்ஸ் ஒய் இசட் கவிதை விலைவாசி உயர்வால் சராசரி மனிதனின் வேதனையை சிறப்பாக விவரிக்கிறது.
மயிர் கவிதை சிறப்பு.

தெருநாய் கவிதை, அரசியல்வாதிகள் எப்போதும் விரும்புவது, நன்றியுடன் வாலாட்டும் தொண்டர்களும் அப்பாவி மக்களும் என்கிறது.
பாலம் கவிதை சமூக அவலங்களை விவரிக்கிறது.

கர்வம் கவிதை கால்களின் வழியாக, தன் உழைப்பில் வாழாமல், பரம்பரை சொத்தில் வாழ்பவர்களை விமர்சிக்கிறது.

அழுகை கவிதை, நமது அழுத்தத்திற்கெல்லாம் அழுகை எவ்வாறு உதவுகிறது என அருமையான வரிகளில் சொல்கிறது.

மை கவிதை, பெண்ணின் தற்கொலையிலும் இச்சமூகம் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

அடியே தேன்மொழி கவிதை சிறந்த பகடி.
பேஸ்மட்டம் கவிதை, எப்போதும் அடிவிழுவது, அடிமட்டத்தில் உள்ளவர்களுக்குத்தான் பகடியாகச் சொல்கிறது. இதே பாணியில் மற்றொரு கவிதை டக்டக் டக்குடக்கு டக்கு…

கவிஞர் தனது என்னுரையில் சொல்வது போல, யானை முகாமிற்கு திரும்பி விட்டது.

மிகச் சிறந்த வாசிப்பு அனுபவம்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : எழுமின் அன்பே

ஆசிரியர் : வெ.மாதவன் அதிகன்

வெளியீடு : வேரல் புக்ஸ்

விலை : ரூ .130

         

நூலறிமுகம்  எழுதியவர்

           கண்ணன்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *