Vedham Sathan Othugirathu Poem By Lingarasu. வேதம் சாத்தான் ஓதுகிறது கவிதை - ச.லிங்கராசு

வேதம் சாத்தான் ஓதுகிறது கவிதை – ச.லிங்கராசு




கள்ளிப் பாலூட்டி தன் கடமையை
செய்ததாயிடம
‘ஏனம்மா இப்படி’ என்றால்
‘பெண்ணைப் பெற்று
திருமணம் செய்யின்
சீர்வரிசைக்கு எங்கே போவேன்?
கேட்பவரை விட்டு என்னிடம்
என்னய்யா கேள்வி ? என்றாள்
சரி ஓர் அனாதை இல்லம்
அடைக்கலம் தந்தால்…. என்பதற்குள்
‘ஆமாம் அய்யா ஓர் ஆகாத சாதீக்கு
குழந்தை பெரியவளானதும்
மணமுடித்து விட்டால்….’
சீறினாள் சீறிய பின்
திருவாய் மலர்ந்தாள
‘அதற்கும் சேர்த்துத் தான்
இதை செய்து முடித்தேன்’

பத்திரிக்கை செய்தி என்னை
பதைப் பதைக்க செய்தது அன்று
ஆணவக் கொலைக் கூட
தொலை நோக்கு பார்வையோடு
இங்கே
என்ன கொடுமை?
இந்தப் பூவுலகு வெடித்துச்சிதறி
வேறொன்று முளைத்தாலும்
முடியாதோ இங்கே சாதீய. ஆணவம்?

மேல்நாடுகளின் கொடுமை
கறுப்பு வெள்ளை
இங்கு வெள்ளையாய் பிறப்பினும்
சாதீய கொடுமை
அங்கு கலப்பு மணங்களுக்கு
ஆணவக் கொலைகள்
நடப்பதே இல்லை
இங்கோ மதமே வர்ணம் போதித்து ‘மதம்’ பிடிக்க வைக்கிறது
மனிதர்க்கு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *