இஎம்எஸ் நம்மூதிரிபாத் அவர்கள் மலையாள மொழியில் எழுதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ள இந்த நூல் முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இந்தியாவின் சமூக கலாச்சார வளர்ச்சியினை விவரிக்கிறது.

ஆரியர்கள் வருகைக்பு முன்னர் இந்தியாவின் நிலை துவங்கி ஆங்கிலேயர் வருகைக்கு பின்னால் வரை இந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்களைப் பற்றிய விரிவான நூல் இது.

ஆரியர்கள் உருவாக்கிய வைதீக கலாச்சாரம் அது அடிமைச்சமூகத்தினை உருவாக்கிய விதம், புராதன பொதுவுடைமை சமுதாயத்தின் வீழ்ச்சி என எல்லா நிகழ்வுகளையும் விளக்குகிறது இந்த சிறு நூல்.

வருண, சாதி கலாச்சாரத்தில் சிக்கி இருக்கும் இந்திய உழைப்பாளி மக்களை வர்க்க அடிப்படையில் இணைப்பதற்கான யுக்திகளிடன் வந்துள்ள இந்த நூல் இந்திய வரலாற்றில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதிகளை நமக்கு சொல்கிறது.

அதை அறிந்து கொள்ள

இந்த புத்தகத்தை வாங்குங்க
வாசியுங்கள்
பிறருக்கும் சொல்லுங்கள்

புத்தக தலைப்பு: வேதங்களின் நாடு

ஆசிரியர் – இஎம்எஸ். நம்பூதிரிபாடு | தமிழில் பி.ஆர்பரமேஸ்வரன்

பாரதி புத்தகாலயம் | விலை ₹40

Whatsapp: 📞 87780 73949 Show Room: ☎ 044 2433 2924 Email: 📧 [email protected]

# வாசிப்பதை பகிர்வோம்,
#பகிர்வதற்காக வாசிப்போம்

மு. வீரகடம்ப கோபு
திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *