வீதி100 | Vidhi 100 Bookreview

புதுக்கோட்டை நகரில் தொடர்ந்து மாதாந்திர இலக்கிய சந்திப்பு மூலம் 115 இலக்கிய சந்திப்புகள், செயல்பாட்டுகளை நிகழ்த்திய அமைப்பு வீதி. இளம் மற்றும் புதிய படைப்பாளிகளை உருவாக்கிய அமைப்பு. வாசிப்பு இயக்கத்தையும் அதன் மூலம் சமூக பங்களிப்பையும் செய்திருக்கிறது.
வீதி அமைப்பின் இலக்கிய களமானது கவிதை கட்டுரை சிறுகதை விமர்சனம் திரையிடல் என்பதை தாண்டி விதைக்’கலாம்’ என்ற பசுமை பரப்பும் அமைப்பாக, கஜா புயல் நிவாரணமாக, கொரோனா காலத்து டிஜிட்டல் கூடுகையாக, தனக்குள் புதைந்திருக்கும் படைப்பாற்றலை கண்டடைவதாக என பல வடிவங்களில் பரிணாமம் பெற்று இருக்கிறது.

அதனுடைய முன்னத்தி ஏர்களின் பங்களிப்பு, சமூக அக்கறை புதிய படைப்பாளிகளின் கண்டறிந்து அடையாளப்படுத்தும் பாங்கு என்று அத்தனையும் அழகுற ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
தலைவர் செயலாளர்கள் இல்லாமல் பெண் ஒருங்கிணைப்பாளரின் மூலம் பெரிய சாத்தியப்பாட்டை, உழைப்பை, அர்ப்பணிப்பை, சமூக உணர்வை அறியமுடிகிறது.

இந்த ஆவணம் இல்லையென்றால் அவர்களுடைய 120 மேற்பட்ட மாதாந்திர இலக்கிய சந்திப்பின் பின்னால் உள்ள தனிமனிதர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரியாமல் போயிருக்கும்.

ஒவ்வொரு மாதமும் கூட்டமும் யார் தலைமை, அறிமுகப்படுத்தப்பட்ட, விமர்சிக்கப்பட்ட நூல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் பலரும் எழுத்தாளர்களாக கவிஞர்களாக விமர்சகர்களாக பேச்சாளர்களாக பரிணாமம் பெற்று தாங்களும் படைப்பாற்றலை, வெளியீடுகளை கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒருங்கிணைப்பு புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதும், அக்கறை என அத்தனையும் இடம்பெற்றுள்ளன.
புத்தகம் விரைவாக வரவேண்டும் என்ற நோக்கில் நேர்த்தி கம்மியாகவும் உள்ளதை தவிர நூலின் கீர்த்தி உயர்வானது. இதன் உறுப்பினர்கள் குழுவாக குடும்பமாக செயல்படுவது அவர்களின் இது நாள் வரையிலான வெற்றி என அறிய முடிகிறது.

வீதி அமைப்பின் பாதை, அதனுடைய வேர்களின் பயணம், நூறு நிகழ்ச்சிகளின் கூட்டம் நாள், தலைமை, நிகழ்ச்சி நிரலின் பட்டியல், அதோடு 7 கட்டுரைகள், 3நூல் விமர்சனங்கள், 6 சிறுகதைகள், நேர்காணல், 18 கவிதைகள் இடம் பெற்று இருக்கின்றன.
புதிய செய்தியாக (புதர் செடியான முந்திரி காற்றோட்டம் அதிகம் இருக்கும் போதே மகசூல் அதிகரிக்கும்- கல்லூரி மாணவி கட்டுரை) இப்படியாக பல குறிப்புகளை காணலாம்.

இந்த வரலாற்று ஆவணம் உழைப்பின் பின்னோக்கி பார்க்க உதவும் படைப்பு. மறு பதிப்பின் போது நேர்த்தியாகவும், கவிதைகளுக்கு தனிப் பக்கங்கள் ஒதுக்குவதும் மேலும் அவர்களை மிளிரச் செய்யும்.

நூலின் தகவல்கள் 

நூல் : வீதி100

வெளியீடு : வீதி கலை இலக்கிய களம், புதுக்கோட்டை

வகை : கலை இலக்கிய செயல்பாட்டாளர்களின் ஆவணம்

தொகுப்பு : நா. முத்துநிலவன், மூ. கீதா, கா. மாலதி

பக்கம் : 120

விலை : ₹150

நூலுப் பெற  : 9659247363

 

எழுதியவர் 

பாலச்சந்திரன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *