கவிதை: வீடு – கவிஞர் பாங்கைத் தமிழன்
கவிதை: வீடு - கவிஞர் பாங்கைத் தமிழன்

கவிதை: வீடு – கவிஞர் பாங்கைத் தமிழன்

 

 

 

வீடு

அளவற்ற அன்பும்
அன்பால் கிடைத்த தெம்பும்
கூடி வாழ்ந்த வாழ்வும்
குலைந்து நிற்கின்றன!

இல்லாமையிருந்த போதும்
இன்பங்களை இழந்ததில்லை!

துயரம் வந்தாலும்
துரத்தினர் ஒன்றாக!

உறவுகளில் உரசல்கள் வந்தாலும்
உடையும் அளவிற்கு அது
சென்றதில்லை!

பகிர்ந்துண்ட பண்பு
சுரந்து வந்த அன்பு
வீட்டின் அஸ்திவாரம்!

வேடந்தாங்கல் பறவைகள்
மழைக்கால மேகங்கள்
திருவிழாக் கூட்டங்கள்
அணை நிரம்பிய நீர்
ஆறு நிரம்பிய மணல்
காடு நிறைந்த மரங்கள்
கனி நிறைந்த சுவை
தேன் நிறைந்த இனிப்பு
சந்தனம் நிறைந்த மணம்
இப்படியான குணம் நிறைந்த வீடு
களவாடப்பட்டது யாரால்?

கடையனைப் பற்றிக் கவலையே கொள்ளாத

காட்சிப் பெட்டி ஒரு காரணம்
கைபேசி ஒரு காரணம்!

ஏதோவொரு கடமைக்கு வீடு;
உணவுக்கோ… ஓய்வுக்கோ…
அவசியமற்றுப்போன வீடு!

உடை மாற்றவும்
உறங்கவுமே
அத்தியாவசியமானது
வீடு!

கணவன் ஒரு கலாச்சாரம்
மனைவி ஒரு கலாச்சாரம்
பிள்ளை ஒரு கலாச்சாரம்!

ஒன்று மட்டுமே
இன்னும் ஒரே சிந்தனை;
அது
சாதி… சாதி… எனும் சிந்தனை!

 கவிஞர் பாங்கைத் தமிழன்

 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *