புத்தக விமர்சனம்: மாவீரன் சிவாஜி (காவித்தலைவனல்ல, காவியத்தலைவன்) – கார்க்கி

புத்தக விமர்சனம்: மாவீரன் சிவாஜி (காவித்தலைவனல்ல, காவியத்தலைவன்) – கார்க்கி

சிவாஜி கோன் ஹோட்டா (யார் அந்த சிவாஜி) என்று கோவிந்த் பன்சாரே எழுதிய நூலே மாவீரன் சிவாஜி காவித்தலைவன் அல்ல காவியத்தலைவன் என்று செ.நடேசன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

மாவீரன் சிவாஜி என்றதுமே குதிரையின் மீது வாளேந்திய ஒரு மன்னரும் அவரைச்சுற்றிய காவிக்கொடியும், அவர் இந்துக்களின் குறிப்பாக உயர்சாதி இந்துக்களை காக்க வந்த கடவுளின் அவதாரம் என்ற பிம்பமே நம் நினைவுக்கு வரும். இந்த பிம்பத்தின் உண்மை முகத்தை வரலாற்று ஆய்வுகளோடு இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் பன்சாரே.

சிவாஜியை ஏன் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்? மற்ற இந்து மன்னர்களை ஏன் கொண்டாடுவதில்லை. சிவாஜிக்கும் அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற இந்து, இஸ்லாமிய மன்னர்களுக்கும் என்ன வித்தியாசம்?

How To Spell Success: New Ways Forward For Hindu American Children ...

முதலில் அக்காலத்திய மக்கள் அரசை எவ்வாறு பார்த்தனர், அவர்களுக்கும் அரசுக்குமான தொடர்பு என்ன? சிவாஜி எவ்வாறு ஆட்சி அமைத்தார்? அவரது ஆட்சியில் விவசாயிகளின் நிலை? பெண்களின் நிலை? நிலப்பிரபுக்களின் நிலை? ஆட்சியில் மொழியின் பங்கு? அவரது இராணுவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது, அவரது படையில் யாரெல்லாம் இருந்தார்கள்? வர்த்தக முறை எவ்வாறு இருந்தது? அவர் மதத்தை எவ்வாறு அணுகினார்? அவரது சமகாலத்திய இந்து மன்னர்கள் இவரை எவ்வாறு நடத்தினர்? சிவாஜியை கடவுளின் அவதாரம் என்கிறார்களே அது ஏன்? அன்னை பவானி ஒரு வாளை சிவாஜிக்கு பரிசளித்தது என்கிறார்களே அது உண்மையா? சிவாஜி ஏன் முஸ்லீம்களுக்கு எதிராக போராடினார்? அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலா? அல்லது அவர்கள் அரசர்கள் என்பதாலா? இரண்டுமாகவும் இருந்தால் இவற்றில் எது முதன்மையானது? முக்கியமானது?

உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு வரலாற்று ஆய்வு ரீதியான விளக்கங்களை இப்புத்தகத்தில் கொடுத்துள்ளார்.

புத்தகத்திலிருந்து சில கொசுறுத்தகவல்கள்…

சிவாஜியின் படையில் ஏராளமான இஸ்லாமியர்கள் இருந்தனர். குறிப்பாக அவரது காலத்தில் மிக முக்கியப்படையாக கருதப்பட்ட பீரங்கிப்படையின் தலைமை தளபதியாக இப்ராஹிம் கான் என்ற இஸ்லாமியரே இருந்தார்.

கப்பல்படையில் உள்ள ஆயுதப்படைப்பிரிவின் தளபதியாக தாரியா சரங் தௌலத்கான் என்ற இஸ்லாமியரே இருந்தார்.

சிவாஜியின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களில் நம்பிக்கைக்குரியவராக மாதாரி மெஹடர் என்ற இஸ்லாமியரே இருந்தார். சிவாஜி ஆக்ரா கோட்டையிலிருந்து தப்பிக்க தன்னுயிரை கொடுத்து காத்தவரும் இவரே.

அக்பரின் அரசவையில் வருவாய்த்துறை அமைச்சராக தோடர்மால் என்ற இந்து மதத்தை சார்ந்தவரே இருந்தார்.

ஷாஜகானின் அரசவையில் ஜனநாத் பண்டிட் என்ற உயர்சாதி பிராமணரே சமஸ்கிருத கவிதையெழுதும் கவிஞராக இருந்தார்.

ஷாஜகானின் மகன் தாரா ஒரு சமஸ்கிருத அறிஞராவார்.

சிவாஜி யார்? – செங்கொடி

எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே 

மொகலாய மன்னர்களிலேயே கடும் மதவாதியாக இருந்தவர் ஔரங்கசிப் தான். ஆனாலும் அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் 21.6 % இருந்த இந்து மத அதிகாரிகள் பின்னர் 31.6% ஆக அதிகரித்தனர். மேலும், அவரின் முதலமைச்சரும் ரகுநாத் தாஸ் எனும் இந்துதான்.

ஔரங்கசீப் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த பல அரசுகள் மீது படையெடுத்த போது பல கோவில்களை அழித்தார். பின் அவரே அகமதாபாத்திலுள்ள ஜெகநாதர் கோவிலுக்கு 200 கிராமங்களை பரிசளித்தார்.

மராட்டியர்கள் கொள்ளையில் ஈடுபட்ட போது சிருங்கேரியில் உள்ள சாரதா கோவில் சேதப்படுத்தப்பட்டது. பின் முஸ்லிம் மன்னரான திப்புசுல்தான் அந்த கோவிலை மீண்டும் நிறுவினார்.

காஷ்மீரைச் சேர்ந்த இந்து மன்னரான ஹர்சதேவ் இந்துக்கோவில்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் கடவுள் சிலைகளை அதிலுள்ள உலோகத்திற்காக உருக்கினார்.

சிவாஜி இருமுறை சூரத்தை கொள்ளையிட்டார் ஆனால் அவர் எங்கும் சிறு மசூதியையும் அழிக்கவில்லை.

(மன்னர்கள் ஏன் கோவிலை கொள்ளையிட்டனர் அதற்கான காரணம் என்ன என்பதையும் தெளிவாக நூலில் விளக்கியுள்ளார்)

சிவாஜிக்கு பல மதகுருமார்கள் இருந்தனர் அவர்களில் யாகுத் பாபா என்ற இஸ்லாமியரும் இருந்தார்.

மாவீரன் சிவாஜி - Welcome to Kavikko Pathipagam

ஆக மொத்தத்தில் மன்னராட்சி காலத்தில் அரசியல் அதிகாரத்திற்கே முக்கித்துவம் தரப்பட்டது, மதத்திற்கு அல்ல. மன்னர் எந்த மதம் என்பது இங்கு முக்கியமானதாக கருதப்படவில்லை. அவர் மக்களுக்கானவரா என்றே பார்க்கப்பட்டது. அதனால்தான் அக்பர் 52 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். மக்கள் அவரை ஜகத்குரு என்று கொண்டாடினர்.

“சிவாஜி மத உணர்வு கொண்டவர்தான், அவர் இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொண்டார். மிகப்பெரும் கொடைகளை கோயில்களுக்கும், பிராமணர்களுக்கும் அளித்தார் இவையெல்லாம் உண்மையே. ஆனால் அவர் தனது மதத்தின் மீது கொண்ட பெருமிதம் மற்ற மதங்களின் மீதான வெறுப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல. முஸ்லீம்களை வெறுக்காவிட்டால் தான் ஒரு மாபெரும் இந்துவாக இருக்க முடியாது என்று அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. அவர் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் ஆனால் மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். அவரது மத நம்பிக்கைகள் அறிவுப்பூர்வமாக இருந்தது”.

இந்து மத அடிப்படைவாதிகளால் மக்களுக்கானவராக இருந்த சிவாஜி இவர் இந்துக்களின் காவலன் இஸ்லாமியர்களின் எதிரி என்று பொய் பரப்பப்பட்டதோ அதே போல இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் சிவாஜி என்பவர் இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானவர் அவர் இஸ்லாமியர்களை சித்ரவதை செய்தார் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.

மதஅடிப்படைவாதிகள் ஏன் இவ்வாறு வரலாற்றை திரிக்கின்றனர் என்று அதற்கும் பதிலளித்துள்ளார்.

மதங்களை நேசிப்போரும், மதங்களை கடந்து மனிதரை நேசிப்போரும். ஒரு மன்னராட்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை தெரிந்துகொள்ள ஆவலுள்ளோரும் அவசியம் வாசித்து விடுங்கள்.

-கார்க்கி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *