உலகின் பழமையான மம்மி! | Dinamalar
காலத்தின் எச்சம்
………………………………
வெய்யில் தாழ்ந்த
பூமிப்பொழுதின்
பறவைகள் அடையும்
கூடுகளில்
ஔிந்திருக்கிறது
காலத்தின் எச்சம்
கிராமம் துறந்து
நகரமடைந்து
பொன்னீற்கால
புதையலில்
தொலைத்துவிட்டு
மிஷின் வாழ்வை
கணிணியில் ஏற்றுகிறது
துருப்பிடித்த காலத்தின் கைகள்
வறண்ட பூமியெங்கும்
விளம்பர பதாகைகள்
விளைச்சலில்லா பூமியில்
விலைபோகிறது நிலம்
நரகமெனும் நகரத்திற்காக
அலுவலக ஏசியில்
வெங்காயமும்
பழைய கஞ்சியும்
பாட்டி பத்து ரூபாய்க்கு
படியில் போடும்போது
படபடத்து துடிக்கிறது
ஒரு கை அள்ளிய உள்நெஞ்சு
ஔிந்திருந்த காலத்தின்
மீதத்தின் எச்சத்திற்காய்!!!
இரவின் உற்சவம்
———————————–
இரவு - கட்டுரை
வீதிகளின் விளக்கு
குடிசைகளை எரியச்செய்கிறது
ராத் தூக்கம் தொலைத்த மொபட்டுகள்
தலைவனுக்காக வாசலிலே
விழித்திருக்கின்றன
தெருக்களின் அமைதி நாய்களால் நங்கூரமிடுகின்றன
திருடர்கள் ஜாக்கிரதை ஔிர்கிறது…
சில வீடுகளில் இருமல்கள் இருமிக் கொண்டேயிருக்கின்றன
நோய்களின் கூடாரம் ஏழை வீடுகளில் நிரந்தரமாக தங்கிவிடுகிறது…
இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் முழித்திருக்கலாம்
பசிகள் தூங்குவதில்லையே!
குடில்கள் தாலாட்டுப் பாட்டைப் பாடலாம்
குழந்தைகளுக்கேது இரவு?
அமைதியும் தெருக்களும் ஆழ்கடல்போல!
அள்ள அள்ளக் குறையா அட்சயப்பாத்திரமாய்…
இருள் முதலாளியை
தெருக்களின் தொழிலாளி
தூரவே நின்று வேடிக்கை பார்க்கிறது.
வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *