தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அறிவியல் வெளியீட்டின் மூலமாக சாமானிய மக்கள் முதல் சாதனை மனிதர்கள் வரை அறிவியல் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. அதில் மிகச் சிறப்பான புத்தகம் இந்த வேகல் நடனம்.
தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதைகள் உள்ளன. புத்தகத்தில் பல சூழலியல் கதைகள் இருக்கின்றன. மாணவர்கள் இரு மொழிகளிலும் படித்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. சூழல் குறித்த விழிப்புணர்வு தேவைப்படும் நேரத்தில் இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கிறது .
முதல் கதை மின்மினிப்பூச்சு:
மரத்திலிருந்த குரங்கிற்கு ஒரு ஆச்சரியம்! என்ன? தூக்கணாங்குருவிக்கூட்டில் வெளிச்சமாக இருக்கிறது. குருவிக்கூடு மின்னுது எப்படி? என்று அதை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தது குரங்கு. குருவி வெளியே சென்றதும் குருவிக்கூடு சென்று பார்த்தது குரங்கு. வெளிச்சம் வரும் இடத்தை தன் விரலால் தொடச் சென்றதும் ” வேண்டாம் , வேண்டாம் என்னை கொல்ல வேண்டாம்” என்று ஒரு குரல் கேட்டது என்ன என்று பார்த்தால் மின்மினி பூச்சி.
“நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் உன் உடம்பிலிருந்து எப்படி வெளிச்சம் வருகிறது? எனக்கு அதை மட்டும் சொல் ” என்று குரங்கு கேட்டது. அதற்கு மின்மினிப்பூச்சி ” மற்ற பூச்சிகளுக்கு சுரக்காத ஒரு வேதிப்பொருள் எனக்கு சுரக்கின்றது. அதன் பெயர் லூசிஃபெரஸ் எனும் என்சைம். இதனால்தான் வெளிச்சம் தோன்றுகிறது” என்று சொன்னது மின்மினிப்பூச்சி. குரங்கு மட்டுமல்லாமல் நாமும் இந்த கதையை வாசிப்பதும் மூலம் இந்த தகவலை அறிந்து கொள்ளலாம்.
வேகல் நடனம்
பூக்கள் நிறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒரு வேலைக்கார தேனீ பறந்து போகும். அது பூக்களை கண்டுபிடித்து தேன் உறிஞ்சி வரும். தேன் நிறைந்த பூக்கள் இருக்கும் அந்த இடத்தை மற்ற தேனீக்களுக்கு சொல்லும் . அது எப்படி சொல்லும் தெரியுமா ? வேலைக்கார தேனீ தான் சென்று வந்த தூரத்தை நடனம் மூலமாக சொல்லும். ரவுண்டு ரவுண்டாக டான்ஸ் ஆடும். தனது நடனத்தின் மூலம் பூக்கள் இருக்கும் இடத்திற்கான தூரத்தை மற்ற தேனீக்களுக்கு சொல்லும். இதன் பெயர்தான் வேகல் நடனம்.
இதுபோன்று சின்ன சின்ன கதைகள் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியல் தகவல்களை இந்நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயனுள்ள நூல். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நன்றி!
ஜனனிகுமார்
நூல் : வேகல் நடனம்
ஆசிரியர்: செ. ஸ்டாலின்( தமிழ்)
ஆங்கிலம் – ஷாலோம் ஸ்டாலின்
பக்கங்கள் : 80
வெளியீடு : அறிவியல் வெளியீடு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.