பறந்து வரும் உன் வானத்தை
தரையில் இருக்கும் கூடுகள்
அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன.
சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை.
கைக் குலுக்க மறுத்த காரணங்கள்
தேச வரைபடங்களில்
கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
உறவின் அர்த்தங்களை அவமானத்தில்
புதைத்த அவன் தேசம்
சமவெளி எங்கும் எந்திர மனிதர்கள்
மத்தாப்பு கொளுத்தி நடனமாடுகிறார்கள்
காயப்பட்டு கண்மூடிக்கிடக்கும் அந்த இரவு
உயிர்ப்பறவையின் படபடப்பு
பிரபஞ்சத்தின் பால்வீதிகள் இருண்டுபோய்
நட்சத்திரங்கள் தடுமாறுகின்றன.
தோழி
அவனை எட்டிப்பார்த்து
காற்றில் முத்தமிட்டு
கரைந்துவிட முடியாமல்
அடங்கிப்போகிறது பரணி.
கண்மூடிய கனவுகளை
அவன் சுடுகாடுகள்
எரிக்குமோ புதைக்குமோ?
யுத்தகளத்தில் மூடாமல் விழித்திருக்கும்
பிணத்தின் கண்களிருந்து
அழுகி நாற்றமெடுக்கிறது
அவன் எப்போதோ கொடுத்த
வெள்ளைப்பூக்களின் வாசம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கீழுள்ள கவிதைகள் தங்கள் கவிதையின் கடைசிப் பத்தியின் தாக்கத்தில் உருவான தன்முனைக் கவிதைகள்… என்றால் உங்கள் கவிதையின் சிறப்பை எப்படி வார்த்தைகளில் சொல்ல?
வணக்கங்கள்!
நீயா நானா?
ஆதிக்கப் போர்
வல்லரசுகளின் வீம்புக்கு
புறா விருந்துகள்
You or me?
War of domination
To the boom of the superpowers
Pigeon Feasts
யுத்தக் களம்
கருகும் உயிர்கள்
எரிப்பதா? புதைப்பதா?
விவாதத்தில் ஊடகங்கள்
Battle field
Nucleating lives
Burning? Or Bury?
The media in the debate
எதைப் புதைக்கிறார்கள்?
எதை விதைக்கிறார்கள்?
கருகும் உயிர்கள்
அழுகும் மனிதம்
What are they burying?
What are they sowing?
Nucleating lives
Rotten manhood
# Raju Arockiasamy
17..03.2022