வேல்முருகன் இளங்கோ எழுதிய “இரவாடிய திருமேனி ” நாவல்
இந்த நாவல் ஒரு மிக முக்கிய நாவலாக உருவெடுக்கும் என்று எனக்குள் தோன்றியது இது ஆசிரியரின் மூன்றாவது நாவல் அவரின் இரண்டு நாவல்களில் இருந்து இது முற்றிலும் வேறு திசை நாவல் என்று சொல்லலாம் அவரின் அந்த இரு நாவல் என்னை மிகவும் கவர்ந்தது இது அதையும் தாண்டி என்னை வியக்க வைத்த நாவல் என்று சொல்வேன் இவருடைய எழுத்துக்கள் இன்னும் பல முனையில் கொண்டாடப்படும் என்று உறுதியாக சொல்லலாம் இவரின் முதல் இரு நாவல்களைப் போல் கிளை கிளையாக மூன்று கதைகளை கொண்டு வரும் என்று எண்ணத்துடன் புத்தகத்தை திறந்தேன் ஒரு பெரிய எதிர்பார்ப்பு திறந்து வாசிக்க ஆரம்பித்ததும் ஆனால் இது அதை போல் இல்லை வேறு விதமாக இருந்தது முற்றிலும் வேறு ஒரு களமாக எனக்கு அறிய முடிந்தது..
ஒரு கள்வனை பற்றிய கதை என்று படிக்க ஆரம்பத்தில் அது ஒரு கோணத்தில் தொடங்கி எங்கெங்கோ பயணம் இந்த தூரம் பயணம் அந்த நாவலின் என் மனம் ஒன்றி போய்விட்டது இதன் இடையில் எந்த புத்தகத்தையும் வாசிக்க மனம் இடம் கொடுக்காமல் தொடர வேண்டும் என்று மட்டும் என்னுள் எண்ணத்தை விதைத்தது..
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் பெரிய கள்வன் சாம்பன் அவனுடன் பயணிக்கும் நாவிதர்கள் பெரியசாமி, பரிதி நாட்டில் உள்ள மற்றவர்கள் பண்டிதர், கோதை மாறவர்மன், கோபிலன், ராணி நாகம்மை, ஶீவத்சர், சங்கன், சுருளி காந்தர்வன், கிருஷ்ணப்ப நாயக்கர் என்று இவ்வளவு மட்டுமே கதாபாத்திரங்கள்
இவர்களுடன் இன்னும் சிலர் அவர்கள் கதை மாந்தர்களாக காட்டில் உள்ள பெண் அவர்தான் சாம்பனின் உடன் பயணிக்கும் உயிர்..
இந்த சாம்பன் மற்றும் பரிதி பெரியசாமி இந்த மூன்று பேருடன் இரு காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து ஒரு அரிய மலர் யாரும் அறியாத மலர் அந்த மலரை கொண்டு வர அரசின் யானை அது இல்லை என்றால் உயிர் சேதம் என்று பெரிய வேலை கொடுக்கப்பட்டு உங்களுக்கு உதவிக்கு இந்த சாம்பன் என்று பெரியசாமியுடன் அனுப்பப்படுகிறான் இந்த மலர் தீக்கடம்பை மலர் இதைக் கொண்டு வர உத்தரவு.. தீக்கடம்பை என்பது பண்டுவர்களின் ரகசிய மூலிகை திரட்டில் உள்ள மலர் அதுவும் அவர்களது குடி வழி நம்பிக்கை தான் அப்படி ஒரு மலரை இதுவரை எவரும் கண்டதில்லை என்றும் சொல்லிவிடுகிறார்கள்..
இந்த மலரை பார்த்த உயிர் என்று எதுவுமில்லை இதனை எப்படி கண்டறிவது என்று ஒரு ஓலையில் எழுதி வைத்துள்ள நாவிதர்களின் முன்னோர்கள் இதுதான் ஆரம்பம் இப்படி தொடங்குகிறது என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது எதுதான் இதற்கு தீர்வு என்று பக்கத்திற்கு பக்கம் நம்ம யோசிக்க வைக்கும் அப்படித்தான் இருக்கிறது இவருடைய எழுத்தின் நடை ஒரு முதிர்ந்த பெரிய ஆளுமையை மனதில் உருவாக்குகிறது அப்படித்தான் இவர் இதை வடித்துள்ளார் மிக நுட்பமாக பல செய்திகளை சர்வ சாதாரணமாக சொல்லி விடுகிறார் ஆசிரியர்..
இந்தக் கதையில் வரும் கள்வன் சாம்பன் தனது சிறுவயதில் தனது தந்தையிடம் களவை பற்றி கற்றுக் கொண்டதை அதைவிட எது செய்யக்கூடாது என்பதையும் சொல்லித் தரும் பாடம் அவனிடம் ஒரு சில களவு பாடங்களை கூறி அவர் கழு மரத்தில் இருக்கும் போது சொல்லும் செய்திகளாக சொல்கிறாா்..
அவர் சாம்பனை இடைவிடாது அழைத்தது சில களவுப்பாடங்களை அவனிடம் கூறி அகலவே. வாசல் முழுவதும் உலர்த்தி வைத்திருந்தாலும் உழுது பிழைக்கும் கூலிகளானால், ஒரு தானியப் பருகையைக் கூட எடுக்கக்கூடாது. காணிகள் வைத்திருப்பவன் எனில் துணிந்து உள்ளே செல், அவன் களவு நீங்கிய கள்ளர் குலத்தவனே என்றாலும் தயங்காதே. ஆண் துணை இல்லாத, பெண்ணால் பிழைக்கும் வீடுகளெனில் வணங்கிவிட்டு நகர்ந்துவிடு. வயதடைவதினால் மட்டும் நீ ஆண்மகனாக ஆகப்போவதில்லை. அரச கோட்டைக்குள் களவு நோக்கில் நுழைந்தால் மட்டுமே நீ அந்நிலையை அடைவாய் நான் பெற்ற மகனே, களவென்பது கேட்பதற்கு எளிமையான ஒன்று. ஏன் புரிவதற்கும்தான்.
அது எவருக்கும் சாத்தியமானதுதான். அதில் நீ எவ்வாறு வேறுபடுகிறாய். திறமையினாலா? வேகத்தாலா? இல்லை என் மகனே. களவில் நாம் கடைபிடிக்கின்ற ஒழுக்கமே நாம் யார் என்பதற்கான அடையாளம். ஒழுக்கமும், பற்றுதலும், வரியவர் மீதான இரக்கமும் அதில் இருந்தாக வேண்டும். நம் களவு பிறரைப் பசியாற்றுகிறது என்றால் அது ஒரு மகத்தான மானுடக் காரியமாக உருக்கொள்கிறது என்பன போல் சாம்பனுக்குக் கூற அவரிடம் எத்தனையோ பாடங்கள் இருந்தன இப்படி முடிகிறது அவரின் வாழ்க்கை. .
காட்டிற்குள் இருக்கும் வாழ்க்கை அது வேறு ஒரு உலகமாக பார்க்கப்படுகிறது அந்த காடு என்ன செய்யும் அது உண்மையை நாம் யூகிக்க முடியாத செயலை செய்யும் என்று சொல்ல வைக்கிறது..காட்டைப் பற்றி சொல்லும் வரிகள் மிக நுட்பமாக அதே சமயம் மிகவும் சிறப்பாகவும் இருக்கும் சாம்பன் நினைக்கும் நிகழ்வு..
எத்தனைப் பாறைகள், எத்தனை மரங்கள். சருகுகளாய் நேற்றைய தளிர்கள். அதற்கீடாய் உருண்டோடும் வனத்தின் வருங்கால விதைகள். இந்தப் பிரவாகம் எப்போது தொடங்கிற்று? இந்த எல்லையற்ற சொரூபத்தின் முன் எனது வாழ்க்கை எத்தனை சிறியது? அதில் அதற்கான போராட்டங்கள், இழப்புகள், மனச் சள்ளைகள். இங்கிருந்து நோக்கினால் எதற்கும் வருந்தவோ, அஞ்சவோ வேண்டாம் என்று படுகிறது. அக்கணத்தில் சாம்பனுக்குத் தன் வாழ்வும், மரணமும் முக்கியத்துவம் அற்ற நிகழ்வுகளாகத் தோன்றின.
இந்த காட்டு வாழ்வில் அவன் அனுபவித்த ரணங்களில் ஒரு சில துளிகள்..
மேற்கு மலைக்காட்டில் வருணப் பொலிச்சல் நின்றிருக்கவில்லை. இரவும், மழையும் ஓயாது நீண்டன. வனமெங்கும் ஒருவித துக்க முனகல் கசிந்தோடியது. சகதி புரளும் இருண்ட வெளியில் சாம்பன் தொலைந்திருந்தான். அவனது உடலெங்கும் முளைவிட்டிருந்த அம்மைக் கொப்புளங்கள் செடிகள், மரங்களில் உராய்ந்து பிய்ந்து வடிவதும், பிறகு ஊன் நீர் ஓடிய இடங்களில் புதுக் கொப்புளங்கள் தலையுயர்த்துவதுமாய் இருந்தன. கனத்த மழைத்தூறல்கள் அவற்றின் மீது விழும்போதெல்லாம் அவன் வலி பொறுக்க இயலாமல் சாவின் பாதையைத் தேடினான். இமைகள் மீது தோன்றியிருந்த அம்மை மொட்டுகள் அவனது விழிகளுக்குத் திரையிட்டிருந்தன. இருளையும்,ஈரத்தையும் தவிர அவனால் வேறெதையும் உணரமுடியவில்லை. அம்மைக் காய்ச்சலில் அவன் மேனி சுட்டெரித்தது. தீய்ந்த இரும்பின் மீது விழும் நீராக அவனுடலில் உதிர்ந்த ஒவ்வொரு சொட்டுத் தூறலும் அவனது ஆவியை உஷ்ணத்துடன் பிய்த்தது. பரிதியை ஏற்றிய மரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதையே அவனால் அறிய முடியவில்லை. பள்ளமும், மேடும், முட்களும், புதர்களும், முழங்கால் வரை பதியும் சேற்றுக் குழிகளும் மாறி மாறி எதிர் வந்தன. காடு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டதைப் போல் சில இடங்களில் திறந்தவழி மழையை உணர்ந்தான். இமைகளைத் திறக்க முயன்று துடித்தான். இமை விலகல் என்பது அவனுக்குப் பாறையைப் பிளப்பது போல் கடினமானதாய் ஆகியிருந்தது. மங்கலான திறப்பில் மழையும், இருளுமே நிறைந்திருந்தன. இப்படி தான் காட்டின் ரணம் அவனுக்கு இருந்தது
மாறவர்மனின் மகள் கண்ணம்மா இறப்பு சிறு வயதில் உண்டான ஒரு இழப்பு அதை அவர் குடிசையில் ஒரு சிறுமி இறக்கும் போது அந்த உணர்வை வெளிபடுத்துவது நம் கண் முன் கொண்டு வரும்போது நமது கண்கள் குளமாக்குகின்றன அந்த இழப்பை வாசிக்கும் தருணம் மனம் ரணமாகிறது..
எதிர்பார்க்காத நிகழ்வுகள் நிறைந்த நாவல் எது என்று சொல்லலாம் பெரியசாமியின் இழப்பு கண்டிப்பாக அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர் யானையை செயலிழக்க வைத்த நிகழ்வு வாசிக்கும் போது அதிசயமாக வாசிக்க முடிந்தது இது வேறு மாதிரியாக இதுவரை வாசித்ததில் இல்லாத உணர்வை எனக்கு தந்தது செந்நாய்கள் கூட்டம் அதனின் செயல் அதன் பிறகு அதற்கான விளக்கம் என்று சொல்வது சிறப்பு என்று சொல்லத் தோன்றுகிறது..
சுருளி சங்கன் இவர்களின் வாழ்க்கை அந்த வரிகளை வாசிக்கும் போது நம்மை அறியாமல் மூக்கில் கை வைக்கத் தோன்றும் பலமுறை நான் வைத்து ஞாபகம் தான் எனக்கு தோன்றியது ஒருவித அருவருப்புடன் மனதிறக்கு தந்தது ஆனாலும் அதை கடந்து போகத் தோன்றியது தவறாமல் வாசிக்கவும் தோன்றியது ஒரு பக்கம் இல்லை ஒரு பத்திவிட்டாலும் கதை போக்கு நகரும் இடம் தடம் மாறும் எல்லா எழுத்துக்களும் சுகமே..
ராணி நாகம்மை அவளின் செயல் எனக்கு பல கோபத்தை தந்தது வசதி உள்ளவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது இவளுக்கு ஏதும் ரொம்ப கொடூரமான நிகழ்வு நேராத என்று மனம் ஏங்க வைத்தது..
மாறவருமனுக்கு குழந்தை பிறக்கும் வரை எதுவும் நடந்து விடக்கூடாது என்று மனம் பதப்பதைத்தது எப்ப என்ன வரும் என்று தெரியாது நிலைமை அதுதான் மனம் அல்லாடிய தருணம்
கோதையின் வாழ்க்கை கொஞ்சம் கடினமாக இருந்தது காந்தர்வனின் நினைப்பை அப்படியே பகிர்ந்து கொள்ள ஆசை அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் ஆசிரியரே ஒரு திருமணம் ஆன பெண் வேறு ஒரு ஆணிடம் சென்று மீண்டு திரும்புவதை அதே ஆண் எப்படி இவ்வளவு நுணுக்கமாக சிந்திக்க முடியும் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டு இந்த வரிகள் அவரின் எழுத்துக்கு ஒரு சான்று என்று கூட நாம் சொல்லலாம்
அவள் உணவருந்திய இடைவெளியில் காந்தர்வன் கோதையோடு தான் புரிந்த வக்கிரங்களை ரணத்துடன் எண்ணிப் பார்த்தான். அவளுக்கு ஒடிசலான உடல். அதற்குள் ஒரு மலை சுமக்கும் தீ பொதிந்திருக்கிறது. அதைத் தணி என்றும், நெருங்கினால் பொசுக்கிவிடுவேன் என்றும் மாறி மாறி அவள் கொள்ளும் நிலையாமை. என்னைக் காணும் போதெல்லாம் நடுக்கூடத்தில் நரகலைக் கண்டது போல் அவள் வெளிப்படுத்தும் அகச்சுளிப்பு. அணைப்பில் திமிருகையில் அத்தனை வன்மத்தையும் கடந்து அவள் காட்டும் சிறு தளர்வு. மரணத்துடன் போராடும் மனிதன் இறுதியாக ஒரு நுண்ணிய கணத்தில் தன்னை அதனிடம் உவகையோடு ஒப்படைப்பது போல… அவள் தன்னை ஒப்படைக்கு அந்த மெல்லிய இழையை அவளாலேயே உணர முடிவதில்லை. அப்போது அவளிடம் வெளிப்படும் அந்த விழியசைவு. அதை எப்படி விளக்குவேன்?! வாழ்க்கை இந்த வக்கிரங்களைக் கொண்டுள்ளது தான். அதையும் கடந்து அயரும் மனமே பூரணமான மனம் என அப்பார்வை வழியே அவள் பெருமூச்சு விடுவது போலிருக்கும். இது அவளது இரகசியச் சபலம் அல்ல. அவள் என் மீது கொண்டுள்ள நேசத்தை உணர்ந்த பின்னும் அவளுடனான புணர்விற்கு இப்படி விதிகளைக் கற்பிப்பது மடமை. என்று சொல்கிறாா் ஆசிரியர்
மலருக்காக இது நடக்கும் நாவலா இல்லை மனிதர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் நகர்ந்து வருகிறது என்று அவர்களின் வாழ்வை சொல்லும் நிகழ்வா என்று பல முனைகளில் யோசிக்க வைக்கிறது காடையும் அதன் வளத்தையும் அங்கு இருக்கும் உயிரினங்கள் மரங்கள் என்று ஒரு இயற்கை வனப்புடன் நாவல் நகர்வதும் ஒரு மனிதன் கற்க பல உண்டு என்று உணர்வதை அறிய முடிந்தது காட்டை பற்றி பெரியசாமி சொல்வதும் நமக்கு அதைக் கேட்கும் போது இப்படி எல்லாம் உண்டா என்று மனதில் தோன்றுகிறது இதில் பல இடங்கள் பலவாறு சிந்திக்க வைத்தது என்று கூட தோன்றியது தேர் அச்சு முறிந்து விழும் நிகழ்வு எதிர்பாராத நிகழ்வு மிகப்பெரிய மகா சங்கு அதற்கான விவாதங்கள் என்று பல நிகழ்வுகள் நாவலில் உள்ளது எந்த கதையையும் சொல்லிவிடக்கூடாது என்று தான் இதை எழுத நினைத்தேன் ஆனாலும் சில இடங்களில் கதையை நிகழ்வை சொல்லிவிட்டேனோ என்று தெரியவில்லை மிக அற்புதமான நாவல் என் பட்டியலில் கட்டாயமாக இடம் பெற்ற நாவல்..
வாசிக்க வேண்டிய நாவல் என்ன நாவல் வாசிக்கலாம் என்றால் என் பட்டியலில் உள்ளதில் இதுவும் முக்கியமான இடம் என்று சொல்ல தோன்றியது இதை முடித்தவுடன் எனக்குள்..
நன்றி.நன்றி.நன்றி
இன்னும் உங்கள் எழுத்துக்களில் பல நூல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “இரவாடிய திருமேனி” நாவல் |
| ஆசிரியர்: | வேல்முருகன் இளங்கோ |
| வெளியீடு: |
எதிர் வெளியீடு
|
| விலை: | ₹.699 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 நடராஜன் செல்லம் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
