Veluppu (Vellavi) Short Story By Era Kalaiarasi. Book Day And Bharathi TV Are Braches of Bharathi Puthakalayam.

*வெளுப்பு* குறுங்கதை – இரா. கலையரசி



வெள்ளாவி தான் வைக்கனும்..அப்பப்பா எவ்வளவு துணி.?

முன்னெல்லாம் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு போவார்கள்.

இப்ப குட்டி யானையில் தான் போறாங்க.
அழுக்கு துணியை ஒண்ணு கூட்டி எல்லார் வீட்டிலும் வாங்கி வருவாங்க

பஞ்சம்மாள் அப்படி தான் வாங்கி வந்தாள்.

அன்னைக்கு அந்த வீட்டம்மா ரொம்ப பேசிட்டாங்க.முதல் மாதிரி வெளுப்புல சுத்தமில்ல.காசு மட்டும் சரியா வாங்கிக்கோங்க.!?

போன தடவ போட்டப்ப துணி வெளுத்து
போச்சுனு சொல்லி ஏளனமா பேசுனாங்க.

மோதிரத்த காணோம்னு வீட்டம்மா, பஞ்சம்மாள் வீட்டுக்கே வந்துட்டாங்க.

தெருவே பார்த்து சிரிச்சுச்சு.இதோ! எல்லா சாதிக்காரங்க துணியும் வெள்ளாவியில் ஒண்ணா வெளுத்துச்சு.
ஆனால், மனுசங்க மனசு மட்டும் வெளுக்கவே இல்லை.

இரா. கலையரசி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *