உரைச் சித்திரத் தொடர் 11: மரம் ஏன்? தலையசைக்கிறது – கவிஞர் ஆசுமரம் இலை கிளைகளோடு அசைகின்றது. காற்று தான் அசைக்கிறது எனில், மரம் ஏன்?
அசைய வேண்டும். இருந்த இடத்திலேயே
அசையும் பொருள் மரமாக தான் இருக்க
வேண்டும். நீர் செடி கொடிகள் அசைக்கின்றன எனினும், மரம் தான் அசைத்து வழி நடத்துகிறது.

மரங்களை போல் வாழ வேண்டும்
என்று தன்னை அசைத்து சொல்கிறது. கிளையை வெட்டிக்கொல், உங்கள் வீட்டிற்கு கதவு ஆவேன் என்கிறது.
இலைகளை பறித்துக்கொள் மண்ணுக்கு உரமும். ஆடு மாடு ஜீவன்களுக்கு உணவாவேன் என்கிறது.மேலாக
உங்களுக்கு கனியாவேன் என்கிறது.

ஒரு போதும் காற்றில் அசைவதில்லை
என்கிறது மரம். நான் அசைவதின் வழியாக உயிர்க் காற்றை கொடுக்கிறேன் என்கிறது மரம்.
கிளை, இலை, கொம்பு கொப்பு, பிஞ்சு
காய் கனி, வேர்கள் எல்லாமும் நான்
அசைவதின் மூலம் உயிர்க்கிறது என்கிறது மரம்.

பறவைகள் ஏன்? மரங்களை தேடி வர வேண்டும். கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொரிக்க வேண்டும். அவற்றின் வீடாக
நானிருக்கிறேன். அதனாலேயே
அசைகிறேன் என்கிறது மரம்.

மனிதன் என் நிழலில், உறங்கி களைப்பாறுகிறான் என்கிறது மரம்.
என்னை நட்டு நீர் வார்த்து உரமிட்டு
வளர்த்த அவனுக்கு நான் செய்யும்
நன்றிக் கடன் என்கிறது மரம்.

மரம் ஏன்? தலையசைக்கிறது. மனிதன்
மனிதனாக இல்லாதபோது, தன்னை
அசைத்து யாவருக்கும் சொல்கிறது.
எவ்வுயிர்க்கும் நானே உணவு என்று.

ஆசு