உரைச் சித்திரத் தொடர் 12: கடவுளின் விசிறி – கவிஞர் ஆசுகாற்று பலமாக வீசியது. அவர் விசிறியை விசிறிக்கொண்டு களைப்போடு நடந்து வந்தார். எதிரில் வந்தவர், “என்னய்யா காற்று பலமாக வீசுகிறதே, விசிறிக்கொண்டு வருகிறீர்களே” என்றார்.

“காற்றுக்கு புழுக்கமாக இருக்கிறது. அதனால் விசிறிகிறேன்” என்றார்.
எதிரில் வந்தவர் கிறுக்கன், கிறுக்கன்
என முனகிக் கொண்டுப் போனார்.

காற்று இப்போது இல்லை. அவர் அப்போதும் விசிறியை விசிறிக்கொண்டு நடந்தார்.
இன்னொருவர் எதிரில் வந்தார்.
“என்னய்யா விசிறிக் கொண்டு வருகிறீர்களே புழுக்கம் அதிகமோ” என்றார். விசிறிக்கு வியர்க்கிறது அதனால் விசிறிகிறேன் என்றார்.

இப்போது அவர் விசிறியை மடித்து அக்குளில் வைத்துக்கொண்டு நடந்தார்.
அப்போது காற்று, “எனக்கு வியர்ககிறது
விசிற முடியுமா” என்றது. ம்.. என்று
விசிறினார்.காற்றின் பலம் கூட, விசிறி
உடைந்தது. அப்போது விசிறி, “நானோ
உடைந்து விட்டேன். இனி வியர்த்தால் எப்படி விசிறிக் கொள்வீர்கள்”.

அவரை சந்தித்த இருவரும், விசிறி இல்லாத அவரைப் பார்த்து, “கடவுளே
அவருக்கு நல்ல புத்தியை கொடுங்கள்”
என்றனர்.

கடவுள் சொன்னார். “அவன் தான் புத்திசாலி, எனக்கு வியர்க்கும்போது,
சரியான நேரத்தில் விசிறியை உடைத்து விட்டான்”

ஆசு.