உரைச் சித்திரத் தொடர் 14: கிளிகள் பேசும் காலம் – கவிஞர் ஆசுஅவன் கிளியை கூண்டில் அடைத்து வளர்க்கிறான். முன்பொரு நாள் காட்டில் வாழ்ந்தது. அது இப்போது காடு துறந்து வீட்டில் வாழ்கிறது. முன்பொரு பெண்டு பிள்ளைகள் .காதலியுடன் வாழ்ந்தது. இன்றோ அவன்வீட்டை கூடாக நினைத்து வாழ்கிறது.

கிளி, “என்னை ஏன்?கூட்டில்
அடைத்து வைக்கிறாய் பறக்கவிடு” என்கிறது. “கிளி தானே நீ உமக்கென்ன
பிரச்சினை இருக்கப்போவுது உண்பது உறங்குவது தானே உன் வேலை. இங்கேயே இரு என்கிறான்”.

“உண்பது உறங்குவது என் வேலை எனில், உமக்கு எப்படி சோறு கிடைக்கும்” என்கிறது கிளி.

“உம்மால் எனக்குச் சோறு கிடைக்கிறதா?
பைத்தியமாக பேசாதே” என்கிறான் அவன்.

“நான் காடு கழனிகளில் பறக்கிறேன். நீங்கள் விதைத் தூவி விதைக்கிறீர்கள்.
நானோ, நீங்கள் விதைத்த தளிர்த்து பூக்கையில், அதன் மீது உட்கார்ந்து பறந்து மற்றொரு பூக்களுக்கு மகரந்தங்கள் கடத்துகிறேன். அதனால்
தானியமாக, காயாக கனியாக குலுங்குவதை அறிவாய்தானோ”.

அவன் கிளிக்கு என்ன பதில் சொல்வதென்று திணறினான். கிளியை
கூண்டிலிருந்து திறந்து விட்டான். கிளி பறந்து, அவன் வீட்டு வேலிப்படலில் அமர்ந்து உலகத்தைப் பார்த்தது. “எல்லோரும் அவரவர் சரியெனப்படுவதை செய்கின்றனர்.
அவன் எனக்கான கூண்டில் உலகத்தைப் பார்க்கிறான். நான் என்னுலகத்தைப் பார்க்கிறேன் அவ்வளவுதானே” என்றது கிளி.

அவன் தன்னை உணர்ந்து நிமிர்ந்தான்.
கிளி அதன் காட்டைத் தேடிப்போயிற்று.

ஆசு