உரைச் சித்திரத் தொடர் 2: ஜெபக்கூடத்தில் பிரார்த்தித்தல் – கவிஞர் ஆசுஜெபக்கூடத்தில்
பிரார்த்தித்தல்
***************

ஆண்டவரே கருணைச் செய்க. உள்ளும் புறமுமான எண்ணத்தில் நீயே ஆகுக.
நிறைந்து வழியும் மனதில் ஓர் வழியை
நீ திறக்கிறாய். இன்னொரு வழியை நாங்கள் திறக்கிறோம்.

ஆண்டவரே யெளவனத்தின் எல்லா வளங்களுமாக கனிந்து கூடுக.
ஒரு வார்த்தைப் போதும். உலகமெல்லாம் நின் செயலால் நிறை எழுதி ஒளிர்க.

நாங்கள் பிரார்த்திக்கிறோம். எல்லோரின் கண்ணீர்த் துடைக்க நீளும்
உங்கள் கரங்களை முத்தமிடும் விண்மீன்கள் அறியும். உங்கள் மகிமை.

வல்லமையால் இவ்வுலகம் விழிக்க.
ஓர் ஞானச் சுடர் ஏற்றுக. இருளின் மாயை
அகற்றும் அச்சுடர் காலம் உள்ளவரை ஒளிர்க.

நாங்கள் பிரார்த்தில் ஓர் ஏழைக்காக. அவன் நாபியிலிருந்து தளிர்க்கும்,
ஏக்கமும் துக்கமும் உங்கள் காதுகளில் கேட்கின்றன. அவன் மட்டும் ஏன்?
துளி நிழலின்றி வாழ வேண்டும். அவனை மட்டும் ஏன்? நிராகரிக்க வேண்டும்.

ஜெபக்கூடத்தில், எங்கள் பிரார்த்தனையின் முறையீடுகள் ஒலிக்கின்றன.

ஆண்டவரே எங்கள் முறையிடுகளை
ஏற்க வேண்டுகிறோம். எங்கள் வேண்டுதல் வார்த்தைகளால் அல்ல.
குருதி கசியும் ஆன்மாவின்
உயிர்க்குரல் … உங்களையும் நொறுக்கத்தான் செய்யும்.

ஆசு

உரைச் சித்திரத் தொடர் 1: கவிஞர் ஆசு