பரிசுகள்
**********

எதிரேயுள்ள அலமாரியில் பரிசுகள் கண்களை பறிக்கின்றன. யாரோ ஒருவர் கொடுத்தது. அதில் ஒன்று நாய் பொம்மை,
பார்க்கும்போதெல்லாம் கடிக்க வருவது போலிருக்கிறது. ஏன்? எதற்காக? கடிக்க
எண்ணுகிறதென்றே தெரியவில்லை.

நாய் நன்றியுள்ளது என்று சொல்கின்றனர். ஆனால், பரிசாக கொடுத்த நாய் பொம்மைகூட இத்தனை விசுவாசமாக இருக்கிறது அது தான்
ஆச்சர்யம். ஏனோ தெரியவில்லை, எனினும்,அதை பார்க்கும்போதெல்லாம் கடிக்க வருவதுபோல தோன்றுகிறது.

சென்ற ஆண்டு, என் குழந்தையின் பிறந்த நாளுக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள் அது. நாய்கள் மனிதர்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதால், அதை பரிசாக கொடுத்திருக்கிறார். குழந்தைகளுக்கும் அவற்றின் குணங்கள் தெரியும் என்பதால் கொடுத்திருக்கலாம்.

ஒரு நாள் அந்த நாய் பொம்மையை அலமாரியிலிருந்து எடுத்து கீழே வைத்தபோது, லொள் என்கிற குரைப்பில், கரைந்து குழைந்தோம். பரிசுகளிலும் அன்பின் உயிர்ப்பு நெளிவதை, அந்த கணங்களின்
மகிழ்ச்சியாகிறது. குழந்தைகளின் கைகளில் பரிசுகளின் ஆச்சர்யம் மிகுந்து ஒளிர்கிறது.

எல்லா உயிர்களிலும், அன்பின் நீட்சி பிணைத்து இறுக்கும் சங்கிலியாக பரிசுகள். மானுடத்தின் வாழ்வு ஒரு பரிசாக இருப்பினும், அவற்றின் நேயமே
அதன் வாசனை, மனிதத்தில் கரைந்து
கலக்கும் கடல். இதுவரை கொடுக்கப்பட்ட
பரிசுகள் கரைகளற்ற கடலாக நீண்டு கொண்டேயிருக்கின்றன.

பரிசுகள் எவ்வளவு மேன்மையானதென்று, அந்த நாய் பொம்மையே சாட்சி. அதை குழந்தை கொஞ்சுகையில், லொள் என்கிற குரைப்பு இசை தளிர்த்து காதிலே ஊறுகிறது.

ஆசு



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *