உரைச் சித்திரக் கவிதை 35: காற்று அறியும் திசைகள் – ஆசுகாற்றின் பெயரை உச்சரிக்கும் கவிதைக்கு, காற்றின் திசை தெரியுமா என்றுத் தெரியவில்லை.

காற்றே! உன் பெயர் என்ன என்று கேட்டால் காற்று என்று தான் சொல்லக் கூடும். கவிதையே உன் பெயர் என்ன என்று கேட்டால், கவிதை என்று எப்படி சொல்ல முடியும். காற்றிற்கு எல்லாம் உயிர் கவிதை தானே. அதனால் கவிதையை என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று அதுவும் சொல்லக்கூடும்.

காற்று அவற்றின் திசையை நோக்கித்தான் வீசுகிறது. மனிதன் நிர்மாணித்த திசைகள் இல்லை. நோக்கும் திசை எல்லாம், அதுவன்றி வேறில்லை எனினும், எல்லோர்க்குமான திசையை அது தான் காட்டுகிறது.

காற்றே! இந்த வாழ்வின் கடைசி மூச்சு வரை நீயே தான் உடன் வருகிறாய்.
யார் யாரோ வந்து போன தடங்கள்
இருந்தாலும், காற்றின் தடத்தை யார்? அறியக்கூடும்.

காடு மலை நதி நிலமென திரியும் அதற்கு, பிரபஞ்சம் முழுமைக்கும் அதன்
திசையை தேடித் தேடி அலைகிறது. துளிப்பொழுதும் சோர்வடைவதில்லை.
மனிதர் ஏகும் இடமெங்கும் சென்று
அவர்களுக்கான திசையைக் காட்டினாலும், எனக்கான திசை எங்கே?
என கேட்கத்தான் செய்கிறது.

காற்றே! நீ உறங்கிவிடும் நாளில், இந்தப் பூமி என்னவாக இருக்கும். இந்த மனிதர்கள் இந்த ஜீவன்கள் , இந்த செடி கொடி மரங்கள் என்னவாக இருக்கும்.
நினைத்தால் அச்சம் மூண்டெழுகிறது.

காற்றே! நீ எப்போதும் உலவிக் கொண்டிரு.உன் திசையை தேடிக் கொண்டிரு.

காற்றின் திசையை காற்று தான் அறியும் என்றில்லை. அவற்றின் திசையை நோக்கி ஒவ்வொருவரின் விழிப்பும் இருக்கத் தான் செய்கிறது. அதன் திசையே நமக்கானதாக .

ஆசு