உரைச் சித்திரத் தொடர் 4: மயிலிறகு வாசிக்கும் புத்தகம் – கவிஞர் ஆசுஅந்தச் சிறுமி புத்தகம் வாசிக்கிறாள். ஒவ்வொரு எழுத்தும் உயிர்ப்பெற்று வருகிறது. இடை இடையே மயிலிறகுகள் புத்தகப் பக்கங்களில் துளிர்க்கின்றன. அச்சிறுமி, மயிலிறகுள் புத்தகம் வாசிக்குமா? என அதிசயத்தாள்.

குழந்தைகள் வாசிக்கும் புத்தகத்தை மயிலிறகும் வாசிக்கிறது மயிலிறகும்
குழந்தையாக. மயிலிறகு வாசித்து சிறுமிக்கு விளக்குகிறது.
அதற்காகத் தான் பனைக்குருத்து பஞ்சைத் தீனியாக சிறுமி வைக்கிறாள்.

“சாமீ எங்கொழந்தய, நல்லா வச்சுக்கோ”.
என்று மயிலிறகு நன்றாக இருக்க வேண்டும் என வேண்டுகிறாள் சிறுமி.

“நான் வாசிப்பது உனக்காகவே,
பயப்படாதே, நீ சிரமப்படாமல் வாசித்ததை தெளிவுற
சொல்லித் தருவேன்” என்கிறது மயிலிறகு.

புத்தகம் அதற்கென்று எதுவுமில்லை. எல்லோரின் வாழ்வையும் ஏந்திக் கொள்ளும் காலச்சுமை அது. இந்தச் சுமையை குழந்தைகளிடம் ஏற்றி வைக்குமா.

புத்தகத்தை வாசித்து தனக்கு சொல்லித் தரும் மயிலிறகுகள் ஒரு நாள் குட்டிப் போட்டிருப்பதை பார்த்து விழிப்பிதுங்க
பார்க்கிறாள் சிறுமி.

மயிலிற்குச் சொல்கிறது, “என் காதலன் புத்தகம். அவனுடன் இணைந்து ஈன்றவை இந்தக் குட்டிகள்”.

சிறுமி வெட்கம் அடைந்தாள்.
என் காதலனும் புத்தகம் தான்.
அவன் என் இணையர் ஆனால்
எவ்வளவு கொடுப்பினை என்றாள்.

ஆசு