உரைச் சித்திரக் கவிதை 41: கண்ணாடிக் குவளைகள் – ஆசுவிருந்தினருக்கு மிகவும் பிடித்தது கண்ணாடிக் குவளையில் நீர் அருந்தக் கொடுப்பது. நீரும் கண்ணாடியும் ஒரே நிறமானாலும், கண்ணாடி நீரை தனித்து தான் காட்டுகிறது.
விருந்தினர் கண்ணாடி குவளையை கையில் ஏந்தும்போது, அவர் மனமே அதில் இருப்பதாய் உணர்கிறார். மனதுக்கும் நினைவுக்குமான உணர்வு.
அன்புக்கும் நேசிப்புக்குமான உணர்வு.
கைகளில் இருக்கும் கண்ணாடிக் குவளையின் நீர் காதலின் வெவ்வேறு மனதின் பிரதிபலிப்பாக காட்டுகிறது.
கண்ணாடிக் குவளையில் நீர் நிரம்பும் போதெல்லாம் எவ்வளவு ஆனந்தம் அதற்கு. துளித் துளியான சேமிப்பின்
காலம் தருவித்த கொடை. ஆனால், நீரைவிட்டுப் பிரிகையில், தன்னை இழந்து நிற்கும் வலி.
இந்த வலியை கண்ணாடிக் குவளைகள்
உணரத்தான் செய்கின்றன. நீருக்கும்
கண்ணீருக்குமான பேதம் வலியாக கனத்தாலும், அந்த நேர ஆனந்தம்
தளிராக மலராக, கண்ணாடிக் குவளையில் பூக்கின்றன.
ஒருபோதும், மனிதர்போல் நொறுங்கிப் போகாமல், கண்ணாடிக் குவளைகள்
திடம் கொள்கின்றன. பனியின் மென்மையாக, இந்த வாழ்க்கையின் துயர் விலகும் பரிதியின் ஒளி கண்ணாடிக் குவளையில் ஜொலிக்கின்றன.
காலம் ஒரு கண்ணாடி.சில நேரத்தில், இந்த கண்ணாடிக் குவளையில் நீராக நிரம்புகிறது.
ஆசு