உரைச் சித்திரக் கவிதை 44: இரு கரைகளுக்கிடையில் .. – ஆசுஇரு கரைகளுக்கு கிடையில் தான்
ஒரு நதி ஓடுகிறது. நதியெனில் நீர், நதியெனில் படுகை, மலை, நதியெனில் மணல் மண், நதியெனில் மீன், நீர்ப்பறவை எல்லாமும்.

மனிதன் நதியின் கரைமீது வாழ்கிறான்.
கரைக்கு அந்தாண்டையில், பயிர் பச்சைகள் – ஜீவாதாரமிக்க ஒரு வாழ்க்கை புரண்டு நெளிகிறது.

மனிதன் இந்த நதியோடு கைகோக்கிறான். ஒவ்வொருக்கான நஞ்சை புஞ்சையில், நீரை நிறைக்கும்
அதன் ஆன்மாவை யார் புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கேள்வி.

விரிந்து பரந்த நிலத்தில் நீரின் தடங்களாய் விரியும் நதி யாதொரு பேதமும் பார்ப்பதில்லை. ஆனால், நதியின் மீது கண்ணியாய் இருக்கும் ஒருவன் மட்டுமே பார்க்கிறான். அந்த நதி
பறி போய்விட்டால், அந்த நீரும் போய்விடும் அல்லவா?.

அதன் கரை, நீரை தடுத்து நிற்கிறது. அதனால் என்ன செய்துவிட முடியும்.
தடுத்து ஒன்று சேர்ப்பதினால், அந்த நிலம் பாசனம் பெறுகிறது. உணவும் உயிர்ப்புமாய், உயிர்கள் எல்லாம் இன்பம் அடைகின்றன.

இரு கரைகளுக்கிடையில், நதி ஓடட்டும்
நீர் தவழட்டும், நீர்ப்பறவைகள் வட்டமிடட்டும். மீன்கள் துள்ளட்டும்,
காடு நிலம் செழிக்கட்டும்.

நதிக்கும் கண்ணீருண்டு. அந்தியின் ஆரஞ்சில் சிவந்திருக்கும் அந்த வேளையில், யாரோ தட்டிப் பறித்தது போலிருக்கிறது அதன் விடியல்.

ஆசு