உரைச் சித்திரத் தொடர் 9: தயவுசெய்து கதவைத் திறந்து வையுங்கள் – கவிஞர் ஆசுமியாவ்…. குரல் குழந்தையாக, காதில் கேட்கிறது. சினையுள்ள பூனை,
இன்றிரவுக்குள் குட்டியை ஈன்றுவிடும் போலிருக்கிறது.

கதவைத் திற என்று கெஞ்சி, மியாவ்…
அதன் அவசரம் கண்ணீர் மல்க கதவருகில் நிற்கிறது. கதவைத் திறந்துவிட்டதுதான் தாமசம்.
கட்டிலுக்கடியில், ஓடி ஒளிந்துகொண்டது.

மியாவ்…. குரல் தழுத்தழுத்து,

அம்மா…

அப்பா …..

கடவுளே…

பூனை மூச்சிரைக்க பிரசவ வலியில் முணுமுணுக்கின்றன.

அதற்குள் மூன்று குட்டிகளை ஈன்றுவிட்டன.

தாய்மையோடு, கதவைத் திறந்துவிட்டதற்காக, சீண்டி,
நன்றி ஐயா, எனச் சொல்கிறது.

ஈரப் பிசுப்பிசுப்புடன் வெடவெடத்த பூனைக் குட்டிகள், ம் ….ம்… என குரலிட்டு அதன் தாயைத் தேடுகிறது.

தாயல்லவா….

சேயல்லவா…

பூனை தன் குட்டிகளின் ஈரப் பிசுப்பை,
நாக்கால் ஒற்றி எடுத்து, வெடவெடப்பை
நீக்குகிறது தாய்மை….

எப்போதும் திறந்து வையுங்கள் கதவை.
வலியுடன் வருகிறவர்களுக்காக.

ஆசு