மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்

மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி
தமிழில் – உதயசங்கர்

விடியலின் ராணியின் பெயர் அரோரா. அழகியான அந்த ராணியை அழகனான் ஒரு இளைஞன் விரும்பினான். அவனுடைய பெயர் டித்தோனஸ். தினமும் அதிகாலையில் கிழக்கு திசையிலிருந்து, செந்நிற நீல நிறத்தில் திரையை விலக்கி அரோரா வெளிப்படுவாள். அந்த முகத்தைப் பார்த்து காலைவாழ்த்துப் பாடி மகிழ்வதற்காய் டித்தோனஸ் காத்திருக்கும். அதற்காகவே பச்சைப்பட்டுப் போன்ற புற்களின் மீது தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொண்டான் டித்தோனஸ்.

அவர்கள் இருவருவும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர். ஒரு நாள் அதிகாலையில் அரோரா வந்து பார்க்கும்போது டித்தோனஸைக் காணவில்லை. கவலையுடன் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தபோது தூரத்தில் ஓரிட த்தில் மண்ணில் கிடந்த வெளிறிய உடலைப் பார்த்த து.

அரோரா பூமிக்குப் பாய்ந்து சென்றது. இறந்து கொண்டிருந்த டித்தோனஸின் உடலைக் கைகளில் அள்ளியெடுத்த து. கடவுளரின் தலைவரான ஸூஸிடம் சென்றது.

“ டித்தோனஸ் இறக்க க்கூடாது..”

என்று அரோரா இறைஞ்சியது. ஆனால் இதற்கிடையில் ஒரு தவறு நடந்து விட்ட து. டித்தோனஸ் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு அரோரா மறந்து விட்ட து. அதனால் என்ன நடந்த து தெரியுமோ?

சட்டென டித்தோனஸ் மூப்பும் பலகீனமுள்ளவனாகவும் ஆகிவிட்டான். டித்தோனஸிக்கும் மிகுந்த வேதனை உண்டானது.

“ எனக்கு புல்வெளியில் இருந்தால் போதும்..அங்கே நான் மகிழ்ச்சியாக இருப்பேன்..”

என்று பலகீனமான குரலில் வேண்டுகோள் வைத்த து.

“ சரி அப்படியே ஆகட்டும் அன்பனே! உன்னுடைய மகிழ்ச்சியைத் தான் நான் விரும்புகிறேன்..” என்று அரோரா சொன்னது. பிறகு அரோரா டித்தோனஸிடம்,

“ என்னுடைய அன்புக்குரிய டித்தோனஸ்! உனக்கு எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கட்டும். இனிமேல் வெட்டுக்கிளியாக புல்வெளிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரட்டும். அதற்காக நான் ஒரு அழகான ஆடையைத் தருகிறேன்.. பூமியில் இதுவரை யாருக்கும் கொடுத்திராத ஆடை.”

என்று சொன்னது.

அந்த ஆடை இளம்புல்லின் நிறத்திலிருந்த து. புல்வெளியில் குதித்துப் போகும்போது யாராலும் அவனை அடையாளம் காணமுடியாது.

இப்படித்தான் வெட்டுக்கிளிகள் உருவாயின. புல்வெளியில் விளையாடப் போகும் சேக்காளிகளே வெட்டுக்கிளிகளைப் பார்க்கும் போது இந்தக் கதையைச் சொல்லுங்கள்.

எழுதியவர் : 


✍🏻 உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Abdul wahab

    கதை குறையாக உள்ளது.குறுகிய கதையாக உள்ளது.இன்னும் கொஞ்சம் பெரிய கதையாக இருந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *