காலத்தினாலும், அக்கறையின்மையினாலும், மண்மூடிப்போன, இந்திய வரலாற்றை, அகழாய்வுகள் மூலமாகவும், இந்திய நீராதாரத்தை அணைக்கட்டுகள் மூலமாகவும் மீட்டெடுத்த வெள்ளையர்கள் இந்திய தேசத்தில் என்னென்ன செய்தார்கள் என்பதை பற்றிய நூல்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாகவும், நாட்குறிப்புகளாகவும், கடிதங்களாகவும், அரசாங்க செய்திகளாகவும், பரவர்த்தனைகளாகவும், எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவைகள் நூலகங்களில் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன, அவைகளை நூற்றாண்டுகால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறார் திரு. ராஜேந்திரன் IAS அவர்கள்.

ஆங்கிலேயர்களின் வாழ்வில் அவர்கள் சந்தித்த சிக்கல்களை தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவாக இந்த நூலை விளைவித்திருக்கிறார் திரு. ராஜேந்திரன் ஐஏஎஸ்.

ஆங்கிலேயர்களைப் பற்றி நமது பாடப்புத்தகங்களில் பொதுப்புத்தியில் உள்ள கற்பிதங்கள் இந்த நூலில் நாம் வாசிக்கப் போகும் பதிவுகள் மாற்றக்கூடும் என்பது உண்மையாக இருக்கிறது!

சூரியன் அஸ்தமிக்காத தேசம் இங்கிலாந்து தன்னை அழைத்துக்கொள்ளக் காரணம் 1800களில் உலகின் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுமையில் இருந்தன, அந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் பகல் இருக்கும் என்ற கர்வத்தில் உதித்தது அந்தச் சொல்!

ஆங்கிலேயர்களால் பெரும் சரித்திர மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டது. 347ஆண்டுகள் நிலைபெற்ற ஆட்சியின் விளைவாக இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்கள் செய்த தீமைகளை விட நன்மைகள் அதிகம், மொழி, நிர்வாகம், பதவி, ஒழுங்கு என்பதோடு, ‘கலெக்டர்’ என்ற பதவியை உலகில் வேறு எந்த நாட்டிலும் உருவாக்கவில்லை.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவோடு வியாபாரம் செய்ய முயன்றபோது போர்த்துக்கீசிய, டச்சுக்காரர்கள் என, பல ஐரோப்பிய, வணிக நிறுவனங்கள் ஏற்கனவே, இந்தியாவில் காலூன்றியிருந்தன.

முதன் முதலாக, இந்தியாவில் காலூன்றிய, ஐரோப்பியர்கள் போர்த்துக்கீசியர்களே.

அடுத்து வந்த டச்சுக் கம்பெனி ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் நிலை கொண்டது.

போர்த்துகீசியர்களுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தோற்றுப் போன டச்சுக் கம்பெனி இலங்கை, இந்தோனேசியா என்று ஒதுங்கிக் கொண்டது.

டச்சுக்காரர்களுக்கு அடுத்து வந்த பிரெஞ்ச்சுக்கம்பெனி ஆற்காடு நவாப்பின் நட்பைப்பெற்று தன்னை அதிகார அமைப்பாக காட்டிக் கொண்டது.

இறுதியாக வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் அரசியல் சூழ்நிலைகளை சரியாக கணித்தனர்!

Who built Windsor Castle?

வின்ட்சர் அரண்மனை!

வின்ட்சர் அரண்மனைக்குள், கன்னி ராணி எலிசபெத்தை “எலிசா” என்று அன்பொழுக அழைக்கும் உரிமை லார்ட் ராபர்ட்டுக்கு மட்டும்தான் உண்டு.

தனக்கும் கன்னி ராணிக்கும் இருக்கும் நெருக்கம் யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி “அரண்மனை ரகசியம்” காப்பவர் லார்ட் ராபர்ட்.

“இருவரின் கண்களும் ஒருவரின் கண்களில் பிறரைப் பார்த்தன”

லார்ட் ராபர்ட்ராணி எலிசபெத்திடம், பேசினார்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க 30 பேர் கொண்ட வியாபார குழு
தயாராக இருக்கிறது. அவர்கள் இந்தியா என்ற தேசத்தோடு வியாபாரம் செய்ய விரும்புகிறார்கள்.

கடல் மார்க்கமாக சென்றால் ஆப்பிரிக்க தேசத்தை சுற்றி செல்லவேண்டும். ஒன்பது மாத கடற்பயணம் இந்தியாவில் மிளகு, அகில், பட்டை, கிராம்பு, சோம்பு, சந்தனம், போன்ற வாசனைப் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைப்பதால் அவற்றை வாங்கிக்கொண்டு வந்து
இங்கு விற்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

என்னையும், பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். நான் பணம் கூட போட வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் அவர்களுக்கு நீ அனுமதி கொடுத்தால் எனக்கும் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்கும் “எலிஸா”, உனது பெயரும் நிலைக்கும்.என்றார் லார்ட்  ராபர்ட்!

The real story of Queen Elizabeth and Robert Dudley
The real story of Queen Elizabeth and Robert Dudley

நமது நாட்டிற்கு பக்கத்திலுள்ள ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ் நாட்டு மக்கள், நமது மக்களை விட வசதியாக வாழ்கிறார்கள் என்று நம் தேசத்து மக்கள் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்!

ஸ்பெயினும், போர்ச்சுகல்லும் வளமுடன் இருப்பதற்கு, இந்தியாவுடனான வியாபாரம் மட்டுமே காரணம்!

எல்லாவற்றிற்கும் மேலாக போப் கிரிகோரியின் சொல் கேட்டு நடக்கும் ஸ்பெயின் அரசன் உலகம் முழுவதும் கத்தோலிக்க மதத்தை பரப்ப போகிறான் என்கிற அச்சமும் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த ராணி எலிசபெத்திற்கு வந்தது.

ஸ்பெயின் நாட்டு வணிகர்கள் போகும் நாட்டு மக்களிடையே சிலுவையை காண்பிப்பது, ஞானஸ்தானம் செய்வது, ஞாயிற்று கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனை செய்வது என்று கிளம்பி விட்டது.

நாம் டிசம்பர் 19ஐ முதல் தேதி என்றால் கத்தோலிக்கர்கள் டிசம்பர் 31ஐ முதல் தேதி என்கிறார்கள்.

நமது இங்கிலாந்து மக்கள் கத்தோலிக்கர்களிடமிருந்து வரும் வேண்டத்தகாத ஈர்ப்பிலிருந்து விலகி நிற்கவும், போப் தனது பெயரில் உருவாக்கி இருக்கும் “கிரிகோரி” காலண்டரை தவிர்க்க வேண்டியதன்  அவசியத்தையும், நமது “ஜுலியன்” காலண்டரை உலகெங்கும் நிலைநிறுத்த, நாம் கடல் வணிகம் துவங்க வேண்டும்

எனவே, அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.கன்னி ராணி எலிசபெத்தின்  புகழ் உலகமெலாம் பரவ இங்கிலாந்தில் “கடல் வணிகம்” பெருமளவில் உதவும் என்று இங்கிலாந்து பிரபுக்கள் சபையில் கன்னி ராணி எலிசபெத்தின் மனம் கவர்ந்த லார்ட் ராபர்ட் பேசினார்.

இந்தியாவில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் இறக்கும் நேரத்தில் இந்து – முஸ்லீம் பிரச்சனை, மராட்டியர்கள் – முஸ்லீம் பிரச்சனை, இரஜபுத்திரர்கள் – முஸ்லீம் பிரச்சனை, சன்னி முஸ்லிம் – ஷியா முஸ்லீம் பிரச்சினை, என்று மக்கள் மதங்களாகவும், இனங்களாகவும், பிரிந்திருந்தனர்.

மராட்டியர்கள், கூர்க்காக்கள், இந்துக்கள், சீக்கியர்கள், சியா முஸ்லிம்கள், முதலானோர் முகலாயப் பேரரசை கடுமையாக எதிர்த்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றரசர்கள், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஆயுதம் தாங்கிய கட்டுப்பாடான சிறுபடை, கட்டுப்பாடற்ற பெரிய படையை கூட எதிர்கொண்டு
வெல்ல முடியும் என்று கிழக்கிந்திய கம்பெனி கண்டுகொண்டது.

எதிரனியில் துரோகிகளை கண்டறிந்து பிளவை ஏற்படுத்தினால் போதும் இலகுவாக போரில் வெல்ல முடியும் என்று கம்பெனி உணர்ந்தது.

கம்பெனி இந்தியாவில் பிரிவுகளை ஊக்குவித்தது, துரோகிகள் உருவாகச் சந்தர்ப்பங்களை உருவாக்கியது! இந்தியாவின் ஆட்சியாளரானது.

கி. பி. 1600ம் ஆண்டு ஒரு டிசம்பர் மாத 31ம் தேதியில்  கன்னி ராணி எலிசபெத்தின் கையெழுத்தால் கிழக்கிந்திய கம்பெனி உருவானது.

கிழக்கிந்திய கம்பெனிக்கு  கிட்டங்கி வைக்க நிலம் தேவைப்படுவதால் குத்தகை பேச சர் தாமஸ் ரோ என்பவர் கி. பி. 1608ல் இந்திய பேரரரசர் ஜஹாங்கீரை ஆக்ரா அரண்மனையில் குனிந்து, பணிந்து, பவ்யம் காட்டி அனுமதி பெற்றார்.

கிழக்கிந்தியக் கம்பெனி தனது வியாபார பொருட்களை வைத்துக்கொள்ள கோட்டைகளை கட்டினர். பின்பு கோட்டையை பாதுகாக்க படைப் பிரிவை உருவாக்கினர்

இந்திய பேரரசை, அடிமையாக்க, ஒரு கள்ளக் குழந்தைஇந்தியாவிலேயே வளர்ந்தது.

இன்னும் 249 ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரிகளால் தனது பேரனின் பேரன் “பகதூர்சா” கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும், தனது பாட்டனார் “பாபர்” துவக்கிய “முகலாயர்களின் பேரரசு”331வது ஆண்டில்  இதோ இந்த அனுமதி பெற்ற கிழக்கிந்திய கம்பெனியால் முடிவுக்கு வரப் போகிறதென்றும்  மாமன்னர் ஜஹாங்கீருக்கு அன்று தெரிந்திருக்க நியாயமில்லைதான்!!

மேலும், தமிழகத்தில் 1916 ஏப்ரல் 3ம் தேதி நடந்த பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு சம்பந்தமான, முழுமையான விசாரணை விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெரும் தேசத்தை ஆங்கிலேயர்கள் கட்டமைத்தது என்பது வெள்ளிடை மலை.

நூலை அரசு ஆவணங்களோடு கொடுத்த சகோதரர் மு. ராஜேந்திரன் அவர்களை அறிவுலகம் கொண்டாடி மகிழும்.

வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
டாக்டர் மு. ராஜேந்திரன் IAS
அகநி வெளியீடு.

வாசிப்பு அறிவை மேம்படுத்தும்

ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
9894049160. 

One thought on “நூல் அறிமுகம்: “வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்” – ART.நாகராஜன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *