தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு கொரோனா காலத்தில் கட்டாய வீட்டுச் சிறையில் உதிர்த்து இருக்கும். குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு கதைகளை வாசிக்கும்போது நாமும் நம் பால்யத்திற்குத் திரும்பி விடும் பொருட்டு கதைகள் நகர்கிறது.
இந்த தொகுப்பில் வெவ்வேறு உலக மொழிகளில் எழுதப்பட்ட இருபத்தி ஏழு கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இரு கஞ்சர்கள் ஹீப்ரூ மொழிக்கதை இரண்டு கஞ்சர்களின் கஞ்சத்தனத்தால் உணவு கூட உண்ணாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வாழும் கதை
கெட்டிக்காரத் தவளை– ஜெர்மன் நாட்டுக் கதை நரிக்கும் தவளைக்கும் வழக்கமான உரையாடலில் நரியை விட தவளை தரமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
இளையவளும், அரக்கனும் – ஸ்காட்லாந்து நாட்டுக்கதை ராஜா இறந்த பிறகு ராணியையும் மூன்று குழந்தைகளும் குடும்பத்திலிருந்து விரட்டி அரக்கனிடம் இருந்து தப்பித்து வாழும் கதை குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கக்கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மகன்களை ஏமாற்றிய தந்தை – காஷ்மீரத்துக் கதை. இன்றைய குடும்பச் சூழலில் தந்தை மகன் உறவுகளில் சிதலம் ஏற்படுவதைக் குழந்தைகளுக்குக் கதையாக பதித்துள்ளது காஷ்மீரத்துக் கதை.
இன்னொரு காஷ்மீர் மொழி கதை தான் சூரியன் சந்திரன் காற்று விருந்துக்கு சென்ற கதை இதை ஏற்கனவே நான் எனது அம்மா சிறுவயதில் கூறியபோது கேட்டது. இப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, வேறு நாடுகளிலிருந்து கதைகள் மக்கள் வழியாக பயணித்து இருப்பதும். இதில், என் அம்மா சொன்ன அதே கதை மாற்றமில்லாமல் வந்திருப்பது என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வருடிச் சென்றது.
எல்லோரும் மொச்சை சாப்பிட்டு இருப்போம். ஆனால், மொச்சையின் மேலே இருக்கும் வெள்ளை முளைப்பகுதியை. மொச்சைக் போட்ட தையல் – ஜெர்மனி நாட்டுக் கதையில் நமக்கு மொழிபெயர்த்து விளங்க வைக்கிறார் எழுத்தாளர் சுப்பாராவ்.
பொதுவாக சிறார் கதைகள் இருக்கும் நண்பர்களின் ஜோடி சேருமணங்கள் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். அதையேதான் குழந்தைகளும் விரும்புகிறார்கள். அப்படியான ஒரு ஜப்பானிய நாட்டுக் கதைதான் – புத்திசாலி குரங்கு கரடி நண்பனும். தன் முதலாளி தன்னை கசாப்புக்கு அனுப்ப போகிறார் என்று அறிந்த குரங்கு தன் கரடி நண்பனை வைத்து தந்திரமாக பிழைத்து கொள்கிறது.
புத்தகத்தின் தலைப்பாக வந்திருக்கும் விடாமுயற்சி வெற்றி தரும் குறுங்கதை அரேபிய மொழி கதையாகும். இதில் ‘கேட்பவனுக்குக் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற பழைய அரபு மொழியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதை நண்பர் ஒருவர் சோதித்துப் பார்க்கச் செய்யும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமைகிறது. குழந்தைகளுக்கும் ஒரு செயலை தொடர்ந்து செய்யுமாறு நம்பிக்கையூட்டும் வகையில் கதை நகர்கிறது.
குழந்தைகள் விரும்பும் மாயாஜாலக் கதைகள் இல்லையே என நினைக்கும்போதே எனக்கு ஒரு கண் போனாலும் பௌத்த ஜாதகக் கதை வந்து நிற்கிறது. சங்கை வைத்துத் தான் வேண்டியதை நிறைவேற்றிக் கொள்பவனும் அதை அவனிடம் இருந்து பறிக்க நினைப்பவனுக்கு நிகழ்வும் துன்பமே கதையின் முடிவு.
இதில் வரக்கூடிய கதைகள் பெரும்பாலும் அண்ணன் தங்கைகளைப் பற்றியும், குடும்ப உறவுகளை பற்றியும், அதில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது பற்றியுமே, நகர்கிறது அதிலும் குறிப்பாகச் சீன தேசத்துக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.
சிலி நாட்டுக் கதைகள் குறும்புத்தனம் செய்யும் குழந்தைகள் மன்னர் உடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன்னரைத் தோற்கடித்து விடுகிறாள்.
நார்வே நாட்டுக் கதைகள் ‘யார் வேலை கடினம்’ என்கிற கணவன் – மனைவி பேதம் பற்றிய புரிதலைக் குழந்தைகளின் மனதில் ஒரு விட்டில் பூச்சி போல ஒளிரச் செய்கிறார் எழுத்தாளர்.
அமெரிக்கன் கதை – ‘கேன்டியின் மதிநுட்பம்’ படிக்கும் பொழுது கொஞ்சம் பயமாகவும் சிறார்களுக்கு எதற்கு ஒரு கொலை பற்றிய கதை என்கிற கேள்வியும் மனதில் குழந்தைகள் உலகத்தில் சூனியக் கிழவியும், அரக்கனும் இல்லாமல் போக மாட்டார்கள். அதே வரிசையில் அரக்கர்களை அடுத்து சூனியக் கிழவி வந்து நிற்கிறாள் ரஷ்யத் தேசத்து கதைகளில்.
ஜெர்மனி தேசத்துக் கதை பனிரெண்டு சகோதரர்களும் டென்மார்க் சொத்துக்களைப் பணி ரோஜாவும் வரும் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையின் மீதான வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் கதையின் முடிவு நம்பிக்கை ஊட்டும் விதமாகவே முடிகிறது இந்த கதைகளில் இருக்கும் ஒற்றுமைகள் பனிரெண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் கதைகள் வெவ்வெரு நாட்டிற்கு இவரும் வரிகளின் வாயிலாகப் பயணிப்பதற்கு இந்த இரண்டு கதைகளும் ஒரு சாட்சியாக இருக்கலாம்.
‘புத்திசாலி மரியா’ போர்ச்சுகல் நாட்டுக் கதை. ஒரு தவறை இழைத்துவிட்டு அதற்கு வருந்தும் போது. அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது என்பதை மரியா புரிந்து கொண்டு ஒரு பொம்மையை வைத்து நாடகம் செய்கிறாள். இதுவே குழந்தைகள் மீது கோபத்தையும் தவறுகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னான ஒரு நிதானத்தையும் பொறுமையையும் பற்றி உணர்த்தும் கதையாகும்.
ஜெர்மன் நாட்டுக் கதைகள் பெண்களின் புத்திசாலித்தனத்தைப் போற்றியும் மனைவிமார்களின் செயல்களை மட்டமாக நினைக்கும் கணவன்மார்களின் புத்தியைச் சம்மட்டியால் அடிக்கவும் செய்கிறது.
சீன தேசத்துக் கதை, ஸ்காட்லாந்து நாட்டுக் கதைகள் என உலக வரைபடத்தைக் குழந்தைகளுக்கான கதைகளின் வாயிலாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
நார்மண்டி நாட்டுக் கதை சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்று நிறங்களின் மீது காதல் கொண்டேன் ஒரு மன்னர் மாய உலகில் அவரை ஏமாற்றி வாழும் அவருடைய சித்தி என்று கதை போக்கக் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது.
ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை குழந்தைகள் விரும்பும் மாய உலகின் வீரர்கள் நிகழ்த்தும் கதைகளாக நீள்கிறது.
பிரான்ஸ் தேசக் கதை மூன்று நாய்கள் அண்ணன், தங்கை ஒற்றுமை பற்றியும் சொத்துக்களை சமபங்காக அண்ணன், தங்கை பிரித்துக் கொள்கிறார்கள்.
அயர்லாந்து நாட்டுக் கதை – சொந்தமாய்
ஒரு பனிக்கரடி குழந்தைகள் உலகில் எப்போதும் யாரும் மறைந்து விடவே முடியாத அளவுக்கு வண்ணங்களாக ஆகும் ராஜகம்பளம் கற்பனையாகவும் இருக்கும் வீட்டில் தன்னுடன் இருக்கும் பொம்மைகளை வைத்து குழந்தைகள் அட்டவணையில் எவ்வாறெல்லாம் விளையாடுவார்கள் என்று எதார்த்த கற்பனை வாதத்தை அயர்லாந்து நாட்டுக் கதை மூலமாக நாம் அறிய முடிகிறது.
இத்தனை கதைகளின் மொழிபெயர்ப்பை பார்க்கும் போது வியப்பாகவும் மலைப்பாகவும் தான் இருக்கிறது. பிறமொழிகளிலிருந்து கதைகளைக் கொண்டு வருவது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு டைம் பாமின் சரியான வயரை கண்டு பிடித்து வெட்டுவது போன்ற பரபரப்பு நிறைந்த வேலை. பிறமொழிகளில் உள்ள கருத்தையும் வருமொழியில் அடக்குவது சுலபமானதல்ல இருந்தாலும். அதை சரியாகக் கருத்து பிறழ்வு இல்லாமல் கொண்டு வந்த எழுத்தாளர் ச. சுப்பாராவ் அவர்களுக்கு அன்பும், மகிழ்ச்சியும்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.