உணவகத்தின் முன்பு நின்று
கொடியசைத்துக் கொண்டிருக்கும் பெரியவர்
பசியின் நிறம் தெரிகிறது
உங்கள் உள்ளங்கைகளும்
ஒருநாள் 
உலகமாக வேண்டுமெனில்
விடுவித்து விடுங்கள்
சிட்டுக் குருவிகளை
சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட
குருவிகள்
வாழ்நாள் முழுவதும்
பெருமையுடன் பாடப் போவது
தன்னைப் பற்றியல்ல 
தான் பெற்ற சுதந்திர உலகத்தைப்
பற்றித் தான்…
வரிசையாகவும், நேராகவும்,
வைக்கப் பட்டிருந்தன
சிலுவைகள் அனைத்தும்
ஆனால் என்ன
குறுக்காவும், நெடுக்காகவும்
அவர்கள்
ஏற்கெனவே
வாழ்ந்து முடிந்திருந்தார்கள்...
                 
            எழுதியவர் 
           இரா. மதிராஜ்
             காங்கேயம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.