“நிலவுக்கு செல்லும் திட்டம்” ~ தேடன்“நிலவுக்கு செல்லும் திட்டம்”

மீண்டும் ஒரு மறுபரிசீலனை கூட்டம்

திபாவளி ராக்கெட் வாங்க பட்ஜெட் உதைத்ததால்
போன முறை ஒத்திவைப்பு

இந்தமுறை,
கயிறு கட்டி ஏறினால் என்ன??!!
-முதலமைச்சர் “மனசு”

அருமையான திட்டம்
– அதிசயமாக ஆமோதித்தார் எதிர் கட்சி தலைவர் மங்கிய “மூளை”

பெரும்பாண்மை யின் பெயரில்
சிறப்பு ஆலோசகர் கேப்டன் கூகுளுக்கு வேலை

புள்ளி 35 நொடியில் கூறிவிட்டார்
கீழ்க்கானும் விவரங்கள்

பூமிக்கும் நிலவுக்கும்
3,84,400கி.மீ தொலைவு

நிலவின் சுற்றளவு 1737கி.மீ அளவு

பிறகு நிதியமைச்சர் கணிப்பானிடம் அவசர கட்ட ஆலோசனை

புள்ளி 5 கி.மீ சுருக்குக்கு என்று மொத்தம் 3,86,137.5 கி.மீட்டர் நீள கயிறு என முடிவு

துணை முதல்வர் “கைகள்”
பட்ஜெட் தாக்கல் செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் நொடியில்,

உணவு அமைச்சர் “வயிறும்”
ஏற்றுமதி அமைச்சர் “நா வாயும்”
பிரியாணி பற்றாக்குறை
ஐஸ்கிரீம் பஞ்சம்
பேல்பூரி தட்டுபாடு போன்ற பிரச்சினைகளை கிளப்பவே

நிலவுக்கு செல்லும் திட்டம்
மீண்டும் ஒத்திவைப்பு!

~ தேடன்