தேடன் கவிதைகள்மொட்டை மாடியில் மாலை காற்று வீசுகிறது
காற்றோடு ஒரு அழகு கலர் காற்றாடி ஆடுகிறது
அதில் கட்டிக்கொண்ட நீண்ட வெள்ளை நூல்
நூலோடு கைபிடித்த சிறுமி!

சிறிது நேரத்தில் பறப்பது பட்டம் மட்டுமல்ல
நூலும்
நூல் பிடித்த சிறுமியும்
அதை கண்டு,
பிடித்த நானும்!

தேடன்இனிது இனிது..

மானுடனாய் பிறத்தல் அரிது..!!
மானுடர்க்கு இனியது எது…??

காதல் நாம் மகிழும் வரை
இனிது..
காமம் நாம் மறுக்கும் வரை
இனிது..
கல்வி நாம் கற்கும் வரை
இனிது..
புலமை நாம் சிறக்கும் வரை
இனிது..
கடமை நம்மை உணர்த்தும் வரை
இனிது..
கயமை நம்மில் உணரா வரை
இனிது..
மொத்தத்தில்,
உணர்ச்சி என்ற சிறையில் வாழும்
மனிதம் நமக்கென இருக்கும் வரையில்
இனிது..!!

காலம் நம்மை கொள்ளா(ல்லா) வரை
இனிது..
கடலும் கரை தாண்டா வரை
இனிது..
மலையும் சரிந்து வீழா வரை
இனிது..
மேகங்கள் அளவாய் பொழியும் வரை
இனிது..
காகம் கரைவது கூட அமாவாசை முடியும் வரை
இனிது..
மொத்தத்தில்,
இயற்கை நம்மை பேணாது நாம் பேணும் வரையில்
இனிது..!!

ஏன்,
புனிதமே நாம் மீறாது வரையே
இனிது..
புனிதம் என்று நாம் வணங்கும்
கடவுளும் கூட நமை தீண்டா வரையே
இனிது..!!

இனிது இனிது..
மானுடனாய் பிறத்தல் அரிது..!!

 தேடன்