கவிதை: குடை.! – தேடன்நேற்று பெய்த மழையிற்கு
இன்று குடை பிடிக்கின்றன
என் தோட்டத்துப் பூஞ்சைகள்!

என்ன வொரு மடத்தனம்
என்று வேடிக்கை பார்த்திருக்கையில்
மேலிருந்து துளிர்த்து விழுந்தது
இலை தங்கிய ஒரு துளி மழை நீர்
குடை மீது!

 – தேடன்