கவிதை: நான் மட்டும் உன்னோடு..! ~ தேடன்இன்றுடன் வாழ்வோ
நாளை ஏன் தீர்வோ
எதற்க்குமே இங்கே
காலத்தின் வேடிக்கை புரியாது

வீட்டுக்குள் நின்று பார்க்கின்ற கண்கள்
தெருமுனை கூட கடக்காது

கனவினில் கண்கள் கறைந்திடும் தருணம்
மனக் காட்சியின் விரிப்பில் விளிம்பேது

கனவுகள் கோடி அடைகின்ற பொழுது
விடையில்லா கேள்விகள் மாறாது

மாறுதல் தேடி ஓடிடும் கால்கள்
தேய்ந்த பின் மாற்றத்தை உணராது

காற்றுடன் கூடி பழகிய பின்னர்
மரங்களில் இலைகளும் கூட தங்காது

மனிதனாய் வாழ பழகிய போது
மனதிற்குள் மடிகிற மரம் நூறு

யாருடன் நின்றும் யாரிருந்தாலும்
நான் மட்டும் விலகிட முடியாது
உன்னோடு!

~ தேடன்