தாகம்
ஒவ்வொரு மாதமும் ,
காமம் தலைக்கேற
அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்கிறாள்
தீயில் இறக்கி எரித்துவிடாமலிருக்க
கோலமிடுகையில்
தெருநாய்களின் ஊடுறவு
நெருப்பில் குளிர்காய்கின்றன
கல்லை விட்டெறிந்து
ஆண்டாளோடு
பாசுரம் பாடச் சென்று விடுகிறாள் வெடுக்கென
கல்லால் அடித்துக் கொன்றவர்களைத்
தெரிந்திருந்தது அவளுக்கு
நெருப்பின் கங்குகளில்
வறண்டு கொண்டிருந்தவளுக்குக்
கயிறு ஒன்றைக் கட்டி
ஓர் எல்லையில் மட்டும்
தாகத்தைத் தீர்த்துக்கொள்ள அனுமதித்தனர்
தாகம் தீர்த்துக் கொண்டாளோ இல்லையோ
அதற்குள் வயிறு நிரம்பிப் பெருத்து விட்டது.
–விக்னேஷ் குமார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.