சிறை வசம்
———————-
ஏன் சிறை சென்றான் எதற்காக ஐந்து ஆண்டுகளாக ஒரு விசாரணைக் கைதியாக மாறினான் என்பதின் கதை தான் சிறை.
ஒவ்வொரு மனிதனின் மனதிலும் கடந்த நினைவுகள் அல்லது பழைய நினைவுகள் அதாவது 80 மற்றும் 90 களின் ஏதாவதொரு நினைவுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அந்நினைவுகளையெல்லாம் நாம் திரும்ப கண்முன் பார்ப்பது போல் அமையும் காட்சிகள் அனைத்தும் நம் மனதை திருப்பி போட்டு அவ்விடத்திற்கே கொண்டு போய் சேர்த்து விடும்.அப்படிப்பட்ட நினைவலைகளாக பாக்கெட் ஜூஸ்,விரல்களில் சொருகி சாப்பிடும் அப்பளம்,கல்யாணம் காது குத்து மற்றும் மரணமென்றால் இரவு முழுவதும் போடப்படும் வீடியோ கேசட் அதில் வரும் காதல் காட்சிகளைக் கண்டு கண்களினாலே பேசிக் கொள்ளும் இளம் காதலர்களென்று படத்தின் காட்சிகள் ஒரு பகுதியாக வலம் வருகிறது.
விசாரணைக் கைதியாக இருக்கும் ஒரு இளைஞனை அதாவது அப்துல் ரவுப் என்றதொரு முஸ்லீம் சிறைக் கைதியை நீதிமன்ற விசாரணைக்காக கொண்டு செல்லும் பணிக்காக ஏட்டாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு செல்கிறார்.அவருடன் சேர்த்து இரண்டு காவலர்களும் நெடுந்தூர பயணமென்பதால் மது அருந்தி விட்டு பயணம் செய்கிறார்கள்.போலீஸ் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சாதாரண மக்கள் தான் சட்ட விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட வேண்டுமென்கிற சூழ்நிலையில் அங்குள்ள இரு காவலர்களில் ஒருவர் சாப்பாட்டுக்காக பேருந்து நின்ற போது அங்குள்ள ஒரு இளைஞனிடம் பொது வெளியில் சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் சண்டை போடுகிறார். அச்சமயம் தான் அக்கைதியை தவறவிடுகிறார்கள்.
என்ன செய்வதென்று தெரியாத அவர்கள் மற்றொரு பேருந்திலேறி அப்பேருந்தை வழி மறைத்து அவன் அதில் இல்லையென்றதும் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு செல்கிறார்கள்.அங்கு அவன் இருப்பதை பார்த்ததும்,அவனை ஒரு காவலர் அடிக்க அந்நிலையத்திலுள்ள காவலர் வந்து அங்க அவன தப்பிக்க விட்டுட்டு இங்க வந்து சரணடைஞ்சவனை அடிக்க கூடாதென்று சத்தம் போட்டு அவர் வைத்திருக்கும் துப்பாக்கி குண்டை கேட்டதும் அது லோடு செய்யப்பட்டது தெரிகிறது.ஏனென்று கேட்டதில் அவன் முஸ்லீம் ஐயா என்று சொன்னதும், அப்ப நான் யாரு? நானும் முஸ்லீம் தான் என்ன சுடுவியா என்று கேட்கும் வசனம், முஸ்லீம் என்றால் தேசத்துரோகியாக சித்தரிக்கப்பட்டுள்ளதை செவிட்டில் பலாரென்று அறைவதாக சுட்டியுள்ளது. பிறகு அவனை விசாரிக்கையில் அவன் தப்பித்து போக வேண்டுமென்ற எண்ணத்துடன் தான் ஓடினேன்.ஆனால் தப்பித்து விட்டால் ஒரு கைதியாகவும், அப்துல் ரவுப் என்ற பெயருடனும் எவ்வாறு வாழப் போகிறோம் என்ற எண்ணத்திலும் அதனுடன் தன்னால் அந்த காவலர்களுக்கும் கெட்ட பெயர் வந்துவிடும் என்றெண்ணி அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் கூறுகிறான்.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு போகும் போது மட்டும் தன் கைவிலங்கை அவிழ்க்கும் படி கூறுகையில் எதற்காகவென்று கேட்க, அப்துல் ரவுப் காதல் செய்ததையும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன் தாயை அடித்ததாகவும் அதற்கு பிறகுதான் தன் காதலியின் தந்தையை அடித்ததாகவும் அதும் அவர் இறந்தது விட்டார் என்பது கூட தெரியாமல் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்த பிறகுதான் தெரிய வர அதன் பிறகுதான் அப்துல் ரவுப் தானாகவே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறுகிறான். ஆனால் என்னைப் பார்க்க என் காதலி வருவாள். அவள் என் கையில் விலங்கு மாட்டியிருப்பதை பார்த்தால் வருத்தப்படுவாள் என்று கூற,பிடித்த பிடியாக இருக்கும் காவலர்கள் மத்தியில் கொஞ்சம் இதயம் தளர்ந்தவராக இரக்கம் கொண்டவராக இருக்கும் விக்ரம் பிரபுவின் மனம் அந்த இளைஞனின் கதையை கேட்டு கொஞ்சம் செவி மடுத்து நீதிபதியிடம் நடந்ததை சொல்லுமாறு கூறுகிறார். நீதிபதியிடம் நடந்ததை கூற நீதிபதியும் அதை கேட்டு அடுத்தமுறை நீ வரும் பொழுது அது உனக்கான விடுதலையாகத் தான் இருக்குமென்றதும் அந்த இளைஞன் விக்ரம் பிரபுவின் காலில் விழுந்து தன் நன்றியை தெரிவித்து அடுத்தமுறை வரும் பொழுதும் நீங்களே என்னுடன் வந்தால் எனக்கு பயமில்லாமலும் ஆறுதலாகவும் இருக்குமென்கிறான்.
ஆனால் அடுத்த முறை வரும் பொழுது நீதிமன்றத்தில் வேறொரு நீதிபதி மாற திரும்பவும் அது ஒரு வாயிதாவாகவே மாறுகையில் அந்த இளைஞன் வேதனையாகி கத்தி கூப்பாடு போடுகிறான்.அவனுக்கு விக்ரம் பிரபு உதவி செய்ததன் பொருட்டு விசாரணையின் பேரில் திரும்ப வர முடியாத சூழல் உருவாக, அச்சூழலிலும் அவர் அங்கு வந்து நடந்ததை கூறுகையில், நீதிபதியோ நீ யாருயா? இதெல்லாம் சொல்ல, என்று வாயிதா போட அதன்பிறகு விக்ரம் பிரபுவும் அவரது மனைவியும் தன் சொந்த முயற்சியில் விடுதலை வாங்கித் தந்ததோடு அடுத்து வரும் காவலர்களுக்கும் உங்களுக்கென்று ஒரு அதிகாரம் இருக்கும் அதை முடிந்த அளவு பயன்படுத்தி ஏழை எளியவர்களுக்கு கொஞ்சம் மனசாட்சியோடு செயல்படுங்கள் என்று பயிற்சியளிக்கிறார்.
இங்கு சாதியும் மதமும் தாண்டி காதலித்தால் அதை மறுப்பதும் ஆணவப்படுகொலை செய்வதும், முஸ்லீம் என்றாலே தீவிரவாதி தான் என்றொரு கட்டமைப்பும் உருவாகியிருக்கிறது. அதை உரித்து காட்டி சிறையை தகர்த்துக் கொண்டு வருகிறது இக்கதைக்களம்.
சிறையானது கொஞ்சம் “மனச்சிறையையும்” திறந்து பார்க்கிறது.
📚 எழுதியவர்:
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

