வளர்ந்த இந்தியாவின் கல்விக்கான ஆணைக்குழுவின் சட்ட முன்வடிவு (Viksit Bharat Shiksha Adhisthan Bill) மாற்று வழிகளை தேடி - தினேஷ் அப்ரால் | தமிழில்: மோசஸ் பிரபு | www.bookday.in

வளர்ந்த இந்தியாவின் கல்விக்கான ஆணைக்குழுவின் சட்ட முன்வடிவு (Viksit Bharat Shiksha Adhisthan Bill) மாற்று வழிகளை தேடி – தினேஷ் அப்ரால் | தமிழில்: மோசஸ் பிரபு

வளர்ந்த இந்தியாவின் கல்விக்கான ஆணைக்குழுவின் சட்ட முன்வடிவு (Viksit Bharat Shiksha Adhisthan Bill) மாற்று வழிகளை தேடி

– தினேஷ் அப்ரால் | தமிழில்: மோசஸ் பிரபு

அறிமுகம்:

விக்சித் பாரத் சிக்ஷா ஆதிஸ்தான் (VBSA) என்ற சட்ட முன்வடிவு, 2047-ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு, உயர்கல்வித் துறையை ஒருங்கிணைத்து, தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு கொண்டுவரும் ஒரு புதிய சட்ட முன்வரைவாகும். ஆனால் இந்த சட்ட முன்வரைவறிக்கையை வாசிக்கும் போது இந்தியாவின் உயர்கல்வி அமைப்பில் உள்ள மாநில உரிமைகளை பறித்து ஒன்றிய அரசே முழுக்க முழுக்க கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்துதலை (CENTRAILASATION) நோக்கியும், தீவிர வணிகமயமாக்கல் (COMMERCIALISATION) மற்றும் தனியார்மயமாக்கல் (PRIVATISATION) கொள்கைகளுக்கு சட்டப்பூர்வமான ஆதரவையும் வழங்கும் வகையில் உள்ளது.  திட்டமிட்டப்படி இச்சட்டம் அமுலாகினால் தற்போது இருப்பதைவிட தீவிரமான தனியார்மயமாக்கலை நோக்கி நம் உயர்கல்வி அமைப்பு மாறும். எனவே இதற்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு இச்சட்ட முன்வடிவத்தை எதிர்க்க வேண்டும் என அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சட்ட முன்வடிவம் சமூகநீதி மற்றும் சுயசார்புக்கான தேசிய அளவில் ஒரு புதிய செயல்முறைகளை முன்வைப்பதற்கு பதிலாக  தீவிர உலகமயமாக்கல் கொள்கையை ஆதரிக்கிறது, உயர் கல்வி நிறுவனங்கள் (HIGHER EDUCATION INSTITUTIONS-HEIs) குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசின் அதிகார அமைப்பு மட்டுமே தீர்மானிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஒன்றிய அரசின்  கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு ஏற்ற வகையில் மையப்படுத்தப்பட்ட  ஒழுங்குமுறை (CENTRALISED WAY OF REGULATIONS), உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை தீர்மானித்தல் (DETERMINATION OF STANDARD) மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான செயல்முறை (ACCREDITATION PROCESS) ஆகிய நடைமுறைகள்  இனி ஒருதலைப்பட்சமாக இருக்கும். பொது நன்மைக்காக பொது நிதியுதவியோடு செயல்படும் நிறுவனமாக உள்ள உயர்கல்வியை பாதுகாக்க வேண்டும் என்ற கடமையிலிருந்து விலகி, உயர்கல்வியை வாங்குவதற்கும் விற்கப்படுவதற்கும்  ஏற்ற வகையில் ஒரு பண்டமாக மாற்ற ஒன்றிய அரசு விரும்புவதால் தான் இந்த VBSA சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கூட்டு நாடாளுமன்றக் குழுவில் (JOINT PARLIMENTARY COMMITEE) இந்த சட்ட முன்வடிவம் பரிசீலனையில் உள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது ஒப்புதலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட முன்வடிவுக்கு மாற்றாக

உயர்கல்விக்கான வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஏற்றவாறு மாற்று வழிமுறைகளை அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பாக சில பரிந்துரைகளை இங்கே முன்வைக்கிறோம்.

மாநில அரசுக்கும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்:

இந்திய அரசியலமைப்புச் சட்ட ரீதியாகப் கல்வி என்பது ஒன்றிய-மாநில அரசுகள் இருவருக்கும் உரிமையுள்ள ஒரு பொதுவான பட்டியலில் தான் (CONCURRENT LIST) இன்றுவரை உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் சம அளவில் இருக்க வேண்டும். இந்த  ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் விதமாக சட்டமியற்றப்பட வேண்டும். தற்போதைய VBSA சட்ட முன்வடிவில் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைகளை   பொருட்படுத்தவில்லை. எனவே இது மேலிருந்து கீழே திணிக்கும் விதமாக இருக்கிறது  அவ்வாறு இருக்க கூடாது என வலியுறுத்துகிறோம்.

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கையும் உறுப்படுத்துவது மாநில அரசுகளே…

தற்போதுவரை  மாநிலங்கள்தான் தங்கள் மாநில உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு அதிக அளவிலான மானியங்களை உயர்கல்விக்கான வளர்ச்சிக்கு வழங்க வேண்டும், ஆனால், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அமைப்பு (ANRF), உருவாக்கப்பட்ட பிறகு ஒன்றிய அரசு சார்பாக மானியங்கள் எதுவும் வழங்கப்படவிலை. இது அனைத்தையும் மையப்படுத்துகிற முறையை (HUB AND SPOKE MODEL) மட்டுமே பின்பற்றுகிறது, ஏற்கனவே வசதியாக உள்ள குழுவினருக்கே அதிக லாபம் கிடைக்கும். அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பின் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். சமத்துவம் மற்றும் சமூக நீதி உரிமைகளை வழங்காத தனியார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இதை பொருட்படுத்தாது. எனவே மானியங்களை ஒன்றிய அரசு முறையாக வழங்க வேண்டும் என்ற  உறுதியான கொள்கையை செயல்படுத்த வேண்டும் மாற்று சட்ட முன்வடிவில் இது வலியுறுத்தப்படும். மாற்று சட்ட வடிவம் பொது நோக்கத்தை நிறைவேற்றுதற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், தரத்தை உறுதி செய்வதற்கும், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் உயர்கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதற்கும் தற்போது நிலவும் பாகுபாட்டு இடைவெளியைக் குறைக்கவும் வெளிப்படையாக பயன்படும் வகையில் இருக்கும்.

அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை: 

உயர்கல்வி அமைப்பில்  ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை உணர்ந்து, உயர்கல்வியை நிர்வகிப்பதற்கான ஓரு மாற்று உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும், அது மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்  அமைக்கப்பட வேண்டும். கல்வி அமைச்சரின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் நிதியை விநியோகிப்பதற்கு ஒரு  உயர் கல்வி மானியக் குழு (HIGHER EDUCATION GRANT COUNCIL-HEGC’S) அமைக்கப்பட வேண்டும். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு வழக்கமான நிதியை வழங்குவது மட்டுமல்லாமல், உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், உட்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதன் போதாமைகளை மேம்படுத்துவதற்கு சிறப்பு நிதியை வழங்குவதற்கான பொறுப்பு உயர் கல்வி மானியக் குழுவுக்கு (HEGC) வழங்கப்பட வேண்டும்.

ஜனநாயகமயமாக்கல் 

உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரிவுகள் அனைத்தும் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும், மேலும் நாம் முன்வைக்கும் மாற்று சட்ட முன்வடிவு இதை முறைப்படி அரசியலமைப்புச் சட்ட வழியை பயன்படுத்தி அமல்படுத்தப்படும். நாம் முன்வைக்கும் மாற்று உயர்கல்வி நிறுவனத்தில் மாநில உயர்கல்வி  (STATE HIGHER EDUCATION COUNCIL) ஆணையம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கும், ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நோக்கங்களை முன்னெடுப்பதற்கும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுப்பதற்கு இந்த ஆணையம் வழிவகை செய்ய வேண்டும். மாநில உயர்கல்வி ஆலோசனைக்குழு அனைத்து ஆணையங்களிலும் தங்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கான உறுதியான இடத்தை பெறுவதற்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும். VBSAக்கு மாற்றாக நாம் முன்வைப்பது உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் அல்லாத ஊழியர்களின் சங்கங்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும்.

மாநில உயர்கல்வி ஆலோசனைக் குழுவிற்கான பணிகள்: (SHEC’S)

மாநில உயர்கல்விக்கான ஆலோசனைக்குழு (STATE HIGHER EDUCATION COUNCIL-SHEC’S) மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு(HEI’S) எந்த உரிமையும் இல்லாத வகையில் மூன்று சிறப்பு ஆலோசனைகளை VBSA மசோதா முன்மொழிகிறது. இது போன்ற பரிந்துரைகள் திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அடிப்படையில் அது திட்டமிட்டதாகவும், செயல்முறை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், வெறுமனே இறுதி முடிவுகளை மட்டும் கணக்கில்கொள்ளாமல் இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் தாக்கத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனத்தின் பங்களிப்பை மேம்படுத்த பல்கலைக்கழகம் ஒரு சிறந்த வழிமுறையாக விளங்குகிறது.

மாநில அரசு தரப்பிலிருந்து, உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் போது,  மாநில அரசுகள் மாநில உயர்கல்விக்கான ஆலோசனைக்குழுவை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல்கலைக்கழக அளவில் செயல்படும் முடிவெடுக்கும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உத்திரவாதப்படுத்துவதற்கு உயர்கல்வி நிறுவன வளாகங்களை ஜனநாயகப்படுத்த சட்டமியற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் அத்தகைய தொலைநோக்கு பார்வை எதுவும் தெரியவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள மூன்று முக்கிய ஆலோசனைக்குழுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • விக்சித் பாரத் சிக்ஷா வினியமான் பரிஷத் (VBSVP): இது உயர் கல்வி நிறுவனத்திற்கான அங்கீகாரம், நிர்வாக மேற்பார்வை, நிதி கையாளுதல், பட்டம் வழங்கும் அதிகாரம் மற்றும் நாடு தாண்டிய கல்வியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றிற்கு பயன்படும் ஒழுங்குமுறை ஆலோசனைக் குழுவாகும்
  • விக்சித் பாரத் சிக்ஷா குன்வட்டா பரிஷத் (VBSGP): கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டு முடிவுகள் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குதல், அவற்றை மேற்பார்வையிடுதல், தகவல்களை பொது தளத்தில் வெளியிடுதல் மற்றும் அமலாக்க வழிமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அங்கீகார ஆலோசனைக் குழுவாகும்.
  • மற்றும்  விக்சித் பாரத் சிக்ஷா மானக் பரிஷத் (VBSMP): கற்றல் விளைவுகள், தகுதி மற்றும்  மற்றும் குறைந்தபட்ச கல்வித் தரங்களை வரையறுக்க அமைக்கப்பட்ட ஒரு தரநிலை ஆலோசனைக்குழுவாகும்.

ஒழுங்குபடுத்தும் ஆலோசனைக்குழு: 

(வினியமான் பரிஷத்) இது VBSAவின் நிர்வாகம் மற்றும் நிறுவனங்களின் விதிமுறைகளை செயல்படுத்தும் குழுவாக கருதப்படுகிறது. நாம் முன்வைக்கும் மாற்று சட்ட முன்வடிவில் இதற்கு முழு அதிகாரம் வழங்கப்படாது மற்றும் முறையான அங்கீகாரமும் அனுமதியும் ஒன்றிய அரசு நிர்வாகத்திற்கு மட்டுமே வழங்குவது சரியான நடைமுறையல்ல. ஒழுங்குமுறை மீறல்களுக்கு தரப்படுத்தப்பட்ட நிதி அபராதங்களை விதிக்க VBSA அதிகாரம் அளிக்கிறது. ஆனால் இது ஒரு கூட்டு செயல்பாடாக கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைந்துள்ள மாநில அரசின் அனுமதியின்றி எந்த நிறுவனமும் மூடப்படக்கூடாது.

அங்கீகாரத்திற்கான ஆலோசனைக்குழு:

VBSAவில் உள்ள அங்கீகாரத்திற்கான ஆலோசனைக்குழு (குன்வட்டா பரிஷத்) தொழில்நுட்பம் சார்ந்த தர மதிப்பீட்டை வழங்குகிறது, எனவே நேரடியான ஆய்வுகளில் கவனம் செலுத்தாது. கல்வி விளைவுகள், கற்றல் நிலைகள், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி திறன், ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு மதிப்பீட்டை வழங்குகிறது, இது நாம் எதிர்பார்க்கும் விரும்பத்தக்க சமூக விளைவுகளை ஏற்படுத்தாமல் போகலாம். அங்கீகாரத்திற்கான இந்த ஆலோசனைக்குழு அங்கீகார கொடுப்பதற்கான பணியை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்ய வாய்புள்ளது.  இதனால் பரிந்துரைகள் மற்றும் விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனை செயல்முறைகள் (deliberative process) செயல்படாமல் போகலாம், உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்பு மற்றும் கல்வி நோக்கங்கள் புறக்கணிக்கப்படலாம். எனவே இதில் மாற்றம் அவசியம்.

தர நிர்ணய ஆலோசனைக்குழு:

அனைத்து வகையான உயர்கல்விக்கான தரநிலைகள் மற்றும் பட்டதாரிகளுக்கான திறன்களை டெல்லியில் உள்ள ஒரு நிறுவனம் ஒரே மாதிரியாக வரையறுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உயர்கல்வியில் பட்டங்கள், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, இந்திய அறிவு அமைப்புமுறை மற்றும் மாணவர் இடமாற்றம் என பலப்பணிகள் உள்ளது. பொருத்தமான மற்றும் அர்த்தமுள்ள சிறப்பின் அடிப்படையில் புதுமையான மாற்றங்களை அடைய துறை வாரியாகவும், மாநில சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். தரநிலைகளின் சர்வதேசமயமாக்கல் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டம் மற்றும் பட்டங்களை நிறுவுவதற்காக தேசிய மற்றும் சமூக ரீதியாக அந்நிய மாதிரிகளைத் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மாறியுள்ளோம். தேசத்தைக் கட்டியெழுப்பும் என்ற நிலையிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் நிலைக்கு இது மாற்றியுள்ளது.

மாற்று சட்ட முன்வடிவம், மாநில உயர்கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் 

மாற்று சட்ட முன்வடிவு மாநில உயர்கல்வி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறைக்கு 50% அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க முழு அதிகாரம் வழங்காது. எந்த செயல்முறையும் ஒன்றிய அரசும் மாநில அரசும் கூட்டுபொறுப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை தீர்மானித்தல், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை கண்கானிக்கும் பொறுப்பை மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், உள்ளூர் வளங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிக்கான முன்னுரிமைகளை மாநில அரசுகள் கவனித்துக் கொள்ள வேண்டும். தரநிலைகளை நிர்ணயிப்பதிலும்,, அங்கீகாரத்திற்கான பங்களிப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகளை செயலூக்கமான முறையில் செயல்படுத்துவதிலும் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் பணிகளை மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். மாநில வாரியாக முன்னுரிமைகள் வேறுபட்டதாக இருக்கும், அமுலாக்க  வேண்டிய பரிந்துரைகளும் வேறுபட்டதாக இருக்கும். எனவே தர நிர்ணயம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்ற நடைமுறைக்கு மாற்றாக 50% முக்கியத்துவம் மாநில உயர்கல்வி நிறுவங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவம், மொழியியல் மற்றும் பண்பாட்டு சுயசார்பு, சமூக நீதி, தேசிய அளவிலான கண்டுபிடிப்புகள், அடிப்படை அறிவியல், புதிய தொழில்நுட்பங்கள், மற்றும் சுகாதாரம் போன்ற பிற பொறுப்புகளுக்கான இலக்குகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தொழில்துறை, வெளியுறவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பல. மாற்று சட்டமுன் வடிவில் ஒன்றிய அரசின் ஆலோசனைக்குழு ஆகிய மூன்று பிரிவுகள் ஒன்றிய அரசின் ஆயுதங்களாக உள்ளன. மாற்று சட்டமுன்வடிவு கூட்டாட்சி அணுகுமுறையை வழங்க வேண்டும் மற்றும் அறிக்கையிடல் செயல்பாடு பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான நிறுவன கட்டமைப்புக்கு ஒவ்வொரு பிரிவிலும் நிதி அமைப்புமுறை இணைக்கப்பட வேண்டும், அதற்கான ஒப்புதல் பாராளுமன்றத்திலிருந்து பெறப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களிடையே செயல்படுத்தும் நிதி வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பைப் ஒன்றிய மற்றும் மாநில உயர்கல்வி நிறுவனங்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரிடையாக அறிக்கை அளிக்கக்கூடாது, மாறாக ஒரு கூட்டாட்சி தன்மையுடன் உருவாக்கப்ப்டும் அமைப்புக்கு முறையாக பதில் அளித்தால் போதுமானது.

மாநில அளவிலான ஆலோசனைக்குழுக்கள்: 

மாற்று சட்ட முன்வடிவு முன்வைப்பது, ஒன்றிய அளவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள் தங்களது செயல்பாட்டை திட்டமிட மாநில அளவிலான அமைப்புகளை உருவாக்கி கூட்டு ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். அனைத்து மாநில அரசுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு தனி உயர்கல்வி மானியக் குழுவும் (HEGC) அமைக்கப்பட வேண்டும். சிறப்புத் தேவைகளுக்காக தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட வேண்டும். கடன்களை நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும் மற்றும் சிறப்புத் தேவைகள் மானியங்கள் மூலமாக தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மூன்று தனித்தனி ஆலோசனைக்குழுக்கள் மூலமாக முன்மொழியப்பட்ட  தரநிலைகள், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை கூட்டாக செயல்படுத்துவதற்கான நடைமுறை உத்தியோடு மாற்று சட்டமுன்வடிவை செயல்படுத்த மாநில உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்போடு சட்டமாக்கப்பட வேண்டும். மூன்று அமைப்புகளுக்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு அவசியம் இருக்க வேண்டும் அவ்வாறு நடைபெறும் போது அதன் செயல்திறன் மேம்படும்.

முன்னோக்கி செல்லும் வழி: (Way Forward)

தற்போதைய வடிவில் உள்ள VBSA சட்ட முன்வடிவு நிராகரிக்கப்பட வேண்டும்; அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. உயர்கல்வி குறித்து எடுக்கப்படும் முடிவுகளில் மாநிலங்கள் சம உரிமையுள்ளவர்களாக கருதப்பட வேண்டும். மாற்று சட்ட வடிவமைப்பால் அவ்வாறு மாற்றப்பட வேண்டும். உயர்கல்வி நிர்வாகத்தில் மாநில உயர்கல்வி ஆணையங்கள் (SHECs) முழுமையான உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து ஆலோசனை மட்டும் கூறும் அமைப்புகளாக இருக்க கூடாது. மாநில உயர்கல்வி அமைப்பிற்கு (SHECs) முழுமையான உறுப்பினருக்கான உரிமையை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். ஒத்துழைப்பு, கூட்டு திட்டமிடல் மற்றும் ஜனநாயக அடிப்படையில் தீர்மானங்களை நிறுவ வேண்டும். உயர்கல்வியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இது அரசியலமைப்புக்கு உட்பட்ட செயலாக இருக்க வேண்டும்.

இந்த கூட்டுப் பொறுப்பை செயல்படுத்த, மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி நிதியுதவிக்கான ஆலோசனைக்குழு (HEGC) மூலம் தேவையான நிதி வழங்கப்பட வேண்டும். HEGC-க்கு கல்வி அமைச்சகத்தின் மத்தியத் துறைத் திட்டங்களும் (Central Sector Schemes), மத்திய ஆதரவு திட்டங்களும் (Centrally Sponsored Schemes) சார்ந்த நிதிகளைப் பெறவும், அதை வெளிப்படையான முறையில் பகிரவும் சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

மேலும், இந்த கூட்டுப் பொறுப்பை செயல்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் அனைத்து கல்விக்கான வரி சார்ந்த வருவாய்களும் HEGC-யின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மாற்றுச் சட்ட முன்வடிவு, இந்த நிதிகளை HEGC சட்டரீதியாகப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இது மாநிலங்களின் உரிமையையும், அரசியலமைப்புச் சார்ந்த குடிமக்களின் உயர்கல்வி உரிமையையும் அங்கீகரிக்கிறது. உயர்கல்வித் துறையின் பொதுப் பயன்பாடு (public purpose) சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஒதுக்கப்படும் நிதி, முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வமைப்புகள் அனைத்தும் கூட்டு நாடாளுமன்றக் குழு (Joint Parliamentary Committee – JPC) பரிசீலனைக்காக முன்வைக்கப்பட வேண்டும். முடிவில், HEGC மத்திய மற்றும் மாநில உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் ஒருங்கிணைப்புக்கான அமைப்பாக செயல்பட வேண்டும்; நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சிகளை இதன்முலம் முன்னெடுக்க முடியும்.

📚 எழுதியவர்:

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *