என்னைக் கவர்ந்த “விண்வெளி மனிதர்கள்” ~ ம.கா. சச்சின் சூர்யாநூல்: விண்வெளி மனிதர்கள் 
ஆசிரியர்: விஞ்ஞானிகள் பெ. சசிகுமார் மற்றும் பா. அரவிந்த் 
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 270
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vinveli-manitharkal/

நாம் அனைவரும் அறிந்திருப்போம், விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி காகரின், முதலில் சென்ற விண்கலம் ஸ்புட்னிக்-1 , விண்வெளியில் ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது . ஆனால் சிலருக்கு மட்டும்தான் தெரியும் அதில் உள்ள சில நுணுக்கமான விஷயங்கள். அந்த சிலரை பலர் ஆக்குவதாக இந்த “விண்வெளி மனிதர்கள்” புத்தகம் உள்ளது. நமது சிறுவயது காலங்களில் வியந்து போயிருப்போம். நாம் சிறு வயதில் மனிதர்கள் நிலாவுக்கு எப்படி சென்றிருப்பார்கள் என்று யோசித்து வியந்திருப்போம். இந்த புத்தகத்தில் அதற்கான பதில்கள் இருக்கின்றன. இந்த புத்தகத்தில் நிறைய ஆச்சரியமூட்டும், சிரிப்பூட்டும் வியக்க வைக்கும் தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.

ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளி ஓடங்களுடைய தயாரிப்பின் போதும், சோதனையின் போதும் தோல்விகளை படிக்கும் போது கவலையாக இருக்கும். அதேசமயம் வெற்றிகளை படிக்கும் போது மகிழ்ச்சியில் இதயம் குதிக்கும். இதில் விண்வெளி மனிதர்கள் தாண்டும் சோதனைகள் தரப்படும் பயிற்சிகள், அனுபவிக்கும் கஷ்டங்கள் ஆகியவற்றை படிக்கலாம். இதில் விண்வெளிக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்புடைய பற்றிய முழு வரலாற்றை தெரிந்து கொண்டேன். நான் இதுவரை ஒரு Nonfiction புத்தகத்தை இவ்வளவு ரசித்து படித்தது இல்லை. அவ்வளவு சுவாரஸ்யமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

விண்கலங்களால் மனிதர்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதை ஒவ்வொரு துறைவாரியாக கூறுகிறார். இது மேலும் புத்தகத்தை படிக்கத் தூண்டியது. Parabolic flight என்கிற முறை மூலம் O gravity அல்லது Micro gravity என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். இந்த புத்தகத்தில் Parabolic flight என்கிற வழிமுறை அல்லாமல் வேறு எந்த வகையில் O gravity அல்லது Micro gravity அடைய முடியும் என்று கூறுகிறது.அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டியிட்டு விண்வெளிக்கு முதலில் விண்கலம் அனுப்ப போவது யார் என்று சண்டை நடந்தது. அடுத்து நடந்தது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா அந்த போட்டியில் ஜெயித்தது. இதன் அடுத்த பனிப் போர் ஆரம்பமாயிற்று. அதன் பிறகு தான் பனிப்போர் சமயத்தில் அப்பலோ 11 நீல் ஆம்ஸ்ட்ராங் ‌மற்றும் குழுவை சுமந்து சென்று நிலவில் இறக்கிவிட்டது. அதன் பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் அப்பலோ விண்கலத்தையும் சோயூஸ் விண்கலத்தையும் இணைத்து நாங்கள் சமாதானம் அடைந்து விட்டோம் என்று உலகுக்கு பறை சாற்றியது.

விபத்துகளை சில நிகழ்வுகள் மனதுக்கு சோகம் அளிக்கும். கண்களில் நீர் தேக்க வைக்கும். அந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கும் நிகழ்வுகளை படிக்கும் போது நிம்மதியாக ஆறுதலாக இருக்கும்.

அவர்கள் அணியும் உடை சில சமயங்களில் போட்டிருப்பவரை விட கனமாக இருக்கும். இந்த புத்தகத்தில் கதிரியக்கம் காரணமாக வரும் பிரச்சினைகள் நோய்கள் அவற்றைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விண்வெளியில் கிடைக்கும் உணவு பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் அதைப் பற்றி மேலும் தெளிவான விளக்கத்தை படித்தறிந்து தெறிந்து கொண்டேன். விண்வெளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படும் இதில் நன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நான் ஒரு விபத்து பற்றி கூற விரும்புகிறேன். பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற மனிதர் யூரி காகரின் உடைய நண்பர் இறந்து விட்டார். இதனால் விண்வெளிக்கு செல்ல அவர் மறுத்தார். இவரை சமாதானப் படுத்துவதற்காக நீங்கள் இப்போது விண்வெளிக்கு சென்றால் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதராக வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் என்று கூறினர். அதன் பிறகே காகரின் சம்மதித்தார். உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு மிகச் சிறந்த விண்வெளி பற்றிய புத்தகம் படித்தது நிறைவாக இருக்கிறது.

ம.கா. சச்சின் சூர்யா
ஏழாம் வகுப்பு ஏ பிரிவு
பாரதி வித்யா பவன், ஈரோடு
••••••••••••••••••••••••••••

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)