19 வயதான தலித் பெண் மீது சமீபத்தில் நடந்த மிருகத்தனமான பாலின தாக்குதல் மற்றும் சாதி வன்முறை குறித்த இந்தியாவின் பயங்கரமான தட பதிவை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
செப்டம்பர் 14 ஆம் தேதி, வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் (முன்னர் “தீண்டத்தகாத”) பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு நான்கு உயர் சாதி ஆண்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் கடுமையாகத் தாக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்டும் கைகால்கள் எலும்பு முறிந்தும், முதுகெலும்பு சேதமடைந்தது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு பின் பதினைந்து நாட்களுக்குப் பிறகு புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் பலியானார்.
கற்பழிப்பாளர்களின் மிருகத்தனமான இச்செயல் கண்டனத்திற்குரியது. ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறையினரே உரியச் செயல்முறையைப் பின்பற்றாமல் மாறாகத் தயங்குகிறார்கள்.இது காவல்துறையின் மிக மோசமான தோல்வி வெளிப்படையாகத் தெரிகிறது. அந்தப் பெண் பொய் சொன்னதாக போலிசார் குற்றம் சாட்டினர், கற்பழிப்பு புகாரைப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர், பாதிக்கப்பட்டவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவரின் உடலில் விந்து காணப்படாததால் எந்த கற்பழிப்பும் நடக்கவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினர். பின், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், பாதிக்கப்பட்டவரின் உடல் இரவோடு இரவாக போலீசாரால் விரைவாகத் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலைப் பார்க்கவோ அல்லது தகனத்திற்கு வரவோ கூட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியாவில் பரவலாக உள்ளது. சமீபத்தில் தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2019ல் ஒவ்வொரு நாளும் 88 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, உத்தரப்பிரதேசத்தில் 3,065 வழக்குகள் உள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் கூட எண்ணிக்கையில் குறைவே. பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களில் ஒரு பகுதியினர் மட்டுமே புகார் அளிக்கின்றனர். பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடைய சமூக களங்கம் ( social stigma) காரணமாக பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இப்படிப் பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படுவது அல்லது அவர்களைக் களங்கப்படுத்துதல் என்பது இயல்பானது அல்ல.
2012 ல் கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு தாய் பாலியல் தொழிலாளி என்று களங்கப்படுத்தப்பட்டார். டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நகரும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கற்பழிப்பாளர்கள் இரும்புக் கம்பியால் ஊடுருவி, அவளது குடல்களைச் சிதைத்தனர். அவள் அனுபவித்த கொடூரமான வன்முறை அவள் காதலனுடன் இரவில் ஏன் வெளியே வந்தாள் என்று மக்கள் கேட்பதைத் தடுக்கவில்லை. அவர் பாலியல் வன்கொடுமைக்கு அழைத்தாரா? என்ற கேள்வியே நாம் சிந்தனையின் வெளிப்பாடு.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் தலித்துகள். 2019ல் பதிவான மொத்த 32,033 கற்பழிப்பு வழக்குகளில் 11 சதவீத பாதிக்கப்பட்டவர்கள் தலித் பெண்களே. உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ள அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் தலித் என்று என்.சி.ஆர்.பி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியச் சமூகம் ஒரு ஆணாதிக்க சமூகம். இங்கு கலாச்சார போர்வைக்குள் ஆண்களுக்கு பாலியல் ஆக்கிரமிப்பு சமம் அளிக்கிறது. ஆண்களையும் சிறுவர்களையும் பெண்களைக் கொடுமைப்படுத்தவும் துன்புறுத்தவும் ஊக்குவிக்கிறது, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யவும், அவர்களை “அடக்க” மற்றும் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும். கற்பழிப்பு ஒரு வழி என்று புகட்டப்படுகிறது. அதிலும் தலித் பெண்கள் மீது இந்த கருத்து மேலும் வலுக்கூட்டுகிறது. ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் கூட ஒரு செய்தியை உரக்கச் சொல்ல இதை கையாள்கின்றனர். தலித் ஆண்கள் தங்கள் சமூகத்தின் பெண்களைப் பாதுகாப்பதற்கான சக்தியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஒரு உறவினரின் “குற்றத்திற்கான” தண்டனையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2015 இல், உத்தரப்பிரதேசத்தில் பாக்பாத்தில் உள்ள அனைத்து ஆண் சாதி கவுன்சில் 23 வயதான தலித் பெண்ணையும் அவரது 15 வயது சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டது. காரணம் அந்த பெண்ணின் சகோதரர் ஆதிக்கம் செலுத்தும் ஜாட் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டதால் கற்பழிப்பு கூட சமூக அனுமதியைப் பெறுகிறது.
டிசம்பர் 2012 டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. இது நாடு முழுவதும் பொதுமக்கள் சீற்றத்தையும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியதுடன், வலுவான சட்டங்களை இயற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியது.
2013 ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டம் (திருத்தம்) கற்பழிப்பு பற்றிய விரிவான வரையறையையும், மேலும் கடுமையான தண்டனையையும் வலியுறுத்துகிறது, இதில் பெரும்பாலான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீண்ட சிறைத்தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தால் மீண்டும் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று சட்டம் இயற்றப்பட்டது. இருந்தும்,இது இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்களைக் குறைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பதிவான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உன்மை.
தண்டனையின் அளவு கற்பழிப்புக்குத் தடையாக இல்லை என்பது தெளிவாகிறது. குற்றத்தைத் தடுக்கக்கூடியது நிச்சயம் தண்டனை ஆகாது. இதில் இந்தியாவின் பதிவு மோசமானது, குறிப்பாக பாலியல் பலாத்கார வழக்குகள் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தலித் பெண்கள்.
காவல்துறையினரும் அதிர்ச்சியூட்டும் தவறான கருத்துக்களைக் கொண்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்; 2012 ல் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள காவல்துறையினரின் ஒரு ஸ்டிங் ஆபரேஷன், பேட்டி கண்டவர்களில் பெரும்பாலோர் பெண்களே பாலியல் பலாத்காரத்திற்குக் காரணம் என்று உறுதியாக நம்புகின்றனர்.
காவல்துறையினரே புகார்களைப் பதிவு செய்யத் தயங்குகிறார்கள், குறிப்பாகத் தாக்குதல் நடத்துபவர் பணக்காரர், அரசியல் தொடர்புகள் இருந்தால் அல்லது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் எனில் கற்பழிப்பு வழக்குகளில் ஒரு பகுதியே நீதிமன்றத்தை அடைகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் நீதிமன்றங்கள் மூலம் நீதியைத் தொடரத் துணிந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளை அழிக்க முற்படுகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் உன்னாவோவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண், ஒரு வருடத்திற்குப் பிறகு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றபோது, அவரை கற்பழிப்பாளர்கள் உட்பட ஐந்து ஆண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்.
நீதிமன்றத்திற்குச் செல்லும் பெரும்பாலான வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். 2019 இல் கற்பழிப்பு வழக்குகளில் வெறும் 27 சதவீதம் மட்டுமே குற்றச்சாட்டுகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் விளைவாக, பல பெண்கள் அவமானத்தையும் பழிவாங்கும் வன்முறையையும் எதிர்கொள்வதை விட மௌனமாகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
ஹத்ராஸ் கற்பழிப்பு வழக்கு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் நீதிக்கான தேடலை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் சக்தியால் குற்றத்தின் அளவை குறைக்க காவல்துறையும் , ஆதிக்க அரசியல்வாதிகளும் துணை நிற்பது தெரிகிறது.
பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Prevention of Atrocities) சட்டத்தின் கீழ், ஒரு தலித்துக்கு எதிரான குற்றம் என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல – அது ஒரு கொடுமை. அதன் கீழ் தண்டனை பெற்றவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கச் சட்டம் வழிவகை செய்கிறது. ஹத்ராஸில் பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது POA சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள சாதி கூறுகள் குற்றம் சாட்டப்பட்டவர் தலித் என்பதால் அந்த பெண்ணை குறிவைக்கவில்லை என்பதை நிரூபிக்க முற்படும். அவர் தலித் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று அவர்கள் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் காலமான சில நாட்களுக்குப் பிறகு, உத்தரப்பிரதேச மாநிலச் சட்டசபையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், “இதுபோன்ற சம்பவங்கள் [கற்பழிப்பு போன்றவை] கலாச்சாரத்தின் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்” என்று கூறினார். “தங்கள் மகள்களை நல்ல பண்புகளைப் புகட்டிப் பண்பட்ட சூழலில் வளர்ப்பது அனைத்து தாய்மார்களின் மற்றும் தந்தையின் கடமையாகும்” என்று கூறினார்.
இந்த மனநிலையே இந்தியாவும் உலகமும் – உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் பாலியல் வன்முறையைப் பரவலாகப் பார்க்கப்படுகிறது.- பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடி அழிக்க வேண்டும். பாலியல் வன்முறைகளைத் தடுக்க பெண்கள் மீது சுமத்தப்படுவது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் அல்லது கலாச்சார ரீதியாகப் பொருத்தமான, ஆண் கட்டளையிட்ட விதத்தில் உடை அணிந்து செல்வது போன்ற விஷயங்கள் மூலம் பாலியல் வன்முறையைத் தடுக்க முடியாது. மாறாக, ஆக்கிரமிப்பு ஆண்மை அல்ல, ஆடம்பரமாக இருப்பது “குளிர்ச்சியானது” அல்ல என்பதைச் சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் (அதே போல் பெண்களுக்கும்) நாம் அவசியம் விதைக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவறான கருத்து மனப்பான்மையைக் கையாள்வதன் மூலமும், ஆணாதிக்க கலாச்சாரங்களை அகற்றுவதன் மூலமும் தான், சிங் போன்றவர்களின் பாலியல் வன்முறையின் கூற்றை எதிர் கொள்ளவும் தடுக்கவும் முடியும்.
குறிப்பு : அக்டோபர் 5, தி டிட்பளமேட் என்ற ஆன்லைன் இதழில் பத்திரிக்கையாளர் சுதா ராமச்சந்திரன் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.