விரிந்த சிறகுகள் (சிறுகதை தொகுப்பு) | Virintha Siragugal Short Stories

*சங்கத் தலைவரின் பணிகள் போற்றப்பட வேண்டும்*

கால்நடை ஆய்வாளராக, தொழிற்சங்கத் தலைவராக, சமூகப் பணியாளராக, மனித உரிமை செயல்பாட்டாளராக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்தோழர் பா. சண்முகவேலு எழுத்தாளராக பரிணமித்திருக்கும் நூல் தான் விரிந்த சிறகுகள்.

தனது வாழ்வில் சந்தித்த உண்மை சம்பவங்களை பின்கண்ட 9 தலைப்புகளில் புதிய யுகம், வளர்ப்பு மகன், மாற வேண்டிய மனிதர்கள், விவாகரத்து, காலச்சக்கரம், அக்கா, பாங்கொலி, திசை மாறிய பட்டம், இறுதி அஞ்சலி சிறுகதைகளை படைத்துள்ளார்.

ஒவ்வொரு சிறுகதையும் நமக்கு ஒரு பாடத்தை கற்பித்து தருகிறது என்பதை உண்மை.

அரசு ஊழியர், தொழிற்சங்க தலைவர் இரு பணிகளுக்கும் இடையே குடும்பம். மூன்று பணிகளையும் சிறப்பாக செய்ய இயலுமா என்பதே புதிய யுகம் சிறுகதை.

தொழிற்சங்க தலைவரின் இணையர் தனது பணிகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்.

தொழிற்சங்கத்தையும் பொதுப் பணிகள் செய்வதையும் இணையர் வெறுக்கிறார். தொழிற்சங்கப் பணிக்காக வெளி மாநிலம் செல்லும் போது தனது மகன் விபத்தில் காயம் அடைகிறார்.

அப்போது தொழிற்சங்கத்தில் உள்ள தோழர்கள் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வீடு திரும்பும் வரை தொழிற்சங்க தலைவரின் குடும்பத்தை முழுமையாக கவனித்துக் கொள்கிறார்கள்.

தனது கணவர் இல்லாத நிலையில் தொழிற்சங்கமும் தொழிற்சங்க தோழர்களும் தொழிற்சங்க தோழர்கள் குடும்பத்தினரும் உடனிருந்து செய்த உதவியை இணையர் புரிந்து கொள்கிறார். அதன் பின் தனது சமூகப் பணிகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார் இணையர்.

தொழிற்சங்க பணியில் ஈடுபட்டுள்ள தோழர்கள் சந்திக்கும் பிரச்சினையை மிக எதார்த்தமாக வாழ்வியல் ஓட்டத்தோடு கதைத்துள்ளார்.

அதுபோன்று இறுதி அஞ்சலி சிறுகதையும்.

ஓய்வூதிய சங்கத் தலைவர் ஓய்வூதியர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளில் பங்கெடுத்து உதவி செய்கிறது ஓய்வூதியர் சங்கம். அனைவரின் இறுதி அஞ்சலி நிகழ்விற்குச் சென்று தேவையான உதவிகளை செய்து அஞ்சலி செலுத்தி வரும் தலைவருக்கு அவரது மறைவிற்கு மற்ற தோழர்கள் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூழலை உணர்ச்சிபூர்வமாக சிறுகதை ஆக்கி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளார் நூலாசிரியர்.

தனது அக்காவிற்கு தம்பியாக இருந்து எல்லா காலங்களிலும் உதவி வருகிறார் ஆனால் அவரது மறைவுக்கு கூட செல்ல முடியாது மாட்டிக் கொள்ளுகிறார்.

அந்த சூழலில் தம்பியின் பாசப் போராட்டத்தை கதையாகப் படிக்கும் போது நெஞ்சத்தை உலுக்குகிறது.

காதல் சாதி மதம் பார்த்து வருவதில்லை அதுபோன்றே மாற வேண்டிய மனிதர்கள் கதையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவரை காதலிக்கலாம் தன் காதலை ஏற்றுக் கொள்ளும் காதலர் தனது குடும்பத்தினரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

இந்த சூழலில் காதலி காதலனை தூக்கி எறிந்து விட்டு வருகிறார்.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் சாதாரணமாகி கொண்டிருக்கும் சூழலில் ஜாதி வெறி இன்னும் குறையவில்லை என்பதை மிக அருமையாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

பெருநகரங்களில் நிர்வாகப் பகுதிகளில் வீடு கட்டி வசிக்கும் மக்கள் படும் வேதனைகளை தோலுரித்துக் காட்டுகிறது பாங்கொலி சிறுகதை.

அதை மட்டும் சொல்லவில்லை இக்கதை இரு மதத்தினர் ஒற்றுமையையும் வலியுறுத்தியுள்ளது இந்த சிறுகதை.

புறநகர் பகுதியில் வசிக்கும் இந்து சமூக குடும்பத்தினர் மழை வெள்ளத்தில்பாதித்து மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அருகில் உள்ள முஸ்லிம் சமூக மக்கள் இவர்களை காப்பாற்றி அங்குள்ள மசூதியில் தங்க வைத்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.

சில நாட்கள் கழித்து தான் அரசு உதை விட வருகிறது. அதுவரை அவர்களை காப்பாற்றியது மனிதநேயம்.

அனைவரும் விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள்.

இன்றைக்கு ஒரு கூட்டம் மதவெறியூட்டி குளிர்காய நினைக்கிறது .

அதையும் மீறி மனிதர்கள் வாழ்வது இயல்பானது என்பதை விவரிக்கிறது இந்த சிறுகதை.

இதுபோன்றே மற்ற கதைகளும் நம்மை உலுக்குகிறது.

பல்வேறு தளங்களில் பணிபுரிந்து பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து வரும் தோழர் பா. சண்முகவேலுவின் விரிந்த சிறகுகள் நூலினை பரந்த அளவில் கொண்டு செல்ல வேண்டும்.

சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

 

நூலின் தகவல்கள் 

புத்தகம் : “விரிந்த சிறகுகள்” (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : பா. சண்முக வேலு

வெளியீடு : மதுரை வாசகர் வட்டம்

தொடர்பு எண்: 99523 15757

விலை : ரூ.120/-

 

நூலறிமுகம் எழுதியவர் 

MJ. பிரபாகர்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *