விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “இடம்” சிறார் நாவல்
100க்கும் அதிகமான முறை பள்ளிகளுக்குச் சென்று கதை சொல்லவும்,கதை எழுதவும் பயிற்சி அளித்துள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் குழந்தைகளின் மரங்களைப் படித்து அவர்களின் பிரச்சனைகளை தன்னுடைய நாவல் மூலம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இது சிறார்களுக்கான மிகச் சிறந்த நாவல்.
இடம் என்ற தலைப்பு இந்த நாவலுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
ஏனென்றால் தமிழில் ஒரு சொல் பல பொருள் தரக்கூடியதாக இருப்பதைப்போல இந்த நாவலிலும் இடம் என்ற சொல் பலவகைகளில் குழந்தைகளிடம் உரையாடும் வகையில் உள்ளது.
இந்த உலகம் யாருக்கானது?
யாருக்கானதாக வடிவமைக்கப்பட்டதாக உள்ளது?போன்ற பல கேள்விகளை மனதில் எழுப்பும் நாவலாக உள்ளது.
பொதுவாக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் நாவல் அடுத்து என்ன நடக்கப் போகின்ற ஒரு எதிர்பார்ப்பு,சோகம்,குழு செயல்பாடு ஒரு ஆர்வத்தைத் தூண்டும் விறுவிறுப்பான தானகவே இருக்கும்.
அதைப்போலவே இந்த நாவலிலும் விறுவிறுப்பிற்கு குறைவில்லை.
இடம் என்ற சொல்
இந்த நாவலில் யாரும் பெருமளவில் பேசாத பொருளைப் பேசுகிறது.
ஆசிரியர்களுக்குள் நடக்கும் சில முரண்களையும் சுட்டிக் காட்டினாலும் முடிவு என்னாகுமோ என்று இறுதி வரை ஒரு எதிர்பார்ப்புடனே வாசிக்க முடிந்தது.
நாவலில் வரும் ஆதவனுக்கு நடக்கும் நிகழ்வு பள்ளிப் படிப்புக் காலங்களில் கடந்து வந்த சில சோகமான நிகழ்வை நினைவு படுத்தியது.
பலரும் ஆதவனின் சூழலைப் போல வேறு வேறு பிரச்சனைகளில் கடந்து வந்திருக்கலாம்.
இந்த நாவலில் வரும் ஆதவனின் அக்கா சுடர், ஆதவனின் பெற்றோர்,நண்பர்கள் புகழேந்தி மற்றும் அஷ்வின், தமிழாசிரியர் ரகுபதி,கலை ஆசிரியர் அறிவழகன் என அனைவரும் ஆதவனுக்கு ஆதரவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
நாவலினூடே ஆதவனின் நண்பர்கள் அவ்வப்போது புதிர்கள் கேட்பது போல் அமைத்தது இன்னும் சுவையைக் கூட்டியது.
குழந்தைகளின் மனநிலையும் பெரியவர்களின் மனப்போக்கும் எவ்வாறு உள்ளது,தற்காலச் சூழலில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற கண்திறப்பை கண்டிப்பாக இந்நாவல் கொண்டு வரும்.
அட்டைப்பட வடிவமைப்பு,ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளைக் கவரும் வகையில் மிகச் சிறப்பாக உள்ளது.
ஓவியம் மற்றும் அட்டை படம் வடிவமைத்தவர்களைப் பற்றியும் இந்நூலின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது.
புரிதல் இல்லாமல் குழந்தைகளை ஒதுக்கும்,அடக்கி வைக்கும் சமூகத்திற்கான நாவலுமாக உள்ளது.
குழந்தைகளிடையே உள்ள குழு உணர்வையும்,உதவும் மனப்பான்மையையும் இந்நாவல் மிகச் சிறப்பாக சொல்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க மிகச் சிறந்த சிறார் நாவல்.
இந்நாவலை மிகச் சிறப்பாக வடிவமைத்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும்,அட்டைப் படத்தை வெகு சிறப்பாக வடிவமைத்த மணிவண்ணன் அவர்களுக்கும், ஓவியங்கள் வரைந்த ஓவியர் மகேஸ் அவர்களுக்கும், சால்ட்
பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துகளும் பேரன்பும்!!!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “இடம்” சிறார் நாவல் |
| ஆசிரியர்: | விஷ்ணுபுரம் சரவணன் |
| வெளியீடு: |
சால்ட் பதிப்பகம்
|
| விலை: | ₹.160 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 வாலண்டினா பிரான்சிஸ், |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
