விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதி சீர் வாசகர் வட்டம் வெளியீட்ட "கயிறு" (Kayiru) தமிழ் புத்தகம் (Tamil Book) - நூல் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” – நூல் அறிமுகம்

கயிறு நூலிலிருந்து…

தமிழ் சிறார் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல இலக்கியங்களைத் தந்துள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார் . ஊடகத்துறையில் பணியாற்றும் இவர் அடுத்த தலைமுறையினருக்கும் படைப்பாற்றலை கடத்தும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று சிறார் இலக்கியப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

பார்க்கும்போது அளவிலும் , பக்கங்களிலும் , மிக மிக எடையிலும் எளிதாக இருக்கும் இந்த புத்தகம் சொல்லும் கருத்துக்கள் மட்டும் சமுதாயத்தில் மிக கனமானதாக இருக்கிறது.

ஒரு பெரிய வன்மத்தை சிறிய கதை கொண்டு சமூகத்தில் வீசப்படும் நச்சு விதைகளை எதிர்க்கும் மருந்தாக இப்புத்தகத்தை பயன்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். விதைத்த விதை எடுக்கப் போவது நச்சா இல்லை மருந்தா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

மொத்தமா இந்த கதையில நாலே கேரக்டர் தான் . அதுல ரெண்டு கேரக்டர் மட்டும்தான் இங்கே பேசுறாங்க. திங்கட்கிழமை ஆரம்பிக்கிற இந்த கதை வெள்ளிக்கிழமையோடு முடியுது . சோ கதை நிகழ்வும் ஒரு வாரம் தான். ஆனால் சொல்லப்பட்டு இருக்கிற கருத்து பல வருடங்களுக்கு உரியது . இன்னும் பல வருடங்களுக்கு தேவையானது.

கயிற்றைக் கொண்டு இணைப்பையும் ஏற்படுத்தலாம் . பிரிவையும் உண்டாக்கலாம் என்பதை உணர்த்தும் இந்த கதை நிச்சயமாக மாணவர்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

செழியனின் அம்மா கதாபாத்திரம் செதுக்கப்பட்ட விதம் அருமை. ஒரு பெயரைக் கொண்டு நீ இந்த அடையாளம் உள்ளவன் என்று சொல்லும் பழக்கம் எத்தனை வன்மம் உடையதோ… அதே அளவுக்கு கையில் கட்டி இருக்கும் ஒரு அக்சஸ்ஸரிசை வைத்து மனிதனின் பின்புலத்தை நிர்ணயிப்பதும் தவறு.

கண்ணாடித் துண்டுகளால் பூசப்பட்ட மாஞ்சா கயிறு கூட மனிதர்களின் கழுத்தில் வெட்டுவதற்கு தயவு காட்டும். ஆனால் இங்கு பல வண்ணங்களில் மனிதர்களால் கட்டிக் கொள்ளப்படும் கயிறுகள் சமூகநீதிக் கனவுகளை தவிடு பொடியாக்கும்.

புத்தகத்தின் அட்டைப்படம் அட்டகாசம் . இதயம் என்னும் உலகத்தில் சிறுவர்கள் இணைந்து பல வண்ண கயிறு பந்து உருண்டையை பூமியை விட்டு உருட்டி வீசி எரிகிறார்கள் . இது ஒன்று போதும் இந்த கதையை விவரிக்க.

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தில் கூட கயிறு சம்பந்தமான ஒரு ரணகளக் காட்சி வரும். மனிதனின் உடம்பினில் ஓடும் குருதி வெம்மை கொண்டு வெறிபிடித்து ஆடுகையில் , அவர்களை குளிர வைக்க தேவைப்படும் ஒரே பொருள் இப்புவியில் உள்ளது என்றால் அது நீர் மட்டுமே . அந்த காட்சியில் எப்படி இந்த சூழ்நிலையை கையாளப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கையில்.. சத்துணவு கூட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க் குழாயை எடுத்து மாணவர்கள் மீது அடித்துக் குருதி வெம்மையை குளிர்விப்பார் ராட்சசி எனும் நடிகை.

இதை வாசித்ததும் அந்த உணர்வு தான் எனக்கும் வந்தது. கண்டிப்பாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்.

 நூலின் தகவல்கள்: 

புத்தகத்தின் பெயர்: கயிறு
ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன்
பதிப்பகம் : சீர் வாசகர் வட்டம்
விலை : 5
பக்கங்கள் : 16

நூல் அறிமுகம் எழுதியவர்:

✍️பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *